Friday 21 August 2009

டாஸ்மாக் நண்பர்களிடம் வேண்டுவன.


கலப்படம் இல்லாத சரக்கு வேண்டும்,
கலந்தடிக்க சோடா வேண்டும்,
தொட்டுக்கொள்ள ஊறுகா வேண்டும்,
நண்பர்கள் சரக்கு வாங்க வேண்டும்,
ஓசியில் குடிப்பவன் ஒதுங்க வேண்டும்,
ஆப் போயில் போடுபவன்
அருகில் இல்லாமல்,அறைக்கு வெளியே
அலம்ப வேண்டும்.

மூணு ரவுண்டு முடியவேண்டும்,
முடியாதவன் ஒதுங்க வேண்டும்,
முடிந்தவர்கள் தொடர வேண்டும்
நாலாம் ரௌண்டில் நடுங்குபவன்
நாக்கைப் பிடுங்கி சாக வேண்டும்.

அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குமுன்
அருகில் உள்ள என்னை,
அலுங்காமல் நலுங்காமல்,
அப்பன் ஆயியும் அறியாமல்,
அடுத்தத் தெருவில்
அமைதியாக விடவேண்டும்.
அம்சமான பிகர் அருகே வந்தால்
அப்படியே என்னை விடாமால்,
அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதி கூடத்தில் அடைக்கவேண்டும்.
நர்ஸ் பிகர் அருகே வந்தால்
நாசியா(nausea) என்று சொல்ல வேண்டும்.
இவையெல்லாம் நண்பர்கள் அறியவேண்டும்,
இல்லையென்றால் நான் வரமாட்டேன்
என்ற செய்தி தெரிய வேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

VISA said...

back?

கலையரசன் said...

எப்ப வந்தீங்க பாஸ்? வந்தவுடனேயா... ரைட்டு நடத்துங்க!

geethappriyan said...

நண்பர் கும்மாச்சி வெல்கம் பேக்.
நல்ல ஃபார்முல தான் வந்திருக்கீங்க தலைவரே.
நம்ம பதிவுக்கு உடனே வரவும்

geethappriyan said...

வந்தா சொல்ரதுஇல்லையா?
ஊரில் எல்லோரும் நலம் தானே?
வோட்டு போட்டாச்சு..

கும்மாச்சி said...

கார்த்தி சிக்கி சின்னா பின்னமாகி,நேற்றுத்தான் வந்தேன், அதைப்பற்றி ஒரு பதிவு போடுவதாக இருக்கிறேன். கிளம்பும்போதே கத்தார் ஏர்வேய்ஸ் வச்சாங்க ஆப்பு.

பித்தன் said...

anne welcome back with a biiiiiiig bang

இராகவன் நைஜிரியா said...

பயங்கர ஃபார்மில்தான் வந்திருக்கீங்க...

வெரிகுட் கீப் இட் அப்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வெல்கம் பேக்..:-)))))

vasu balaji said...

வரும்போதே மப்பா? வாங்க ஐய்யா.

ஹேமா said...

//அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குமுன்
அருகில் உள்ள என்னை,
அலுங்காமல் நலுங்காமல்,
அப்பன் ஆயியும் அறியாமல்,
அடுத்தத் தெருவில்
அமைதியாக விடவேண்டும்.//

வாங்க கும்மாச்சி.வந்தாச்சா...
வந்த உடனே கலக்கிறீங்களே !

தமிழ் காதலன் said...

amrkkalam.

அப்பாவி முரு said...

ஐய்யோ, ஐய்யோ

டாஸ்மாக்ல போயா சரக்கடிச்சீங்க.,

போதைக்கு கேரண்டி கெடையாது, ஆனா

நசியாவுக்கு வாரண்டி உண்டு.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.