Wednesday 1 January 2014

கலக்கல் காக்டெயில் -133

2014

ஒரு வழியாக 2013ம் ஆண்டு முடிந்து 2014 தொடங்கிவிட்டது. போன ஆண்டை எல்லோரும் பின்பக்கமாக பார்த்து நடந்தவை, சிறந்த பத்து, பிறந்த பத்து, மொக்கை படங்கள், என்று இணையத்தில் பிரித்து மேய்ந்து விட்டார்கள். இனி வேறு மாதிரி தலைப்புகளை தேடவேண்டும்.

இனி இந்த ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக அமைய வேண்டுவோம்.

மலேசியா 

வேலை நிமித்தமாக மலேசியா சென்றபொழுது அங்கே வாழும் தமிழர்களின் நிலைமை அறிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் உள்ள அமைச்சர்களில் நிறைய தமிழர்கள் உள்ளனர். சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியன், இணை கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ கமலநாதன் என்று நிறைய தமிழ் அமைச்சர்கள் நன்றாகவே பணிபுரிவதாக சொல்கிறார்கள்.

உலகத்திலேயே மதக்கலவரம் இல்லாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது பெருமையளிக்கிறது. மசூதியும், மாரியம்மன் கோவிலும் அருகருகே உள்ளது. நம்நாட்டில் மதச்சார்பின்மை என்று பேசிக்கொண்டு வருடா வருடம் விநாயக சதுர்த்தியன்றும், மிலாடி நபியன்றும் அடித்துக்கொள்கிறோம்.

கிளம்பிட்டாங்கையா

இங்கே போகமாட்டேன், அங்கே போகமாட்டேன், கடவுளோட கூட்டணி என்று பேசிக்கொண்டிருந்த கேப்டன் இப்பொழுது ஐயாவுடன் பேரம் பேசுவதாக செய்திகள் வருகின்றன. பத்தொன்பது சீட்டுகள் கேட்பதாகவும், ஐய்யா இல்லை அங்கே ஆறு, இங்கே ஒன்று என்று துண்டு போட்டு விரல் பிடிப்பதாக சொல்கிறார்கள்.

கலீனரும் நான் தனி, நீ தனி என்றவர் இப்பொழுது துண்டுக்கடியில் விரல் நீட்டுகிறார்.

சட்டுபுட்டுன்னு முடிங்கப்பு, அவனவனுக்கு வேறே வேலை இருக்குதில்ல.

சம்பள உயர்வு 

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அம்மா 7 விழுக்காடு சம்பள உயர்வு அறிவித்திருக்கிறார்கள்.

கரெக்டா சொன்ன நேரத்திற்கு பீசை பிடுங்குவதால் இந்த பரிசு போலும். இனி சரக்கு விலையேற அதிகவாய்ப்புகள் உண்டு.  குடிமகர்களே உஷாரா இருங்க.

ரசித்த கவிதை

இன்புற செய்யும் "எழுத்து " வலைத்தளம்

கவிதை மிக மெல்ல பிறந்து
உயிர் பெற்ற எழில் தமிழ் "எழுத்து "
போதிக்கும் உவமைகள் கூட
உரைசால் தெளிந்த பத்தினியாயிற்று

ஓங்கிற்றது சுழலும் உண்மை
யாதொன்றும் இனி இப்புவியில்
மூன்றில் ஒரு பங்காகிடும்
பொருந்தா பொய் புரட்டுகள்

காற்றும் ஒளிமிகு திங்களும்
தினமும் சகட்டு மேனிக்கு
சந்தனம் உதறிட்டு பவனி தரும்
தோழர் கவிதைகள்

தங்க தமிழ் மண்ணின்
பாரத தேச நெஞ்சமும்
பதற துடிக்க தேவையில்லை
பாதுகாக்கிறோம் பாரத தமிழை

வானக மாண்பினை காணற்கினிய
சின்னஞ்சிறு குடிலில் (வெப்சைட்டில்)
கோடி எழுத்துக்களை கொணர்ந்து
விந்தை வியக்க செய்வோம் ...
- ----------------------------------------------நெல்லை பாரதி


ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மலேசியா - சிறப்பு... பெருமை...

கவிதை மிகவும் அருமை...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

வியக்க வைக்கும் மலேசியா.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

கவிஞரே வருகைக்கு நன்றி.

தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Philosophy Prabhakaran said...

ஒவ்வொரு வாரமும் ஜொள்ளுதான்யா ஏமாத்தாம இருக்கு...

கும்மாச்சி said...

பிரபா வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

ஜொள்ளு \\தலைவா........... எங்கேயிருந்து தான் புடிக்கிறீங்களோ தெரியலையே............ கொல்லுறீங்களே............

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.