Thursday 23 August 2012

கூடங்குளம் நிலைமையும் மின்சாரத்தட்டுப்படும்


இத்தனை போராட்டங்களுக்கு நடுவிலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் கண்டிப்புக்கு பின்னும் அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வரும் செப்டம்பர் மாதத்தில் மின் உற்பத்தியை தொடங்கும் என்று பேட்டியளிக்கிறார். மேலும் இதை அதிகார பூர்வமாக பாராளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்கள்.
நெதர்லாந்தின் காற்றாலைகள்

எப்படியும் இங்கு மின்சார உற்பத்தி தொடங்கப்போவது திண்ணம். இன்றைய நாட்டின் அதிகரிக்கும் மின்சார தேவைக்கு அணுமின் நிலையங்கள் தான் நமக்கு வழி. மாற்று வழி நமது நாட்டின் எரிபொருள் நிலமைக்கோ அல்லது பொருளாதார நிலமைக்கோ ஏற்றதல்ல. இது தான் பெரும்பாலோனோர் கருத்து. ஆனால் இடிந்தகரை மக்களின் சந்தேகத்திற்கும், பயத்திற்கும் விளக்கம்தர மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் தயக்கம். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு நிலைமையை மோசமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையை சாதகமாக்கி சில அரசியல் தலைவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தற்பொழுது எதுவும் இல்லாத காரணத்தால் கூடங்குளமா இல்லை முல்லைபெரியாரா என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
கடல் நடுவே காற்றாலைகள்

காற்றாலை மின்சாரம் ஒரு நல்ல தீர்வே ஆனால் அது நம்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஓரளவே  ஈடு செய்யமுடியும். ஹாலந்து நாட்டில் நாட்டின் மொத்த தேவையில் அறுபது விழுக்காடு அவை தீர்த்து  விடுகின்றன. இருந்தாலும் அவர்கள் அணுமின்நிலையம் வைத்திருக்கிறார்கள். அவற்றின் தற்போதைய உற்பத்தி நாட்டின் மொத்த தேவையில் நாலு விழுக்காடு மட்டுமே. மற்றவை அனல் மின்நிலையங்கள் ஈடு செய்கின்றன. அவர்களிடம் எரிவாயு வளம் இருப்பதால் எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை. இருந்தாலும் கடலில் காற்றாலை வைத்து கிட்டதட்ட ஆறாயிரம் மெகவாட் வரை உற்பத்திய செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். அவைகளை 2020 ல் தொடங்க திட்டமிட்டு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் இன்னும்  இரு அணு உலைகள் 3000 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தயாராகிக் கொண்டிருக்கின்றன.
பழைய மற்றும்புதிய காற்றாலைகள்

பிரான்சின் மின்சாரத்தேவையில் என்பது விழுக்காடு அணு மின் உற்பத்தியே பூர்த்தி செய்கின்றன.

நம் நாட்டில் மட்டும் ஏன் இத்தனை கூச்சல் குழப்பம், போராட்டம் என்று யோசித்தால் அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கம் புரியும். இவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை.  ஐந்து வருடத்தில் அகப்பட்டதை சுருட்டுவதில்தான் குறி.

கூடங்குளம் என்னவாகும்? இடிந்தகரை மக்களின் கேள்விகளுக்கும் போராட்டங்களுக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் நாட்டை ஆள்பவர்கள்.

காலம் பதில் சொல்லும்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Rasan said...

விடை காண கேள்விகள்.
அருமையான தகவல்கள். படங்கள் அருமை. அறிந்து கொண்டேன். தொடருங்கள்.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ராசன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.