Thursday 21 January 2010

எங்கள் “கடப்பாரையும்” சரோஜாவின் “டேக்ஸாவும்”


தலைப்பைப் பார்த்து இது ஏதோ குஜால் மேட்டர்னு வந்தீங்கன்னா முதலிலேயே சொல்லிடறேங்க இது அது மாதிரி மேட்டர் இல்லை, ஜுஜுபி விஷயந்தாங்க.

நம்ம வூடு சின்ன வூடுதாங்க ஆனா வீட்டுக்கு முன்னால பெரிய தோட்டத்தைப் பாக்கலாங்க. கேட்ட துறந்து நடுவாலே பாதை மேலே நடந்து வந்தீங்கன்ன, அவரை, பாகல், தக்காளி, கத்திரி, புடலை, சுண்டைக்காய் அங்க காய்ச்சு தொங்கரதே பாக்காம இருக்க மாட்டிங்க. அது மட்டும் இல்லைங்க முளை கீரை, பசலை, பொன்னாங்கன்னின்னு எல்லாம் இருக்கும். எல்லாம் எங்க அம்மா கைவண்ணம் தான். இந்தத் தோட்டத்தில் அவங்க உழைப்பைப் பார்க்கலாம். எங்க வூட்டுலே இருக்கிற இரண்டு கருவேப்பிலை மரமும் காய்கறி வியாபாரிகளுக்கு கொசுறு. ஆனா அம்மா சும்மா கொடுக்க மாட்டாங்க, அவங்க கிட்டே வீட்டுலே இல்லாத காய்கறிலே எதாவது கொடுத்தா தான் பறிக்க விடுவாங்க.

இந்தத் தோட்டத்துக்கு வேண்டிய சமாசாரம் அதாங்க கடப்பாரை, மண்வெட்டி, களைகொத்து , பாண்டு எல்லாம் அதோ மேக்காலே இருக்குதே அந்தச் சின்ன ரூம்புலேதான் பூட்டி வச்சிருப்பாங்க. எங்க அம்மாவைப் பார்த்து அக்கம் பக்கத்து வூட்டுக்காரங்களுக்கும் அதே போல செய்யன்னுமுட்டு அவங்க அவங்க சின்ன சின்னதா தோட்டம் வைக்க ஆரம்பிச்சாங்க. அதற்கு வேண்டிய எல்லா சாமானையும் எங்க வீட்டிலே தான் வந்து வாங்கிட்டுப் போவாங்க. ஆனா அம்மா சும்மா கொடுக்க மாட்டாங்க, ஏதாவது பொருளே எங்க வீட்டிலே வச்சாதான் கொடுப்பாங்க. ஒவ்வொரு வீட்டிலேயும் பொருள் மாறாது. செண்பகா வீட்டு சொம்பு, அலமேலு வீட்டு அண்டா, சரோஜா வீட்டு டேக்ஸா, அப்பத்தான் நம்ம பொருள் யார் வீட்டுலே இருக்குதுன்னு தெரியுமாம். இப்படித்தான் ஒரு நாளைக்கு சரோஜா வந்து கடப்பாரை என்னாண்ட கேட்டா, “நான் உன் டேக்ஸா எங்கே காமி” என்றேன். அம்மா சமையலில் மும்முரமா இருந்தாங்க. “டேக்ஸா மறந்துட்டேன், அரை மணியிலே கடப்பாரைக் கொடுத்திடறேன் என்று வாங்கிச் சென்றாள் சரோஜா.

நான் பிறகு அம்மாவிடம் சரோஜாவுக்கு கடப்பாரை கொடுத்ததை சொன்ன பொழுது, சண்டாளா ஏன் கொடுத்தாய்?, அந்தக் கடப்பாரையை அவளிடமிருந்து வாங்க முடியாது, போய் டேக்ஸா வாங்கிவா என்றாள்.

நான் சரோஜாவிடம் டேக்ஸா கொடு இல்லை என் கடப்பாரையாவது திரும்பக்கோடு, அரை மணி ஆகிவிட்டது, அம்மா வையறாங்க என்றேன். நீ போம்மா நான் இன்னும் சிறிது நேரத்தில் கொண்டு வந்துக் கொடுக்கிறேன் என்றாள்.

அம்மா என்னைப் பிடித்துக் கொண்டு விட்டாள், “நீ என்ன பெரிய வள்ளல்னு நினைப்பா, நான் காரணமாகத்தான் அவர்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு தோட்ட சாமான்களைக் கொடுக்கிறேன், இல்லை என்றாள் நமக்கு வேண்டுகிற பொழுது அவர்கள் சாக்கு போக்கு சொல்லிக் கொடுக்கமாட்டார்கள்” என்றாள்.

இப்பொழுது தெரிந்திருக்குமே உங்களுக்கு கடப்பாரைக்கும் டேக்சாவுக்கும் இடையே நான் பட்ட பாடு.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Paleo God said...

சின்ன வீடு, பெரிய தோட்டம்..:))

கும்மாச்சி said...

பலாபற்றை, சரியா பிடிச்சிட்டிங்க,

பித்தன் said...

கடப்பாரை romba perusoooooooooo

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.