Tuesday 28 August 2012

கலக்கல் காக்டெயில்-83


காசும், கரியும்

நான்கு  நாட்களாக நாட்களாக தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வெறுத்து போயிருப்பார்கள். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேற்று மதியம் ஒரு சில அமைச்சர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. நடுவில் சிங்கு கூட ஏதோ விளக்கம் கொடுத்தார். ஒரு மண்ணும் புரியவில்லை. பிறகு வெளியே வந்து பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அதுவும் விளங்கவில்லை.

ப. சிதம்பரம் வேறு இன்னும் நிலக்கரியே வெட்டவில்லை அப்புறம் எங்கே நஷ்டம் என்கிறாறு. 

“மண்ணு மோகனு சிங்கு” இந்த மாதிரி அமைச்சர்கள் உங்களிடம் இருக்கும்வரை உங்களை யாராலும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது.

சும்மா ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க, அதுக்குள்ளே இவனுக அடங்கிடுவாணுக.

நத்தமும் நாறும் அறிக்கையும்

அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு அறவே ஒழிக்கப்படும் என்று உதார் விட்டாய்ங்க. ஆனால் நடந்தது இன்னும் அதிகநேர மின்வெட்டே. கோவையில் சிறுதொழில்கள்  இயங்க முடியா நிலைமை. திருப்பூரிலே இன்னும் மோசம், அவனவன் மில்லை இழுத்து மூடிவிட்டு ஓடும் நிலைமை. இந்த வருட பருவ மழை இருபத்திமூன்று விழுக்காடு குறைவு என்று சொல்லுகிறார்கள். ஆதலால் நிலைமை இன்னும் மோசமாகும்.

அம்மா இனி அறிக்கைவிட்டால் மதிப்பிருக்காது என்று இப்பொழுதெல்லாம் நத்தம் தினமும் அறிக்கை விடுகிறார். அறிக்கை வைத்து மக்கள் என்ன செய்வார்கள்?

வலைப்பதிவர் திருவிழா

சென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவை இணையத்தில் கண்டேன். சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்தில் மிகவும் அருமையாக நடத்திக்காட்டினார்கள்.

அவற்றை பற்றிய செய்திகள் தினமும் திரட்டிகளில் வந்துகொண்டிருக்கின்றன.

இதன் பின்னணியில் உள்ள அணைவருக்கும் எத்துனை முறை நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தாலும் போறாது.

நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் எப்பொழுது வருமென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ரசித்த கவிதை(கள்) 

இந்த மாலையில் வீடு திரும்பும் நீ
உன் வீட்டிற்கான பாதை துவங்கும்
புள்ளியில்
உன் தலையிலிருந்து மலர்களை
விடுவிக்க துவங்குகிறாய்

------------------மனுஷ்யபுத்திரன்   

நான் இல்லாது போன பிறகும்
ஒழுங்காகத் தேடிப்பாருங்கள்
இங்குதான் எங்காவது இருப்பேன்

எவ்வளவு பெரியது
பூமி
வானம்
அண்டம்
பேரண்டம்...?

--------அழகுநிலா   


இந்த வார ஜொள்ளு 



28/08/2012

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் அமர்க்களம்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சௌந்தர்.

படைப்பாளி said...

காக்டெயில் செம கிக் நண்பா..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குங்க... நன்றி...

(TM 3)

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

JR Benedict II said...

கலக்கல்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாரி.

Unknown said...

அய்யா...படத்தை எங்கதான் புடிக்கிறீங்க....?
ம்ம்ம்ம்ம்
:)

கும்மாச்சி said...

சுரேஸ்குமார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

முத்தரசு said...

ம்ம்....நல்லாவே படம் காட்டுறீங்களே

Unknown said...

மாங்கா மனிதர்கள் நாம்னு நெனைக்கிறாங்கய்யா..வேற என்ன சொல்ல!

கும்மாச்சி said...

மாப்ள வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

\\ம்ம்....நல்லாவே படம் காட்டுறீங்களே //

மனசாட்சி அது சரி, இன்னும்கூட நல்லா படம் காட்டலாம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.