Thursday 6 August 2009

கதை கேளு.-கவிதை


மழலைகள் மடியில் அமர்ந்து,
கிழவன் என்னிடம் கதை கேட்க,
பள்ளி நினைவுகளை
அள்ளி வழங்க வேண்டுமாம்.

என்னென்று சொல்வேன்,
அன்னையின் உழைப்பிலே
வளர்ந்த நான், புத்தகம்,
இரவல் வாங்கிப் படித்ததா,
மதிய இடை வேளையில்,
மாணவர் அனைவரும் உண்டு களிக்க,
உண்ணா நோன்பு இருந்ததா,
சீருடை மட்டுமே உடுத்தி,
வேறுடை உடுத்தாமல் இருந்ததா.
பொங்கலுக்கும் சீருடை,
பெருமையுடன் அணிந்ததா.
எட்டாம் வகுப்பில்
கட்டாத பணத்திற்காக,
எட்டாமல் என் படிப்பு நின்றதையா.
கட்டிடத் துறையில்
எட்டடுக்கு மாளிகைகளில்
எவனோ வசிக்க,
பட்டினிக் கிடந்தது,
கட்டிக் கொடுத்து,
உழைத்ததையா.
இத்துணை இருந்தும்,
உங்கள் தகப்பன்கள்,
கேட்பதைக் கொடுத்து,
படிக்க வைத்ததையா
வருஷம் ஒருமுறை,
என்மடி உறங்கும் மழலைகளே,
ராஜா உங்கள் ஐயா,
ராணி உங்கள் அப்பத்தா,
எங்கள் ராஜ்ஜியத்திற்கு,
அடுத்த வருடமும் வந்து,
மடி உறங்குங்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

பித்தன் said...

good

vasu balaji said...

ம்ம்ம். நல்லாருக்கு.

Anonymous said...

வலி கொண்ட வரிகளை வழங்கி இருக்கீங்க..பாடங்கள் பயன்றது கூட பாடமாய்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி வரிகள் டச்சிங்

கவிக்கிழவன் said...

Supper Kavithai. Palaya ninaivukali medi vidirkal.

geethappriyan said...

ஆரோக்கியமான விடயங்கள்.
நண்பர் கும்மாச்சி
தொடருங்கள் இனிதே.
கடைசி வரிகள் டச்சிங்
நல்ல முயற்சி

சி.கருணாகரசு said...

நல்ல கவிதை தொடருங்கள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.