Tuesday 8 October 2013

கலக்கல் காக்டெயில்-125

வேண்டாமே பிரிவினை 

ஆந்திராவை இரண்டாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்கும் மேலாக இருக்கும் ஒன்று. அதனை சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு வருடம் ஆட்சி செய்த எந்த கட்சிகளுமே செய்யவில்லை. ஆனால் இப்பொழுது மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தனது சுயலாபத்திற்காக இந்த காரியத்தை செய்யத் துணிந்திருக்கிறது.

அதை தொடர்ந்து ஆந்திரம் இப்பொழுது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே உத்திரப்பிரதேசம், பீஹார், மத்தியப்பிரதேசம் என்று மூன்று மாநிலங்களை பி.ஜே.பி. பிரித்துப் போட்டார்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இனி ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோல் கூறுபோட அரசியல் ஆதாயங்களுக்காக குரல் எழும்.

இந்தியாவை நன்றாக கூறு போட்டு கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்.  இந்த புழுத்த அரசியல்வாதிகள் கைகளிலிருந்து இந்தியாவிற்கு எப்பொழுதுதான் விடிவுகாலமோ?

முடிகவுடா

அம்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்திற்கு தடை விதித்தாலும், நீதிபதி ஓய்வு விஷயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என தீர்ப்பு வழங்கியதிலிருந்து அம்மா வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கேற்றார் போல் புதியதாக இந்த வழக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட முடிகவுடா கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்திருக்கிறார். தீர்ப்பு  அம்மாவிற்கு சாதகமாக வர வாய்ப்பில்லை.

தேவுடா............லாலுவை தொடர்ந்து மற்றுமொருவரா?

ரசித்த கவிதை 

தமிழா தமிழ் பேசு ....
தமிழ் பேசு தமிழா, நாளொன்றுக்கு, ஒரு வாக்கியமேனும் !!!
நீ பேச அதை உன் சந்ததிகள் கேட்க , உரக்க தமிழ் பேசு தமிழா !!!
தாய்க்கும் மேலான தாய் தமிழை நீ பேசு தமிழா !!!
தமிழை தயங்கி பேசும் தமிழனாய் நீ இல்லாமல் தமிழ் பேசு தமிழா !!!
சங்கம் வளர்த்த தமிழை நீ சாகடிக்காமல் பேசு தமிழா !!!
மொழி என்ற சொல்லுக்கு பொருள் தரும் தமிழை பிழை இல்லாமல் நீ பேசு தமிழா !!!
வந்தவரெல்லாம் பார்த்து வியந்த விந்தை தமிழை நீ பேசு தமிழா !!!
தரணியில் தமிழ் வாழ தமிழை நீ பேசு தமிழா !!!
அமுதினும் இனிய தமிழை ஆங்கிலம் தின்னாமல் தமிழை நீ பேசு தமிழா !!!

இளம்கவி அரிமா



ஜொள்ளு 







Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விடிவு காலம் வரும்... நம்புவோம்...

கவிதை நன்று...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

இந்தியாவை கூறு போடுவது எப்பவும் நல்லதில்லை.
>>
தமிழ் பெருமையை கூறும் கவிதை செம.
>>
அம்மா மாமியார் வீட்டுக்கு போக போறாங்களா!?

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Senthil said...

Yr writing style is nice!
Senthil, Doha

KAYALVIZHI said...

எனக்கு ஒன்று புரியவில்லை.இரண்டாக சொல்லி யார்?இப்போது வேண்டாமென்பது யார்?

கும்மாச்சி said...

பல்லவன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அரசியல்வாதிகள் அவர்கள் லாபத்திற்கு அப்பாவிகளை பலிகடா ஆக்குகிறார்கள்! அம்மாவுக்கும் ஆப்பு வந்திருச்சா! அதுசரி! கவிதை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

Manimaran said...

//காங்கிரஸ் தனது சுயலாபத்திற்காக இந்த காரியத்தை செய்யத் துணிந்திருக்கிறது.// இதுதான் நிதர்சனம் ... காங்கிரஸ் மட்டுமல்ல தெலுங்கானா மக்களின் சுயலாபமும் . ஹைதராபாத் இல்லாத தெலுங்கான வேண்டுமா எனக்கேட்டுபார்த்தால் என்ன சொல்வரர்கள் ...?

கும்மாச்சி said...

மணிமாறன் வருகைக்கு நன்றி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.