Tuesday 28 January 2014

கலக்கல் காக்டெயில்-136

கப்சா விடும் கருத்துக் கணிப்புகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில்  எல்லா ஊடகங்களும் கப்சா கருத்துக் கணிப்புகளை அள்ளிவிடுகின்றன. இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து நண்பர் சகபதிவர் நம்பள்கி ஒரு பதிவு போட்டுள்ளார். அவருடைய கருத்துக்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். அவருடைய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ஊடகங்கள் தங்கள் வெளியிட விரும்பும் கருத்துக்களை மக்கள் கருத்து போல் சொல்வதற்காக கேள்விகளை மிக தந்திரமாக கேட்பார்கள்.

உதாரணத்திற்கு சிறந்த வக்கீல், விவாகரத்து வழக்கில் தன் பிரதிவாதியிடம் ஆம் அல்லது இல்லை என்ற பதில்தான் சொல்லவேண்டும் என்று கூறிவிட்டு

நீ உன் மனைவியை இன்னும் அடிக்கிறாயா? என்று கேட்பார்.

அதுபோலதான் இந்த டுபாகூர் கருத்துக் கணிப்புகளும்.

கேப்டன்  லொகேஷன் தேடுகிறார்

கேப்டனின் மௌசு இப்பொழுது அரசியல் அரங்கில் ஏறியிருக்கிறது. அம்மாவைதவிர அவர் கட்சியுடன் கூட்டு சேர எல்லா கட்சிகளும் அந்த ஆறு விழுக்காடு ஓட்டுக்களுக்கு ஆட்டையைப் போட காத்திருக்கின்றன. அதற்கப்புறம் கேப்டனை கழற்றி விட தயங்க மாட்டார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும் ஆனால் கேப்டனுக்குத் தெரியுமா என்றால் நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று உண்மை "அண்ணியாருக்கு நன்றாகவே தெரியும்" .

கேப்டன் வழக்கம் போல் கூட்டணி பற்றி நிதானமாக!!!!!!!!!!! யோசிக்க ஹாங்காங், பாங்காக் எல்லாம் சென்று லொகேஷன் பார்த்து வந்திருக்கிறார்.

இனி என்ன முடிவெடுப்பார் என்று பார்ப்போம்.

ரசித்த கவிதை

பசி

ந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ்
பூச்சூடி நிற்கும் காமம்
வளையலை எண்ணிச் சரிபார்க்கிறது.
செல்போனில் மணி பார்க்கிறது.
பூச்சரத்தைப் பின்னால் தள்ளி
கால்மாற்றி நின்று தவிக்கிறது.
கக்கத்து வேர்வையில் கரையும் 
பவுடர் வாசனைக்கு வெறிகொள்ளும் காற்று.
அவள் மேனி புணர்ந்து களைத்து
மெள்ளப் பயணப்பட்டு நெருங்கும்
அந்தக் குடிசை வீட்டுத் தொட்டிலில்
உறங்கும் குழந்தை மூத்திரம் பெய்கிறது.
புரண்டு படுக்கும் அதற்கு
பசிக்கத் தொடங்குகிறது
இவள் அலைபேசியிலோ
'நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும்
வாடிக்கையாளர்
வேறோர் இணைப்பில் உள்ளார்’ என்றொரு
பெண் குரல்
நெஞ்சில் நெருப்பள்ளிக்
கொட்டிக்கொண்டிருக்கிறது.
---------------------------------------------கணேசகுமாரன்

ஜொள்ளு 





Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Jayadev Das said...

ஜொள்ளு: ரோஜர் ஃபெடரரோட தங்கச்சியா இருக்குமோ?

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துக் கணிப்புகள் சிறிது ஒத்து வந்தால், எங்களின் கருத்துக் கணிப்புகள் தான் சிறந்தது என்று வேறு விளம்பரம்...!

கணேசகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

அருமை கவிதை

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கருத்துக்கணிப்புகள் எப்போதும் ஏமாற்றும் வேலையைத்தான் செய்கின்றன!

Unknown said...

பச்சை பசேலென்று என்றுஇருக்கும் 'பாவை'க்காயை ரசித்தேன் !
த ம 3

Thulasidharan V Thillaiakathu said...

காப்டன் லொகேஷன் தேடுகிறார்! ரசித்தோம்! எல்லாமே ஜொள்ளு இட்பட!!!!!

//பச்சை பசேலென்று என்றுஇருக்கும் 'பாவை'க்காயை ரசித்தேன் !//- அருமையான டைம்லி விட்- இதுதான் பகவான் ஜி!!!!! ஜி காய் என்பதற்கு பதில் பழம் என்றிருக்கலாமோ!!??

நம்பள்கி said...

நன்றி! லிங்க் கொடுத்தற்கு!
தமிழமணம் +1

நம்பள்கி said...

மக்கள் பின்னூடங்களைப் படித்தேன்! கனி காய் என்று சொல்லியிருக்கிறார்கள் அஎன் தமிழ் புலமையைக் கொஞ்சம் காட்டுவோமே! பழமொழிகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய்; வாய்க்குக் வந்ததை சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள்..

உதரணமா இந்த பழமொழியை எடுத்துக் கொள்வோம்.
1). கனி இருப்ப காய் கவர்ந்த]ற்று.; இந்த பழமொழி தவறு! உங்களுக்கு மாங்காய் பிடிக்குமா? இல்லை மாம்பழமா? பல்லு இல்லாதவன் தான் மாம்பழம் சாப்பிடுவான்; அதுதான் அவனால், முடியும் கூட;
இளவட்டங்கள் விரும்புவது மாங்காய் தான்--அதுவும் கூட மிளகாய்பொடி இருந்தால்..அட்டகாசம்!

2). தானாக கனியாததை தடி கொண்டு கனிய வைப்பதா என்று சிலர் சொல்வார்கள். iஇதுவும் தவறு. இது மாதிரி எல்லாவற்றிக்கும் தேவுடு காக்க முடியாது! உதாரணாம, அந்த காலத்தில் கோழி அடைகாத்து தான் குஞ்சு வரும் இன்றைக்கு poultry incubators வந்தாச்சு;

அதே மாதிரி நாமும், காலத்திற்கு ஏற்ப மாறனும்!
சிலர் தானாக கனியாததை தடி கொண்டு கனிய வைப்பது தவறு என்பார்கள்.
இவர்கள் சொல்வது தான் தவறு!
தானாக கனியாததை தடி கொண்டு கனிய வைப்பதில் ஒரு தவறும் இல்லை; சொல்லப்போனால், சில காய்கள் தடியால் அடித்தால் தான் கனியும்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கும்மாச்சி said...

நம்பள்கி பின்னூட்டத்திற்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் தகவலுக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.