Saturday 8 August 2009

காற்று, நடனமணி, கவிதை கிறுக்கல்கள்


காற்று

விரையும் வண்டியில்,
நுழையும் காற்றே,
அருகில் உள்ளவளின் ஆடையை
அனுமதியின்றி கலைக்காதே,
என் புத்தகத்தின் இதழை,
வீணாகத் திருப்பாதே ,
அலையும் என் கண்களில்
தெரியும் காட்சியினால்
அவள் பார்வை வெப்பமாகிறது,
என் மனது குப்பை ஆகிறது.



நடனமணி.

என் சம்மதமின்றி
என் அழகு,
ஏராளமான கண்களுக்கு,
எதிர் விருந்தாகிறது.
எனக்கென்று ஓர் இதயம்,
எனக்கென்றோர் ஆசை,
என்னிடம் உள்ளக் கவிதை,
எவரும் கேட்பதில்லை,
என்னைப் பெற்றவள்,
எடுத்த முடிவு,
எதிர்க்கத் துணிவில்லை,
ஏழெட்டு நடன மங்கையரில்,
எங்கோ ஓர் மூலையில்,
எதற்கு இந்த இடுப்பை
எக்கும் ஆட்டம்?

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

VISA said...

//அருகில் உள்ளவளின் ஆடையை
அனுமதியின்றி கலைக்காதே,
என் புத்தகத்தின் இதழை,
வீணாகத் திருப்பாதே ,//

arumaiyaana varikal. ungal kavidhaigal super. vote poatachu.

vasu balaji said...

/எனக்கென்று ஓர் இதயம்,
எனக்கென்றோர் ஆசை,
என்னிடம் உள்ளக் கவிதை,
எவரும் கேட்பதில்லை,/

ம்ம்ம். அருமை.

நல்லா எழுதுறீங்க. பாராட்டுக்கள்

கலையரசன் said...

//அவள் பார்வை வெப்பமாகிறது,
என் மனது குப்பை ஆகிறது.//

படமும் அருமை, அதற்க்கு தகுந்த வரிகளும் அதைவிட அருமை!!

Raju said...

நல்லா இருக்கு பாஸ்.

கும்மாச்சி said...

பின்னூட்டத்திற்கு நன்றி, அப்படியே தமிளிஷ்லேயும், தமிழ்மணத்திலேயும் வோட்டு போட்டுடுங்க.

சப்ராஸ் அபூ பக்கர் said...

காற்று அழகாக வீசியது.....

இரண்டு கவிதையும் அருமை.... வாழ்த்துக்கள்.....

சி.கருணாகரசு said...

கவிதை நல்லா இருக்குங்க.

ஹேமா said...

கும்மாச்சி,
நடனமணி உண்மையாய் உள்ளத்தின் ஓசை.

கும்மாச்சி said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, ஹேமா.

பித்தன் said...

arumaiyaana varigal vaazhthukkal thalaivaa

geethappriyan said...

//அவள் பார்வை வெப்பமாகிறது,
என் மனது குப்பை ஆகிறது.//

படமும் அருமை, அதற்க்கு தகுந்த வரிகளும் அதைவிட அருமை!!
voted in tamilish and tamilmanam

கும்மாச்சி said...

கார்த்திகேயன் உங்களது ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.

நம்பள்கி said...

iஇவள் தான் அழகி!
இயற்கையான அழகு இது தான்!
தமிழ்மணம் +1

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.