பேருந்து நிறுத்தத்தில்
பெரும்பாலான நேரங்களில்
பிச்சை எடுக்கும்
பைத்தியம்
தொலைதூரப் பார்வை
அலைபாயும் கண்கள்
சடைபிடித்த முடி
அழுக்கேறிய உடை
கந்தல் பாவாடை
கையிலே சட்டி
எச்சிலை உண்டு
எறியும் வயிறு
பச்சிளம் வயது,
உப்பிய வயிறு
இவளிடமும் தன்
கைவரிசை காட்டி
வயிறு வீங்கவைத்து
ஆண்மையை அரங்கேற்றிய
ஆண்மகன் எந்த
ஆண்மையின் விளைவோ?
மனதை அறுக்கும்
இந்தக் கேள்விகள்
8 comments:
அய்யய்யோ எல்லாருக்கு புரியற மாதிரி இருக்கே? யாரும் ஒத்துக்க மாட்டாங்களே?
அவர்களை ஆண்மகனென்று சொல்லவே வாய் கூசுகிறது.மிருகங்களை விடக் கேவலமான ஜென்மங்கள்.அருவருப்பு மனச்சாட்சி என்பதைத் தாண்டி பூமியில் தப்பிப் பிறந்த அசிங்கங்கள்.
கவிதைக்குள் கொண்டு வந்தீர்கள்.நன்றி கும்மாச்சி.
அண்ணாமலயாருக்கும் ஹேமாவுக்கும் நன்றி.
இதுவா ஆண்மை. இதை போய் ஆண்மை என்று சொல்லலாமா?
கடைசி எட்டு வரிகளை கொஞ்சம் எடிட் பண்ணியிருந்தால்... மிரள வைத்திருக்கும்..
நெத்திஅடி.. இப்படி இருப்பவர்களை பார்க்கும்போதெல்லாம் வலிக்கும் எனக்கு..:(
பலா பட்டறை உங்கள் வருகைக்கு நன்றி.
மிக அருமையாக இருக்கிறது கவிதை. ச்சும்மா சுருக்குன்னு ஊசி ஏத்தற மாதிரியான கேள்வி.
வயிறு வீங்கவைத்து
ஆண்மையை அரங்கேற்றிய
ஆண்மகன் எந்த
ஆண்மையின் விளைவோ?
மனதை அறுக்கும்
இந்தக் கேள்விகள்
அருமையான கவிதை.பிடிச்சிருக்கு
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.