Monday 19 October 2015

கலக்கல் காக்டெயில்-171


கொடநாடு கோட்டையானதே.

அரை மணிநேர அலுவல்கள் முடிந்து இப்பொழுது முழுநேரப் பணிகளுக்காக பரிவாரங்களுடன் மம்மி மலையேறிவிட்டது. இனி என்ன எல்லா முடிவுகளுக்கும் அம்மா லைன் கிடைத்தால்தான் முடிவுகள் கிட்டும். ஏற்கனவே தமிழ்நாட்டு பேருந்துகளின் நிலைமையை எல்லோரும் கிழித்து தொங்கவிட்டாலும் ஏதோ பேருக்கு ஒரு ஐநூறு பேருந்துகளை பட்டிதட்டி டிங்கரிங் பண்ணி கோட்டையிலிருந்தே கொடியசைத்து ஓட விட்டு விட்டார்கள்.

மழைகாலம் தொடங்கப்போகிறது, அதற்கான முஸ்தீபுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலுக்கான வியூகமும் கொடநாட்டில் தயாராகிக்கொண்டிருக்கிறது. மம்மியின் தற்போதைய பலமோ, வலுவில்லாத எதிர் கட்சிகள் மற்றும் அவர்களின் ஒற்றுமையின்மை. மேலும் இருக்கவே இருக்கிறது வைட்டமின் "ப".


எவன்டா ஏன் சங்கத்து ஆள அடிச்சது

 வெறும் மூவாயிரம் ஓட்டுக்களே உள்ள ஒரு சங்கத்திற்கு தேர்தல் அதற்கு இந்த ஊடக அப்ரசண்டிகள் கொடுத்த முக்கியத்துவம் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு எடுத்துக்காட்டு. சென்னையில் எத்துணையோ சங்கங்கள், கிளப்புகள் உள்ளன அதற்கெல்லாம் தேர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போதைய தேர்தல் கிட்டத்தட்ட எல்லா அரசியல் நாடகங்கள் திருப்பங்கள், ஜாதி சண்டைகள் கொண்டு அரங்கேறின.

இவர்கள் பிரச்சாரத்தில் ஆபாச நெடி அதிகமாகவே வீசியது. ஜாதி பெயர் எல்லாம் சகட்டுமேனிக்கு மேடையில் அரங்கேறின..........நாளைக்கு இவர்களே வந்து திரையில் நம்மைப் பார்த்து "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடுவார்கள், பின்னர் "ஜாதி ஜாதிங்கிறயே அந்த ஜாதியாட உன்னை பெத்தது" என்று பஞ்ச் பேசுவார்கள் . நமது தமிழ் கூறும் நல்லுலகமும் விசலடித்து கைதட்டும்.


ரசித்த கவிதை (படித்ததில் பிடித்தது)

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தேர்தல் அதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை தெள்ளத்தெளிவாக சொல்கிறது. விகடனில் இதைப்பற்றிய ஒருக்கட்டுரைக்கு பின்னூட்டத்தில் "மர்யம் கபீர்" என்பவரின் அசால்ட்டான கவிதை மிகவும் ரசிக்க வைத்தது.

நடிகர் சங்க
தேர்தல்
முடிவடைந்தது.

கவலையாகத்தான்
இருக்கிறது
ஒரு மாதத்திற்கு மேலாக

நடிக்காத நடிகர்களை

சொந்த வசனத்தை
சொந்தக்குரலில் பேசிய
நடிகர்களை

அரிதாரம் விட்டு
அரியணைக்காக துடிக்கும்
நடிகர்களை

கிளாப் அடிக்காமல்
 ஆக்ஷன் சொல்லாமல்
"கட்"க்கு நிறுத்தாமல்
சுய தரத்தையும்
சுற்றியுள்ளவர் தரத்தையும்
கழுவி ஊற்றிய
நடிகர்களை

கூட்ட நெரிசலில் நிற்காமல்
டிக்கட் எடுக்காமல்
வீட்டிலிருந்த படி
பார்க்க முடிந்தது
இன்றோடு முடிவது
கவலையாகத்தான் இருக்கிறது
ஒரு விதத்தில்..............

-------------------------------நன்றி: மர்யம் கபீர்


ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இவர்கள் எல்லோரும் நம்ம நம்பி வாழ்பவர்கள்... த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நம்பள்கி said...

நடமாடும் ஜொள் [பல்]கழகமே; உமது டெஸ்ட் அபாரம். விரசமா இல்லாம அழகான ஜொள் படம் [தேடிப்] போடுவதில் நீங்கள் ஒரு முனிவர் (எழுத்துப் பிழை இல்லை; விஸ்வாமித்திரர் மாதிரி).

உங்கள் சேவை---தமிழ் வலை உலகத்திற்கு சேவை!

'பரிவை' சே.குமார் said...

அருமை...
கவிதை ரொம்ப அருமை...

சிங்கம் said...

அப்படி சொன்னா எப்டி... நடிகருங்களா அல்லது கடவுளான்னு கேட்டா, தமிழ் நாட்டு ஜனங்க, ஒரு நடிகனைத்தான் பார்க்க விரும்புவார்கள். அதனால் அவங்க சங்க எலெக்ஷன்னா அத விட வேர எது முக்கியம் நாட்ல..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.