Friday 18 October 2013

அம்மா உணகவகம், அம்மா நீரகம், அம்மா குடிப்பகம்........அல்லாம் அம்மாதான்

இன்னா கபாலி எப்புடி கீறே

தோடா கொமாரு...........நல்லா கீறேன்பா, நீ எப்போ நெல்லோருலேந்து வந்த.

இன்னா கபாலி வேலைக்கி போவல.

போடா டோமறு ஏண்டா நாங்க இன்னா குடாக்கா வேலைக்கி போவ.

ஐயே இன்னா கபாலி அப்படிசொல்லிபுட்டே, வேலைக்கி போவாம எப்படி குஜாலா கீறே.

ஐயே தோடா கேக்குறான் பாரு கேனப்பு.........கணுக்கா..

அடப்போ கபாலி சொம்மா டபாய்க்காத...

அம்மா புண்ணியவதி ஆச்சியில நாங்க ஏண்டா வேலைக்கி போவனும்...

பின்னிய...........

காலில எயுந்தமா கட எப்போ தொறக்கும்னு பாத்தமான்னு இருக்கணும்.........

அப்பால

அப்பால இன்னாடா அப்பால ரெண்டு கட்டிங் உடுனும்..............சுர்ருன்னு ஏறோ சொல்ல தோ அதோ காப்ரேசன் கக்கூசாண்ட கீது பாரு உணவகம் அங்கன போனா ரெண்டு இட்லியும் சாம்பாரும் ரெண்டு ரூவைக்கி கொடுப்பாய்ங்க அதா உள்ள தள்நா ஒரு மாதிரி கேரோவா இருக்கும், அப்படியே பஸ் ஸ்டான்டாண்ட  போயி மட்டையாயிடனும்.

அயே..........

ஐயே இன்னடா ஐயே தோ நேத்திக்கி பஸ் ஸ்டாண்ட வுயுந்தேன் ஒரு பொம்பள வந்து யோவ் இங்கே படுக்காதேண்ணுது................. எனுக்கு ஒரு மாதிரி சுர்ருன்னு உச்சில வந்திச்சு பாரு, ஏய் இன்னாடின்னு  லிங்கிய தூக்கி மேலே கட்டினேன் பாரு, காலிடுக்குல வால உட்டுக்கினு ஓடுற கார்பரேசன் நாய் மாதிரி விர்ருனு அடுத்த பஸ் ஸ்டாண்டுக்கு பூடிச்சு.

இன்னா கவாலி பேஜார் பண்ற.........

சரி அத்தே வுடு, நம்ம மேட்டருக்கு வருவோம்............கொஞ்சம் மப்பு இறங்க சொல்ல திரியும் கடையாண்ட வந்து ரெண்டு கட்டிங் வுட்டுக்கினா, சும்மா சுர்ருன்னு ஏறும்.................திரியும் உணவகத்தில சாம்பார் சோறு கொயப்ப்பி அடிச்சா..............மதியம் சூர்யன் .............த்து மேல அடிக்க சொல்ல த  பஸ் ஓடுது பாரு அங்கன பிளாட்பாம் ஆண்ட படுத்துக்குவேன்..........திரியும் எயுந்து கடையாண்ட வந்தா சும்மா கூட்டம் நிக்கும் பாரு, ஆபீசு செனம் அல்லாம் வந்து கீவுல நிப்பானுங்க, திரியும் ரெண்டு கட்டிங் உட்டா வூடு போக கரீட்டா இருக்கும்..........

அப்பால...

அப்பால இன்னா அப்பால கூலி வேல செஞ்சிட்டு அஞ்சல  வந்திருக்கும்.......நல்ல மீன் கொயம்பு சோத்துல  போட்டு கொயப்பி அடிச்சுட்டு மட்டை ஆய்டுவேன்.

ஐயே துட்டுக்கு இன்னா பண்ணுவே..........

தோடா அஞ்சலைய கயுத்தமட்டையிலே ரெண்டு வுட்டா குடுக்குது. இல்லீனா அம்மா கொடுத்த சாமான வித்தா போச்சு. ஏற்கனவே பேணு, கிரைண்டாறேலாம் வித்துட்டேன்.  இன்னு ஒன்னு ரண்டு பாக்கி கீது. எலிக்சன் வருது, கச்சில பணம் கொடுப்பாய்ங்க. பணத்துக்கு இன்னா பஞ்சம்.

அப்பால

அப்பால நாலு மாசம் முன்ன அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினேன்.

இன்னா கபாலி உனுக்கும் அஞ்சலைக்கும்தான் அஞ்சு வர்ஷம் முன்னிய கண்ணாலம்  ஆச்சே.

அது நெசம், இது இலவச திருமணம், துட்டு, கட்லு, தாலி, துணியெல்லாம் கொடுத்தாங்க. கச்சி ஆளுக்கு கமிசன் போவ, நமக்கு நல்லா கெடச்சிது.

சரி இந்த ஆச்சி போச்சினா இன்னா பண்ணுவே..........

இவன் என்னடா விசயம் தெரியாதவனா கீறான்...........

இன்னா விசயம்.............

