Monday 2 November 2015

கலக்கல் காக்டெயில்-172

அறுபது கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை

ஆங்கில நாளிதழில் "JAZZ" சத்யம், லுக்ஸ் திரை அரங்குகளை வாங்கிய செய்தி வந்தவுடன் எதிர்கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.

அறுபது கோடிக்கே ஆ..........ஊ...........ன்னு குதிச்சு கும்மாளம் அடிச்ச எதிர் கட்சிகள் இப்பொழுது ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்.

நீங்க என்ன வேணா செய்யுங்க நாங்க எங்க அரசில் இப்படித்தான் செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலென்ன அடுத்தவர் ஆட்சிக்கு வந்து இன்னும் வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளலாம்.

அப்படியே வழக்கு என்று வந்தால் குமாரசாமி மாதிரி ஒருவர் மாட்டாமலா போகப்போகிறார்.

இந்த அரசியல்வாதிகள் ஒன்றை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறார்கள், "கொள்ளையடிங்க ஆனா பெருசா அடிங்க" என்று.

ஹூம் வேற........... வேற................

புதிய வெடிகள் 

புதிய வெடிகள் என்று நகைச்சுவை ஒன்று இணையங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி இதை நீங்க பத்தவச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கான்னு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்ட கொடுத்து பத்த வைக்க சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம்.  இதோ ஸ்பெஷாலிடியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.

இது கொஞ்சம் ஈசியான வெடி, நமக்கு நாமே வெடிக்கலாம், இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோ கிட்ட போய்தான் வெடிக்கும்.

இதுல மெயின் வெடிகூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்தவச்சா அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.

இந்த வெடியோட சிறப்பம் அம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கன தான் வெடிக்கும், கவனமா இருக்கணும் சில நேரம் "தூக்கி அடிச்சிரும்".

இந்த துணுக்குகள் முதலில் வந்த பொது வெடியின் பேரோடுதான் வந்தது, இப்போ இதையே க்விஸ் போல நடத்தி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.......... இதை யூகிப்பது ஒன்று கடினமான வேலை இல்லை.

கலக்குறாங்கப்பா............

ரசித்த கவிதை 

ஆட்டுதி அமுதே!

ந்த அதிகாலை பயணிகள் ரயிலில் 
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான கட்டைவிரல்
வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக் கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.
புதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்
தன் ஸ்மார்ட்போனை முடுக்கிவிடுகிறான்.
'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் போனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்தபடியால்
பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்
அப்படி... அப்படி...
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!
நன்றி: இசை 

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

KILLERGEE Devakottai said...

கவிதை கலக்கல் நண்பரே
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

கடினமான வேலை...? ஹா.... ஹா....ஹா....ஹா....

இல்லை தான்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வெடிகள் சிரிக்க வைத்தன...

”தளிர் சுரேஷ்” said...

அருமை! பகிர்வுக்கு நன்றி!

கரூர்பூபகீதன் said...

வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்! கவிதை அருமை! அனைத்துமே அருமை! நன்றி!

மீரா செல்வக்குமார் said...

கும்கும்முன்னு இருக்கு...நான் வரிகளைச்சொன்னேன்....
அருமை நண்பரே...

Chittoor Murugesan said...

பாஸ்!
//இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.//சவுக்கு சங்கருக்கு கன்வே பண்ணியும் அவரே தயங்கற ஐட்டம் ஒன்னிருக்கு .

சாரி ..ஒன்னில்லை ரெண்டு. வெறும் லேடி மேட்டர் மட்டுமில்லை. மோடி மேட்டரும் தான்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.