Monday, 21 April 2014

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா....


700வது பதிவு.

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க உளறல்களும், ஊதார்களும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் தங்களை சார்ந்த கட்சி அரசியல் தலைவர்களின் பரப்புரைகளை (??) ஒளிபரப்பி ஆதித்யா, சிரிப்பொலி சேனல்களுக்கு இணையாக நம்மை நகைக்க இல்லை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன..........

நமது கீச்சர்களுக்கு இது போன்ற அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் அல்லக்கைகளின் பேச்சுகளை நக்கல் செய்வது கோடையில் கூலிங் பீர்குடிப்பது போல.............அவர்கள் பங்கிற்கு ட்விட்டரில் அடிக்கும் கும்மிகளின் தொகுப்பு.

மதுவை ஒழிக்க கேப்டனை ஆதரிக்கவேண்டும்--பிரேமலதா
குடும்ப ஆட்சியை அழிக்க என் தம்பி சுதீஷை ஆதரிக்க வேண்டும்--பிரேமலதா# ஏசுவே ஏ ஏ ----------------ட்விட்டர் தாத்தா 

குஜராத் மின்மிகை மாநிலமாக இருக்க மாநில அரசே காரணம், தமிழகத்தின் மின்வெட்டிற்கு மத்திய அரசே காரணம்--#$மோடி (அறிவுதிறன்கள்)----ஷீபா

ஏப்ரல் 24க்குப் பிறகு மோடி அலை சுனாமியாக மாறும்---அமீத்ஷா#தட்ஸ்தமிழ்

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், தி.மு.க தேர்தல்அறிக்கை # இதுக்கு சிரிக்கவா செத்துரவா--------------whistle podu

கச்சத்தீவை மீட்க கடலில் இறங்கிப் போராடத்தயார்-விஜயகாந்த்# அது வேற தண்ணி தலைவா விட்டுடுங்க நமக்கு ஒத்து வராது-----------------சதீஷ்

இத்தனை வருட காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் மக்களுக்கு  பண்ணிய ஒரே ஒரு நல்லது மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதுதான்------------ரோபல்காந்த் 

ரேஷன் கடை பொருட்களில் உருவானதுதான் அம்மா உணவகம்-------கனிமொழி

வைகோ, அன்புமணி, பாலு, கார்த்தி, திருமா, கி.சாமி - கட்சி பேதமில்லாம  ஜெயிச்சு பார்லியில் கலக்கப் போறதாக கனா கண்டேன் தோழி நான்-----------கோவைகமல் 

ஓட்டு  கேக்குறேன்னு வந்து காதுலயே சங்கு ஊதி  எழுப்பி விடுகிற நீங்க எல்லாம் இந்த ஜெமத்துல ஜெயிக்க மாட்டீங்க-------------மலர்  

நடந்து வந்து ஓட்டு கேட்கலாம், காரில் வந்து ஓட்டு கேட்கலாம் ஏன் ஹெலிகாப்டரில் வந்துகூட ஓட்டு  கேட்கலாம் ஜாமீனில் வந்து??# ஆதரிப்பீர் உதயசூரியன்-------------------சுபாஷ்

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நதிகள் இணைப்பது சாத்தியமாகும்----தா.பா. இத்தாபா அப்போ அது சத்தியமா சாத்தியமாகாது எக்காலத்துக்கும்---------------எமகாதகன்

இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபியாகிறார், கிறித்துவ மதமென்றால் கலைஞர் ஏசுவாகிறார், இந்து மதமென்றால் மட்டுமே கலைஞர் பெரியாராகிறார்----------நா குமரேசன்

அனைத்து கீச்சர்களுக்கும் நன்றி.............


Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா.... சதீஷ் சொன்னது செம...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

700க்கு வாழ்த்துக்கள் சகோ.

கும்மாச்சி said...

எஸ் ரா வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

J.Jeyaseelan said...

'<<>>> செம காமெடி, நான் ஒன்று படித்தேன் முகப்புத்தகத்தில் ;;;;

நான் ஸூட்டிங்க்காக குஜராத் போயிருந்தேன் , தேடித் தேடிப் பார்த்தேன் ஒயின்ஸாப்பையே பாக்க முடியல‍---- ----------------- ((((""''vijayakanth''
கமெண்ட்; அங்க போயும் ஒயின் ஸாப்பதான் தேடுனிங்களா தலிவா....

கும்மாச்சி said...

ஜெயசீலன் வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

ரசிக்க வைத்த பகிர்வுக்கு பாராட்டுக்கள் ,700 வது ஆக்கம் மென்மேலும் உயர வேண்டும் என்று என் மனதார வாழ்த்தி வணங்குகின்றேன் சகோதரா .

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி.....

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் கீச்சுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Jayadev Das said...


\\இஸ்லாமிய மதமென்றால் கலைஞர் நபியாகிறார், கிறித்துவ மதமென்றால் கலைஞர் ஏசுவாகிறார், இந்து மதமென்றால் மட்டுமே கலைஞர் பெரியாராகிறார்----------நா குமரேசன்\\ அப்படி போடு அருவாளை..........நச்சுன்னு இருக்கு!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.