அம்மா போனா இன்னா ஐயா வருவாரு, அவரு வந்தா மவராசன் லெக் பீசு, குஸ்கா, போட்டி, ஆட்டுக்கால் பாயான்னு எலவசமா குடுப்பாரு........எலெக்சன் வேறே வருது பாரு...............அப்பால எவனாவது நடிகரு டாகுடரு, டோமருன்னு  இலவசம்னு கொடுப்பான் தையல் மெசினு அது இதுன்னு கீது, கொமாரு நீ இன்னா பண்றே.......

அடப் போ கபாலி, நெல்லூர்ல தீயா வேலை செஞ்சு, நாயா திரிஞ்சுகினு, பேயா அலைஞ்சினு கீறேன்...........பாடுங்க இதெல்லாம் அங்கன குடுக்க மாட்டேங்குறானுங்க...........

அப்ப அல்லாத்தையும் இயுத்து மூடிட்டு இங்க வந்திடு, குஜாலா இருக்கலாம்.  




Follow kummachi on Twitter

Post Comment

32 comments:

mage said...

epdi yellam nadakudhabha, nammaluku visayame therilapa

கும்மாச்சி said...

மகே வருகைக்கு நன்றி.

ravisrad said...

Beautiful nadakkkiradhu Kan munnadi pakkara madhiri irundhadu...

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படித் தான் இங்கும் பலரின் நிலைமை (நினைப்பு) உள்ளதும் உண்மை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரவி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Anonymous said...

வணக்கம்
பதிவு நன்று வாழ்த்துக்கள்....தொடருகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சக்தி கல்வி மையம் said...

இன்றைய உண்மையின் வெளிச்சம் இந்த பதிவு..

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி.

காமக்கிழத்தன் said...

கும்மாச்சி! உன் புத்தி ரொம்பக் கூர்பா!!

மெட்றாஸ் பாஷையில் பூந்து விளையாடிட்டே!

அம்மாவோட அய்யாவையும் பின்னிப் பெடல் எடுத்துட்டே!! கும்மு கும்முனு கும்மிட்டே!!!

அசத்தல்! அட்டகாசம்!! கலக்கல்!!! சூப்பர்!!!!

இதுக்கும் மேல வர்ணிக்கத் தமிழில் வார்த்தைகள் இல்ல கண்ணா.

[இது நிஜமான புகழ்ச்சி கும்மாச்சி]

கும்மாச்சி said...

காமக்கிழத்தன் வருகைக்கு நன்றி.

புகழ்ச்சிக்கு நன்றி. அது என்ன நிஜமான புகழ்ச்சி?

Unknown said...

வட்டார வழக்கில் சமூக அவலங்களுக்கு சரியான சாட்டையடி. இந்த படைப்பு ஆட்சியாளர்களின் கண்களிலும் பட வேண்டும். அப்போதுதான் மாற்றுத் திட்டங்களைத் தீட்டுவார்கள். இலவசங்களை ஒழிப்பார்கள். நாட்டுக்குத் தேவை இலவசங்கள் அல்ல; தரமான பொருட்களை ஒவ்வொருவரும் சொந்தமாக வாங்கிக் கொள்ளும் பொருளாதார ஆற்றலை.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி புதின் பின்பம்!!!!!!!!!

ராஜி said...

வாழ்க நம் அரசும், அவர்கள் தரும் இலவசமும்!!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

ஜெட்லி... said...

:)

Unknown said...

நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நல்லாத்தான் கேட்டு இருக்கீங்க .... இட்லி ஒரு ரூபாய் .குடி தண்ணி பத்து ரூபாய் ..இதையும் கேளுங்க கும்மாச்சி !

Unknown said...

தெருவுலே திரியிற சொறி நாய்க்கு கூட இந்த புத்தி இருக்காது. இப்படியா ஒரு மானமுள்ள, ரோசமுள்ள, மண் தோன்றி முன்.....(என்னமோ சொல்லுவாங்களே) அந்த தமிழனை பத்தியா இப்படி சொல்லிடீங்க? என்னே ஒரு இலக்கிய, கம்பனின் காவிய தமிழில் பேசுரான் தமிழன்? அத்தை பாராட்டாம...என்னமோ போங்கப்பா!

Unknown said...

நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நல்லாத்தான் கேட்டு இருக்கீங்க .... இட்லி ஒரு ரூபாய் .குடி தண்ணி பத்து ரூபாய் ..இதையும் கேளுங்க கும்மாச்சி !
த.ம 7

kathalan said...

தமிழகத்தின் தற்போதைய நிலையை
காமெடியா கலாச்சிட்டீங்க....

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

கும்மு கும்முன்னு கும்முகிற குமாச்சிக்கு தமிழ்மணம் 8

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

மகேந்திரன் said...

அம்மான்னா சும்மாவா பின்ன...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

SUPER.SUPER..SUPER

கும்மாச்சி said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

கார்த்திகேயன் வருகைக்கு நன்றி.

Unknown said...

சொக்காகீதுப, இன்னாபா இது தெரியாம இத்தன நாளு வேலைக்கு போய்ட்டு இருக்கேன்.

Unknown said...

சொக்காகீதுப, இன்னாபா இது தெரியாம இத்தன நாளு வேலைக்கு போய்ட்டு இருக்கேன்.

”தளிர் சுரேஷ்” said...

நிதர்சனம்! அருமையான படைப்பு! நன்றி!

Anonymous said...

Hey...is it wat happening really...I can't believe ..where is India going....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.