Saturday 23 February 2013

இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்- தெரிந்துகொள்வோம்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று இந்தியாவில் கடை பிடிக்கப்படும் பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகள் இவரால் வடிவமைக்கப்பட்டதே.

அந்த நிதியமைச்சர் திரு. சண்முகம் செட்டி. சண்முகம் செட்டி அவர்கள் 1892ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் கோயம்பத்தூரில் பிறந்தார். தன பள்ளிப்படிப்பை கோயம்பத்தூரில் பயின்றார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும், பின்னர் சட்ட படிப்பை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார். ஆங்கிலேய அரசாங்கத்தில் மத்திய சட்ட சபையின் உறுப்பினராக இருந்தார். சிலகாலம் கொச்சின் சமஸ்தானத்தின் ஆளுநராகவும் இருந்தார்.

அரசியலில் ஸ்வராஜ் கட்சியில்உறுப்பினராக இருந்தார். பின்னர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு பிரதமர் நேரு அவர்களால் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பெருமை தமிழரான சண்முகம் செட்டி அவர்களையே சாரும்.

இவர் தமிசைசங்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். செட்டி அவர்களின் தந்தையாரும், தாத்தாவும் கோயம்பத்தூரில் நூற்பு ஆலைகள் வைத்திருந்தனர்.

இவர் நிதியமைச்சராக இருந்த பொழுது கோயம்பத்தூர் மில் தொழிலுக்கு பாரபட்சம் காட்டினார்  என்ற குற்றசாட்டு எழுந்ததனால் தன் பதவியை 1949ல் துறந்தார்.

இருந்தாலும் தன்அரசியல் வாழ்க்கையை கைவிடவில்லை. 1952ல் சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார்.

சண்முகம் செட்டி அவர்கள் 1953ம் ஆண்டு  மே மாதம் 5ம் மாரடைப்பால் காலமானார்.



Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அறியாத அரிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.