Friday 29 January 2010

மாசறுப் பொன்னே வலம்புரி முத்தே....................



















காலம் பல கடந்தாலும்
கடமைகள் பல கழிந்தாலும்
நேற்று நடந்துப் போல
நினைவுகள் நின்று போகின்றன
உனக்கு என்ன கோவில் குளம்
குழந்தைகள், கால சக்கரம்
கடந்து காட்டாற்று வெள்ளம்
தோழியாய், காதலியாய்,
நல்லாசிரியாய், என்னை
நல் நடத்தினாய்,


என் தனிமை உணர
உனக்கு நேரம் இல்லை
அடியே நமது இணைப்பின்
நன்னாள் நெருங்கும் நேரம்
“மாசறுப் பொன்னே
வலம்புரி முத்தே”
என்று கோவலன் போல்
காதில் சொல்ல விழைகிறது.
என் வாழ்வில் மாதவியும் நீதான்.


ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உனக்கு நம் திருமண நாள் நல் வாழ்த்துகள்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உனக்கு நம் திருமண நாள் நல் வாழ்த்துகள். //

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன தலை.. சொல்லவேயில்லை..இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

மனைவிக்குக் காதல் கவி தரும் சகோதரருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
க.னா.சாந்தி லக்‌ஷ்மணன்

மன்மதக்குஞ்சு said...

இப்ப தான் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கு.

ஆக்க பொறுத்திட்டாய். ஆற பொறுத்திடுவாய் (23ம் தேதி வரை}

இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.

மன்மதக்குஞ்சு said...

இன்னிக்கி தேதி 30 தான்பா. 1ந் தேதிதான்டா கரீக்கட்டான நாளு?!! (என் வூட்டுகாரி தான்பா ஸொல்லிச்சு)
வர்ட்டா.....

கும்மாச்சி said...

டேய் குஞ்சு நீ எங்கேயோ போயிட்டே.

ஹேமா said...

திருமண நாள் வாழ்த்துக்கள்....
உங்களுக்கும் கும்மாச்சி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.