Friday 27 November 2015

விகடனார் சொல்வது சரியா?


திடீரென்று ஆயாவிற்கு விகடனார் மேல் கோபம்   விகடன் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்களது அதிகாரபூர்வ நாளேட்டில் சகட்டுமேனிக்கு விகடனை நாரடித்துக்கொண்டிருக்கிரார்கள். இதற்கும் மேலாக விகடன் விற்கும் சில்லறை வியாபாரிகளையும் காவல் துறை மிரட்டுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, விகடன் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் நவம்பர் இருபத்தி ஐந்தாம் தேதி வந்த "மந்திரி தந்திரி" கட்டுரைதான். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆயா ஆட்சி செய்த கோலத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டுவிட்டார்கள். இது "மந்திரி தந்திரி"யின் முப்பதாவது தொடர். அதற்கு முன்பே எல்லா மந்திரிகளின் "குனிந்து, படுத்து  சாதித்த சாதனைகளை" சொறி நாய் குறுக்கே போகாத அளவிற்கு கொதறி போட்டு  விட்டார் விகடனார். அதில் ஓ.பி., நத்தம், என்று எல்லா துறைகளின் மந்திரிகள் செயல்பாடுகள் அவர்களின் குலம், கோத்திரம், குடும்ப நண்பர்களின் அட்டகாசங்கள்  என்று விரிவான அலசல்.

இந்த மாதிரி கட்டுரைகள் நமக்கு ஒன்றும் புதியதல்ல. போன ஆட்சியின் இறுதி கட்டத்திலும் "கொய்யா"  மந்திரிகளின் செயல்பாடுகளை கிட்டத்தட்ட இதே மாதிரி தோரணம் கட்டினார்கள்.

அதுமட்டுமல்ல அம்மா கேசு பெங்களூரில் நடந்து கொண்டிருக்கும்பொழுது அந்த சொத்துக்குவிப்பு வழக்கின் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்து தொடராக எழுதி பரபரப்பாக்கினார்கள். ஆனால் அதில் வந்த விஷயங்கள் எல்லாம் நாம் அறிந்ததே, ஆனால் குன்ஹாவும் அறிந்ததே என்று பிற்பாடு தீர்ப்பு வந்தபின் தெரிந்த விஷயங்கள்.

அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத ஆயா இப்பொழுது பாய்வதற்கு காரணம் கூப்பிடு தூரத்தில் தேர்தல் இருப்பதால்தான். இந்த அவதூறு வழக்கினால் விகடன் இதுபோன்ற கட்டுரைகளை நிறுத்துமா? என்றால் நிறுத்தாது என்றே தோன்றுகிறது. இன்னும் ஆயா அவலங்களை தோண்டி எடுத்து இனி வறுத்தெடுப்பார்கள் .


இதில் குளிர்காய "கொய்யா" கட்சி இப்பொழுதுள்ள நிலைமையில் கொடுத்து வைக்கவில்லை. என்னதான் கட்சி தொண்டர்கள் விகடன் இதழ்களை வாங்கி மக்களிடம் கொடுத்தாலும் அவர்கள் நிலைமை இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சரி உபரி கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு என்றால் அவர்களும் ஒவ்வொருவரும் முதல்வர் கனவுடன் இருப்பதால் கூட்டு சேர மறுக்கிறார்கள்.

விகடனார் சொல்வது சரியா? தவறா? என்று நாம் ஆராயத் தேவையில்லை. கடந்த இருபது வருடங்களாக தமிழகம் கண்ட வளர்ச்சியும், தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் அண்டைய மாநிலங்களிடம் பிச்சைஎடுக்கும் அவல நிலையும், மேலும் தற்பொழுது மழையில் ஊர் நாரியதைப் பார்த்தாலே இரண்டு கட்சிகளும் என்ன கிழித்தார்கள் என்பது அடை மழையில் அடங்கி அனுபவித்தவர்களுக்கும், மின்சாரம் இன்றி தவித்த சிறு தொழில் செய்வோர்களுக்கும் தெரியும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகம் இப்பொழுது உண்மையை உள்ளபடி மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய நேரமிது. அதை மனசாட்சியுடன் எந்த அடக்குமுறைக்கோ  அல்லது கைநீட்டல்களுக்கோ அடிபணியாமல் செய்தால் மாற்றம் வரலாம்.

செய்வீர்களா? செய்வீர்களா?
Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

KILLERGEE Devakottai said...

என்னதான் சொன்னாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் நண்பரே காலவினை வேறென்ன......
தமிழ் மணம் 1

மீரா செல்வக்குமார் said...

நல்ல பதிவு...

Thulasidharan V Thillaiakathu said...

ஓ! விகடனாரின் இந்தக் கட்டுரையை முதலில் படிக்கவில்லை. அதன் தலையங்கம் கொஞ்சம் சார்ந்து பேசுகின்றதோ என்று நினைத்தது உண்மை. மக்கள் திருந்தினால் சரி...நம் மக்கள் முழித்துக் கொண்டுத் திருந்தியே ஆகவேண்டிய காலம் வந்தாச்சு...

திண்டுக்கல் தனபாலன் said...

செய்வது சிரமம் தான்...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.

Anonymous said...

dmk and aiadmk both are same. but there are no alternative. people have to chose the better
of these two outfits that is where amma is slightly better. may be i am wrong, but that is my opinion. vikatan is now slightly biased these days.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.