Friday 9 October 2015

கலக்கல் காக்டெயில்-170

இருட்டுக்கடை அல்வாடா.........செயின்ட் ஜார்ஜு கோட்டடா.............

தளபதி கடந்த சில நாட்களாகவே ஆட்டோவில் தொங்குறாரு, பேருந்துல பதுங்குறாரு, மெட்ரோல மெர்சல் ஆவுறாரு, டீ கடைல வடகறி துன்றாரு, கையேந்தி பவணுல தோச சட்னி ஊத்திகினு தாய்க்குலத்தோட பேசுறாரு சரிபா அல்லாம் சர்தான்..................

இது எல்லாம் ரெண்டு மூணு வருஷம் முன்னாடி செஞ்சாருன்னா ஜனம் எல்லாம் மெர்சல் ஆயி................யோவ் தலைவா நீ கம்முன்னு கெட எங்க அடுத்த தல ஸ்டாலின்தாபான்னு............அயகிரிய அம்பேல் ஆக்கிருக்கும்.

ஆனா இப்போ அயகிரி இது காமெடி டைமுன்னு நக்கல் அடிக்கிறாரு.........

உலக சரித்திரத்திலேயே ஒரு இயக்கத்தை குடும்பம், கூத்தியானு நாறடிச்ச ஒரே கூட்டம் இதுதான்யா..............

ஆனா இந்த மேட்டருல அம்மா மெய்யாலுமே டென்சன் ஆயிருக்காப்போல....

தளபதி தப்பான இடத்துல வந்துட்டாரு..............கருவின் குற்றம்.......

குற்றம் தண்டனை சிறை 

ஜாதிக்கார் இந்த முறை எந்த திராவிடக் கட்சியுடனும் கூட்டணி இல்லை, நாங்கள் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப்பிடிப்போம், அப்புறம் என் மவந்தான் சி.எம் என்று ஒரு ஏற்பாடுடன் போய்க்கொண்டிருக்கிறார்.

இதற்காக புது போஸ்டர் எல்லாம் வடிவமைத்து மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று ஊர் முழுவதும் ஒட்டி தீர்த்தார்கள்.

சின்ன ஐயா மத்திய அமைச்சராக இருந்த பொழுது முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கில், சி.பி. ஐயை குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுமே ஊழல் வழக்கிலிருந்து விடுபடாமல்தான் வரப்போகும் தேர்தலை சந்திக்கப்போகின்றன, அந்த ஜோதியில் இப்பொழுது சாதிக்காரரும் ஐக்கியமாகிவிட்டார்.

அவர்கள் வைத்த போஸ்டரை வைத்தே சில நெட்டிசன்கள் "குற்றம், தண்டனை, களி" என்று நையாண்டி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரசித்த கவிதை

சீதையோடு ஒரு செல்ஃபி 
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.
இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்
நிரம்பியிருந்தது ராமனின் தொடுதிரை.
பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.
வாலிக்கு இரங்கல் எழுதிக்கொண்டிருந்தான் சுக்ரீவன்.
ராவணன் பறித்துக்கொண்ட செல்பேசியில் இருந்தது
சீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.
விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு.
அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பணகை.
'ஆறு மாதங்களுக்கு டீஆக்டிவேட்’ என்றான் கும்பகர்ணன்.
ராமனைப்போல சுய படமிட்ட போலிக்கணக்கில்
சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.
'எங்கே உருப்படப்போகிறது?’ என்று கடந்தாள் மண்டோதரி
அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது
அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்ஃபி ஒன்று!
நன்றி------------------------- ஷான் (விகடன் சொல்வனத்திலிருந்து)

ஜொள்ளு

"நெட்"டுத்தாக்கு 
I DONT support ராதிகா (நாயுடு) MR Radha=Madras Rajagopala Radhakrishna Naidu:)) - தேவையா தாயி ஒனக்கு?:( அப்பாவின் 'பெரியார் பெருமை' அறிவாயா?
------------------KRS@kryes

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

KILLERGEE Devakottai said...

அடடே இவரு எதுக்கு அரசியலுக்கு வரணும் சினிமாவுக்கு போயிருந்தால் சிவாஜி கணேசனையே.. ஓரம் கட்டியிருக்கலாம்

ஜொள்ளு.... ஸூப்பரு.........
தமிழ் மணம் 1
நண்பரே எமது புதுக்கோட்டை பதிவு காண வருக...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு...

கும்மாச்சி said...

கில்லர்ஜி நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல உங்கள் நையாண்டி தர்பார் சூப்பர்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன்...வாழ்த்துக்கள்.த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் காக்டெயில் கலக்கிட்டீங்க...

கும்மாச்சி said...

ரூபன் நன்றி.

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

கிக் ஏறி கடைசில உச்சம்தான்!
த ம +1

கும்மாச்சி said...

நன்றி ஐயா.

நெல்லைத் தமிழன் said...

இரண்டுபேரும் (ஸ்டாலின், அன்புமணி... மூணாவது விசயகாந்த்) முதலீடு போட்டிருக்கிறார்கள். தொழில் விளங்க வேண்டாமா... வருமானம் கொழிக்க வேண்டாமா.. அதனால் வீறுகொண்டு மக்களைச் சந்திக்கிறார்கள். அவுக முதலுக்கு மோசம் விளைவிக்கிற வேலையைப் பண்ணலாமா கும்மாச்சி? சரி..சரி.... கூட ரெண்டு படம் போட்டா உங்களை மன்னிச்சுவிட்டுறலாம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.