Monday 24 August 2009

பதிவுலக ஜாதிகள் பலவிதம்-கவிதை


பதிவுலகில் பல ஜாதி,
மொக்கைகள் என்றோர் ஜாதி
மோட்டுவளைக் கவிதைகள் ஓர் ஜாதி
புரியும் கவிதைகள் ஓர் ஜாதி
புரியாக் கவுஜகள் ஓர் ஜாதி
ஆத்திகம் பாடும் ஓர் ஜாதி
நாத்திகம் நாடும் ஓர் ஜாதி
கதைகள் எழுதும் ஓர் ஜாதி
கதை விடும் ஓர் ஜாதி
கட் பேஸ்ட் என்றோர் ஜாதி
கண்மூடி காப்பி என்றோர் ஜாதி
பிரபலங்கள் என்றோர் ஜாதி
பிரபலமாகத் துடிக்கும் ஓர் ஜாதி
விமர்சனம் எழுதும் ஓர் ஜாதி
விடிய விடிய எழுதும் ஓர் ஜாதி
எத்துனை இருந்தும் இங்கு ஜாதி
பதிவுலகம் இயங்கும் என்பது நியதி.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

ஹேமா said...

கும்மாச்சி,இவ்வளவும் சேர்வதுதான் எழுத்து ஜாதி.

Anonymous said...

நளினம் வேண்டாத நாணயமான கவிதை....

vasu balaji said...

ஆஹா!அப்போ மீதி? அசத்துறீங்க கும்மாச்சி.

geethappriyan said...

புரியும் கவிதைகள் ஓர் ஜாதி

அது நீங்க எழுதும் கவிதை.
நாங்க அதற்கு விசிறி
ஒட்டு போட்டாச்சு

Anonymous said...

கவிதைக்கும் டால்மேஷியன் குதிரைக்கும் என்ன சம்பந்தம்??

பித்தன் said...

அண்ணாச்சி உங்க கவிதை கலக்கிடிச்சி.....

ரெட்மகி said...

நிதர்சன கவிதை
அசத்தல்

கலையரசன் said...

பதிவுலகத்தில் ஜாதி வெறியை தூண்டும் அண்ணன் கும்மாச்சிக்கு எதிராக கண்டனத்தை பதிவுசெய்கிறேன்.

:-)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.