Saturday 5 April 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 4

டேய் மீச எங்கடா முனியம்மா ............இன்னும் வர்ல...........

எனிக்கி தெர்ல நாடார்..............வரசமயம்ஆயி




 டேய் பயம் முனியம்மா காலில கண்டுகினியா...............

யோவ் லிங்கம் சொம்மா உதார் உடாதே அது கண்டு கேட்டுச்கிச்சு உன்னிய கோதாவுல உட்டு குமுறிடும்.

தோ முனியம்மா வருது...............

டேய் பயம் இன்னாடா லிங்கத்த கலாய்ச்சினு கீறே

அது ஒன்னியும் இல்லே..............

சர்தான் பாய் வரலியா...................தோ வந்துகினே கீறேன்..............

முனிம்மா இன்னா நூசு...................இந்தம்மா சும்மா ஹெலிகோப்டர்ல்லேயே பறந்துகினு கீதே.............அதுக்கு யாரு துட்டு கொடுப்பாய்க.............

அதான் தெர்ல பாய், எலிக்சன் கமிசன் அதுக்கு கணுக்கு கேக்க மாற்றானுங்கோ.........

எலிக்சன் கமிசன் தலீவர் கீரானே அந்தாளு அம்மா மச்சான் போல , போன எலிக்சன்லேயும் ஸ்ரிரங்குத்துல அம்மா முந்தானிய அவுத்து வுட்டு சில்லரை செதற வுட்டுது அந்தாளு கண்டுக்கினா மாதிரி தெர்ல.......

மவனே இவனுக இன்னதான் டகில் பாச்சா காட்னாலும், ஜனம் கீது பாரு அது மெய்யாலுமே ரிவிட் அடிக்கும்...........

சரி  முனிம்மா அது இன்னா பக்கடா...........பார்ட்டி............பக்கடா பார்ட்டி............ன்னு .........சொம்மா வைகோ கூவின்னு கீறாரு............

அந்தாளு போன எலிக்சன்ல கைட்டிவுட்ட காண்டுல அம்மாவையும் அவிக அல்லக்கை பாடுகளையும் வுட்டு  கைற்றாறு..............அந்தம்மா கிட்டே கீறானே ஒரு சூப்பர் பாடு அவன்தான் பேச்சு வார்த்தைன்னு சொல்லி அல்லாருக்கும் வடையும் பக்கடாவும் கொடுப்பானாம்...................

அதுயாருக்கா?.......................செல்வம்

டேய் பயம் விசயம் தெரியாதவனா கீறேயே? அம்மா கிட்டே அன்டின்னுகீற சூப்பர் பாடு யாருடா? ஓ.பி டா......,

இன்னா இந்த தபா தளபதிதான் பின்னி பெடலேடுக்கிறாராமே...........

அஹான் மெயாலுமே இப்ப தூள் கெளப்பினு கீறாரு............

இந்தம்மா  உடுற ஊதார நக்கல் செய்ய..................தாஜ்மகால கட்ட்னதே எங்கம்மா தான்னு சொல்வானுங்க ன்னு டபாய்க்கிராறு..............

அயகிரி மேட்டர் இன்னா.................

அந்தாளு சொம்மா பேட்டி, பெட்டின்னு ஆஃப் ஆயிட்டார் போல............

கேப்டன் இன்னா சொல்றாரு................

அந்தாளு இன்னா சொல்லுவாறு.........................அவரு மப்பு ஆகி மட்டை ஆயிடுவாரு......................அவரு பொன்சாதி கீதே அதுதான் சொம்மா அல்லாருக்கும் ஆப்படிக்கீது.....................அதுக்கு ஏதோ அம்மா மேல காண்டு போல...........

முனிம்மா இந்த தோனி பையன் கூட்டம் இன்னா பண்ணிகிரானுங்கோ........

இன்னா பாய் கடேசி வரிக்கும் கெலிச்சுகினே வந்துகிரானுங்கோ.............


கோப்பைய தூக்கிரானுவங்ககளா?

அது நமக்கு இன்னா தெரியும், துபாய்ல டெண்டடிச்சு குந்திகிரானுன்களே ஐ.சி.சி அந்த பாடுங்க இன்னா நெனைக்கிரானுன்களோ?

டேய் பயம் இந்நாடா கம்முனு கிறே?

இன்னாக்கா நம்ம மேட்டர் ஒன்னியும் காணோம்..............

மவனநீ  திருந்த மாட்ட...................





Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கலா கீதுப்பா டீ! தாங்க்ஸ்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Unknown said...

Awwwwwq

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னைக்கு தெரிந்து விடுமப்பா - கோப்பை...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.