Wednesday 14 October 2015

டீ வித் முனியம்மா-பார்ட் 34

டேய் செல்வம் இன்னாடா கடியாண்ட தேன்மொழி கீது, அஞ்சல எங்கேடா?

ஐய இன்ன முனிம்மா அது அம்மா வூட்டுக்கு காசிமோடு போயிகீது.....

உன் பாடு இன்னா அஞ்சல இல்லேன்னா தேன்மொயி ..........இன்னாடா கயகத்துல எதுன்னா சேந்துகினியா.......பயக்கட வச்சிகீற ........ரெண்டு பொண்டாட்டி கட்டிகீர, கயகத்துல சேந்தா நேர மந்திரிதான்..........அப்பால ஒரு செட்டாப்ப வச்சிக்க சி.எம் ஆயிடலாம்...........

த முனிம்மா காலையில எண்ணிய ஓட்டாத........நூசு இன்னா அத்த சொல்லு...

இருரா உன் கூட்டாளி லோகு எங்க..........நாய இட்டுகினு வருவானே.....

இத பாயோட கறிக்கடைக்கு போயி அவர இட்டுகினு வரான் பாரு.....

டேய் மீச அல்லாருக்கும் டீ போடுறா.........

லிங்கம் சாரு, நாடாரும் வந்துருவாங்க.........முனிம்மா நாட்டு நடுப்பு இன்னா நீ சொல்லு..........

இன்னத்தடா சொல்றது.........தளபதி நமக்கு நாமென்னு சொல்லிக்கினு கம்பு சுத்துறாரு, கோயிலாண்ட போறாரு, அம்மா கடில இட்லி வாங்கி துன்ராறு.........அல்லாம் எலிக்சன் வருதுல்லா.............

அது சரி அவரு இன்னா சொல்றாரு அத சொல்லு மொதொல்ல.

இன்னா சொல்லுவாரு.........கரீண்டு இல்ல, விலைவாசி ஏறிகீது........நாங்க கண்டி ஆச்சிக்கு வந்தா அல்லாத்தையும் கரீட் பண்ணுவோம்னுவாறு..........

ஜனங்க இன்னா சொல்லுது......ஒட்டு போடுங்கற.........

அடபோ லிங்கம் சாரு.........க்வாட்டரும் கோயியிக்கறியும் துன்னுட்டு யாருக்கு குத்தும்னு நமக்கு இன்னா தெரியும்........

அம்மா இதக்கண்டுகினா மெர்சல் ஆவிடுமே.......

இல்ல பாய் அந்தம்மா வேற ரூட்ல போய்கினு கீது.......கலீனராண்ட யாரும் சேராம பாத்துகினாலே போதும்னு கம்முன்னு சிருதாவூர்ல குந்திகின்னு கீது.

ஆச்சின்ன சொன்ன நம்ம ஆச்சிதான் மனுசுல வருது.........பாவம் இன்னா ஆயிட்டுக் கொடுக்கும் டப்புன்னு செத்துடுச்சே......

ஆமாண்டா லோகு..............சொம்மா வா வாத்தியார வூட்டாண்ட  பாடிக்கினு எத்தினி படம் நடிச்சிகீது..........ஊர்வலத்துக்கு இன்னா ஜெனம்டா.......ஐய சொவுத்து மேல எல்லாம் நின்னுகினு அத்த வயி அனுப்பிச்சானுங்க.

இன்னா முனிம்மா  இந்த கூத்தாடிப்பசங்க எல்லாம் அடிச்சிகினு நிக்கிறானுங்க. இன்னா மேட்டரு....

அவனுக  நடிகர் சங்கம் கீதில்ல அதுல  எளிக்சனாம்......

அது வேறயா......

ஆமா நாடாரு...........இந்த சொம்படி சரத்குமாரு அவன் மச்சான், பொண்டாட்டின்னு இத்தினி  வருசமா சங்கத்துல தலைவரா இருந்துகினு சொம்மா கூத்தடிச்சிகினு இருந்தானுங்க......இப்ப அவனுகளுக்கு ஆப்பு வைக்க ஒரு கூட்டம் புச்சா கெளம்பிகீது......

நல்ல தமாசுதான் போ.

ஆமாண்டா ஐய்ய இன்னாம்மா திட்டிகிரானுங்க..........நம்ம குப்பம் எல்லாம் இவனுக கிட்ட பிச்சே எடுக்கணும்...........நாயிங்குறான், பரதேசி நாயிங்கிறான். இன்னும் வுட்டா...........உன் நாயீ குறுக்கே போவாம திட்டுவானுங்க போல.

முனிம்மா அம்மா பொம்பளையாளுங்களுக்கு அல்லாம் போனு கொடுக்கப் போவுதாமே.........அம்மா போனு.

டேய் லோகு அது எங்களுக்கு இல்லடா......சுய உதவி குயு பொம்பளைங்களுக்காம்.

இன்னா முனிமா பேஜார் பண்ற......நீ கூடத்தான் சொயமா கடை வச்சிகீற.

டேய் செல்வம் சொம்மா புளிப்பூத்தாத..........ஆமா.........

சரி முனிம்மா இந்த யுவராசு போலீசுல சரண்டர் ஆயிகிறான்......இன்னா மேட்டரு. அவனதான் டோனி டீம வுட்டு தூக்கிட்டாரே......

போடா டோமரு இது வேற ஆளுடா.......கொலகேசுல தேடிக்கினு இருந்தானுங்க.......பதினாறு செக் போஸ்டு போட்டு தேடியும் அந்தாளு டபாய்ச்சிகினு கீறான்.. இன்னா நம்ம போலீசு......

சரி அத்த வுடு முனிம்மா..........சினிமா நூசு இன்னா...........இன்னா படம் போட்டுக்கிறான்.......

அடப்போடா......இனி "கபாலி" வந்தாதான் நூசு..........மத்ததெல்லாம் டப்பாசு........
இந்தா பேப்பர பிடி படத்த பாத்துகினு இரு அங்க தேன்மொயிய எவனாவது உசார் பண்ணிடப்போறான்.

அதெல்லாம் நம்மாளுகிட்ட நடக்காது முனிம்மா...........

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

நாட்டு நடப்பை சூடான டீயுடன் பறிமாறியது சிறப்பு! நன்றி!

சென்னை பித்தன் said...

சோக்கா சொல்லிக்கிறா வாத்யாரே மினிம்மா!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.