Friday, 17 January 2014

கலக்கல் காக்டெயில்-135

களப்பணி ஆற்றுவோம்.........

அம்மா வழக்கம்போல் கொடநாட்டில் குப்புறபடுத்துக்கொண்டு அரசாங்க வேலைகளையும் தொண்டர்களையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்கே  உபயோகப்படும் எம்.ஜி. ஆர் நாமத்தை!!!!! துணைக்கு அழைத்து தொண்டர்களை களப்பணியாற்றி நாற்பதையும் வெல்ல கடிதம் எழுதுகிறார்.

அம்மா அங்கேயே இருங்கம்மா,  களப்பணியாற்ற இதோ ஓடி வருகிறோம். நாற்பதும் நமக்குதாமா, நீங்கதான் அடுத்த பிரதமர். கொடநாட்டிலிருந்து நேரே டார்ஜிலிங்கிற்கு சென்று ஓய்வெடுக்கலாம்.

கூட்டணிய அறிவிங்கப்பு

தேர்தல் ஆணையம் பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை அறிவிக்கப் போகிறார்களாம். அநேகமாக ஐந்து கட்டமாக தேர்தலை ஏப்ரலில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். முடிவுகள் மே  மாதத்தில் அறிவிக்கப்படலாம்.

தமிழ் நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை ஒன்றும் மும்முரமாக நடப்பதாகத்தெரியவில்லை.கேப்டன் எல்லோரையும் காயவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் போவதற்கு இரண்டு இடங்கள் தான் உள்ளன.

கலைஞரோ இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்கிறார். அதற்கு முன் ஆறு லோக்சபா, ஒரு ராஜ்ய சபா என்றெல்லாம் பேச்சு வார்த்தை நடந்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது ஒன்றும் பேசவில்லை என்கின்றனர்.

ஒரு வேலை மானாட மயிலாடவிற்கு நடுவராக வர கேப்டனிடம்  பேச்சு வார்த்தை நடத்தியிருப்பார்களோ?

சீக்கிரம் பேசி முடிங்கப்பு.............நாங்க பதிவு போடனுமில்ல.

ரசித்த கவிதை

மரத்துப்போன விசும்பல்கள்

காட்டிலிருந்து
வெட்டிக்கொண்டுவரப்பட்ட
மரம் காத்துக்கொண்டிருந்தது
தன் கதை தன் மேலேயே
அவனால் எழுதப்படும் என்று.

வெட்டுப்படுதலும், பின் துளிர்த்தலும்,
மழை வேண்டிக்காத்திருப்பதும்
வேண்டாத இலைகளைக் களைவதும்
அழையா விருந்தாளிகளைத் தாங்கி நிற்பதும்,  
அண்டி வரும் எவருக்கும்,
யாரெனத் தெரியாமல் நிழல் தருவதுமான
மரத்தின் நினைவுகள்
மறக்கடிக்கப்பட்டு
எழுதுபவனின் அவமானங்களும்
மகிழ்வும்,சோகமும்
அப்பிக்கொண்டன
எழுத்தாக அதன் மேல்.

மரமும் அதைக்கொஞ்சம்
வாசிக்க முயன்று
பின் தன்னைத்தானே
தேற்றிக்கொண்டது
ஏதோ ஒரு வகையில்
அவை தன் கதையை
ஒத்திருப்பதாக.
 ------------------------------சின்னப்பயல்

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

Unknown said...

முதலில் லொல்லுவையும் .கடைசியில் ஜொள்ளுவையும் ரசித்தேன் !
த.ம 1

ராஜி said...

ஓயாத கழகப்பணியும், முதல்வர் பதவியாலும் ஓய்ந்திருக்கும் அம்மாவை டார்ஜிலிங் அனுப்ப என்னாலான உதவி என் ஒரு ஓட்டை போடுவதுதான்! போட்டுடுறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை வரிகள் வித்தியாசமான சிந்தனை...

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி. உங்கள் வாக்கை பதிவு செய்து மாற்றத்திற்கு வித்திடுங்கள்.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கவிதையை ரசித்தேன்.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.