Thursday 30 August 2012

தூக்கு தண்டனை தேவையா?

முகம்மது அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து விட்டது. இப்பொழுது தூக்கு தண்டனை தேவையா? என்ற விவாதம் மீண்டும் தொடரும்.

கசாபின் விஷயத்தில் இது அநியாயமாகப்படும்.  பாம்பே வி.டீ ஸ்டேஷனில் எல்லோரையும், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என்று பாராமல் வெறியாட்டம் ஆடி குருவி சுடுவது போல் சுட்டும் கையெறி குண்டை வீசி கொலை செய்தவனை என்ன செய்வது?ஏறக்குறைய வீ.டீ ஸ்டேஷனை கசாப்பு கடை ஆக்கியவன்.

இந்தியாவில் இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை 1995 ல் அலிபாகை சேர்ந்த சுதாகர் ஜோஷி, புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். மூன்று கொலைகள் செய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்ற "Hangmen" தூக்கிலிடுபவர் என்று ஒருவர் இருப்பார். தற்பொழுது அது போன்று ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு  எழுபத்தியிரண்டு வயதாகிறது. அவரை இப்பொழுது கேட்டபொழுது நான் இது வரை செய்ததற்கே வருத்தப்படுகிறேன், ஆதலால் நான் தூக்கிலிட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.

கசாபின்  தூக்கு தண்டனையை நிறைவேற்ற மகாராஷ்டிர காவல்துறை ஒரு காவலர் மூலமாகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது.

ஒய்வு பெற்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர் வாதம் மீண்டும் சந்தைக்கு வருகிறது. இந்த உலகில் ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. பின்னர் கசாபுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் என்ன?

மிகவும் விவாதத்திற்கு உரிய ஒரு விஷயம் இது. தற்போழுது கசாபின் மனு ஜனாதிபதியிடம் உள்ளது, என்ன நடக்கப் போகிறது என்பது கேள்விக்குறி.


நம் மனதில் அன்று மும்பையில் நடந்த அந்த கொடூரம் மறக்க முடியாதது. அதை செய்தவர் யாராக இருந்தாலும் கொடூரமாக  தண்டிக்கப்பட வேண்டியவரே.


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

பல உயிர்களை மனிதாபிமானம் அற்றுப் பறிப்பவன்
உயிரை பறிப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்கின்றது அவனிடம் இருந்து பிற உயிகளைக் காப்பாற்ற வேண்டுமே !...என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு வகையில் சூர சம்காரம்தான் .

சார்வாகன் said...

வணக்கம் சகோ கும்மாச்சி,

நான் இது பற்றி பதிவு எழுதலாமா என யோசித்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் எழுதி விட்டீர்கள்.

நாம் எப்போதும் மரண தண்டனை எதிர்ப்பாளரே. மரணத்தை விட வாழ்வே கடினம். கசாப்பிற்கு 100 வருட கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்.சிறையிலேயே வாழ்ந்து விட்டுப் போகட்டும்.

இது பலருக்கு தவறாக தெரியலாம். உயிரைக் கொடுக்க முடியாத நாம் உயிரை எடுக்க கூடாது. அவனால் சமூகத்திற்கு பாதிப்பு என்பதால் தனிமைப்படுத்துகிறோம்.

மரண தன்டனைக்கு எதிராக நம் குரல் கசாப்பின் செயல்,அல்லது அவன் மதம் நாடு சார்ந்து மாற்ற முடியாது.கொள்கைகளை மாற்றினால் நமக்கும் மதவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

உங்களின் மாற்று கருத்துககளை மதிக்கிறேன்.ஆனால் ஏற்க முடியாது!!

"மரண தண்டனை உலகில் இருக்க கூடாது"

நன்றி

கும்மாச்சி said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சார்வாகன்உங்களது கருத்துதான் பெரும்பாலோனோர் கருத்தும், ஆனால் கசாபை போன்ற மிருகங்களை என்ன செய்வது?

Unknown said...

இவனுக்கெல்லாம் இன்னும் பல ஆண்டுகள் பிரியாணி கொடுக்க இருக்கும் மக்களுக்கு என் அனுதாபங்கள்!

கும்மாச்சி said...

மாப்ள பிரியாணி கொடுக்குறான்களா இல்லை தொங்க விடப்போறாங்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.