Tuesday 20 October 2015

சொல்றாங்களே.............

"பாத்தீங்களா.. வெக்கமா இல்லை உங்களுக்கு. எந்தத் தவறும் செய்யாத சரத்குமாரை எப்படியெல்லாம் பழித்தீர்கள். போய் தூக்கில் தொங்குங்கள் நண்பர்களே,"-------ஒப்பந்தத்தை ரத்து செய்தவுடன் ராதிகா.

கும்மாச்சி: என்னே பதிபக்தி..............இந்த வருஷம் ஆஸ்கார் உங்கள் எல்லோருக்கும்தான்..........

 "நானும் ராதாரவியும் சத்யம் சினிமாவுடன் போட்ட ஒப்பந்தத்தைப் பற்றி கண்டபடி விமர்சித்து, பழி சுமத்தியதால், அதை நாங்களே ரத்து செய்து விட்டோம். எங்கள் மீது எந்தக் கறையும் இல்லை. மிஸ்டர் க்ளீனாக நான் வெளியேறுகிறேன்," ----------தேர்தலில் தோத்தவுடன் சரத்குமார் கண்ணீர் கதறல் 

கும்மாச்சி: அதே ஏன் இப்போ சொல்றீங்க, எங்கேயோ ஒதைக்குதே.

கும்பி எரியுது குடல் கருகுது கோடுநாடு  ஒரு கேடா?------------ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி.

கும்மாச்சி: தம்பி கம்பு சுத்துது அண்ணன் அரிவாள் காட்டுது உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா?

கமல் யூத்தா? சொந்தம் பார்க்கும் சத்யராஜ்-சரத்குமார் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் 

கும்மாச்சி: சித்தப்பு, நீங்க சித்தி, மச்சான் மட்டும்தான் யூத்து..........மற்றவர்களெல்லாம் ...........து வேண்டாம்  விடுங்க உங்களுக்கும் எங்களுக்கும் வித்யாசம் வேண்டும்.


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Unknown said...

சிங்கம் சிலுப்பிக்கிட்டு கிளம்பிடிச்சி...கைப் புள்ள வண்டிய எடு...

சிங்கம் said...

மச்சானுக்காக மானம், மரியாதையை மறந்து சரத்"வேலை"செஞ்சாரு.. பாவம்.. பேரு ரிப்பேரு ஆனதுதான் மிச்சம்.

KILLERGEE Devakottai said...

ரயிலு தடம் புரளுதோ..... ஸூப்பர்
தமிழ் மணம் 5

அருணா செல்வம் said...

தேர்தல் என்றாலே அரசியல் போல் தானே....
எல்லாம் சகஜம் தான்.
நாளைக்கே கூட்டு சேர்ந்திடுவாங்க.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.