Wednesday, 2 October 2013

கலக்கல் காக்டெயில்-124

இது முடிவல்ல ஆரம்பம் 

லாலு பிரசாத் யாதவ் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு முன் செய்த ஊழலின் அளவு 900 கோடியாம். அடேங்கப்பா...........இதற்கு கூட்டாக மேலும் நாற்பத்தைந்து பேர். முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உட்பட அத்துனை பேரையும் ராஞ்சி நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்து தண்டனையை நாளை மறுநாள் வழங்கவிருக்கிறது.

மாட்டுத்தீவனம் வாங்குவதில் போலி ஆவணங்களைகாட்டி ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள். இது பொய் வழக்கா இல்லை உண்மையிலே ஊழல் நடந்ததை மறுப்பதற்கில்லையா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்கே  தெரியும் உண்மை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கையா? இல்லை ஆந்திர ஜகன்மோகன் ரெட்டி வழக்கு போலா?

உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால் வரவேற்போம். மேலும் இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, அலைக்கற்றை ஊழல், இன்னும் நிலக்கரி, ரயில்கேட் என்ற எண்ணற்ற ஊழல் வழக்குகளிலும் இதே போன்ற நடவடிக்கைகளை எதிர் பார்ப்போம்.

எல்லாவற்றிற்கும் இந்த மாட்டுத்தீவனம் ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.

ஆட்டத்திற்கு வரும் வை.கோ.

போன சட்டசபை தேர்தலில் அம்மாவால் கடைசி நிமிடத்தில் கைவிடப்பட்ட வை.கோ வின் கட்சி தேர்தலில் போட்டியிடாமலே போனது. ஆனால் இந்த முறை வை.கோ ஒரு முடிவோடு இருக்கிறார்.

தன்னுடைய கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தங்கள் கட்சியின் வியூகத்தை ஓரளவிற்கு கோடிகாட்டியுள்ளார். அநேகமாக பா.ஜ.க வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க தயாராவது போல் உள்ளது. அம்மா தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டதாலும், தி,மு.க வுடன் இனி கூட்டு இல்லை என்று ஈழ இறுதிப்போருக்கு பின்னர் எடுத்த நிலைப்பாட்டாலும் மேற்படி முடிவை நோக்கி அவர் நகர்வது தெரிகிறது.

பா.ஜ.கவும், ம.தி.மு.க பின்னர் தே.மு.தி.கவும் இணைந்தால் நாற்பதும் நமதே கனவில் இடி விழ வாய்ப்புள்ளது.

இனி தேர்தல் விளையாட்டுக்கள் ஆரம்பமாகும், வழக்கம் போல மேட்ச் பிக்சிங், பிட்சில் அடிதடி, என்று களைகட்டும்.

ரசித்த கவிதை

எங்களைத் தடை செய்யாதீர்..! 

எங்களை..!
உங்கள் முகம் பார்த்து வீசுகையில்
கொள்ளையர்களை எச்சரிக்கைச் செய்கிறோம்
விசையோடு வீசுவதால் - எங்களால்
திசை மாற முடியவில்லை
திசைமாற்றம் எமக்கிருந்திருந்தால்
வீசும் கைகளை நாசம் செய்திருப்போம்
எங்களால் உங்களுக்குண்டான காயம் போல்
ஆறா காயம் நாங்களும் கொள்கிறோம்
உங்கள் அழகு முகங்களைப் பழுதாக்கி
உணர்வுகளைச் சருகாக்க
எங்களுக்கு மனமில்லை
தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
தண்டனை முறைக்கு
அமிலத்திற்கு அமிலம்
நான் தயாராயிருக்கிறேன்..!

தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!

-------------------செ.பா. சிவராசன்

ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காக்டெயிலுக்குகேற்ற கவிதையும் கலக்கல்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

s suresh said...

வழக்கம் போல கலக்கல்! நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.