Friday 22 January 2010

சபா நாயகர் வணக்கம் சொல்லவில்லை- சின்ன பிள்ளத்தனமால்ல இருக்கு.



இந்தக் கொடநாடு அம்மாவும், மஞ்சத்துண்டு தாத்தாவும் பண்ற லொள்ளு தாங்க முடியலடா சாமி.

அம்மா, என்னைப் பார்த்து வணக்கம் சொல்லலே, அழு மூஞ்சி காமிச்சாருன்றதும், அதுக்கு அந்த தாத்தா, நான் மூக்கை சிந்தினத அழுமூஞ்சி காமிச்சென்னு அந்தம்மா திரிச்சி சொல்றாங்க புழுகு மூட்டைன்னேல்லாம் பேசிக்கின்னு ஏதோ சின்ன பிள்ளத்தனமா சண்டையைப் போட்டுக்கிறாங்க.

ரொம்ப முக்கியம்டா சாமி.

இவர்களையெல்லாம் தானைத்தலைவர், தமிழினத்தலைவர், புரட்ச்சித்தலைவின்னு, அம்மா என்றெல்லாம் ஒரு கூட்டம் போஸ்டர் அடிச்சு பொழைச்சின்னு இருக்காங்க.
இவங்க இதவிட கேவலமான ரேஞ்சுக்கு போய், கலைஞர் டிவி யிலும் , ஜெயா டிவி யிலும் திரும்ப திரும்ப காமிச்சு நம்மளை ரப்ச்சர் பண்ற நாளு ரொம்பத் தொலைவில் இல்லை.

அந்தம்மா போயஸ் கார்டன் கோபாலபுரம் வழியா போகும்போது எங்க வீட்டில் எச்சில் துப்பிச்சின்னு தாத்தா சொல்ல, அதுக்கு அந்த அம்மா நான் அவர் வீட்டு வாசல்ல வரும் பொழுது பாக்கு பல்லுலே மாட்டிக்கிச்சு அதைதான் துப்பினேன் சொல்றதும்.

அடுத்த நாள் தாத்தா டிவி ல அம்மா எச்சி துப்புனா மாதிரி ஸ்டில் காமிக்கறதும்.

பதிலுக்கு ஜெயா டிவி ல மைனோரிட்டி தி.மு.க அரசின் தலைவர் என் மேல் அபாண்டமாக பொய் கூறி ஒரு புகைப் படத்தை வேறு போட்டிருக்கிறார், அதில் நான் பச்சை புடவை கட்டிக்கொண்டு, செருப்பு போட்டுக் கொண்டிருப்பதாக உள்ளது. ஆனால் அன்று சிகப்பு புடவை கட்டி, ஷு போட்டுக் கொண்டிருதேன். மேலும் நான் பாக்கை வெளியில் துப்புவது கிடையாது, உ.பி.ச கையில்தான் துப்புவேன், இந்த சின்ன விஷயம் கூடத் தெரியாமல், கருனாநிதி ஏதேதோ உளறுகிறார் என்றெல்லாம் பார்க்காமலாப் போகப்போறோம்.

யாரவது இந்தத் தமிழ் மானத்தை தாத்தா கிட்டேயிருந்தும் அம்மா கிட்டேயிருந்தும் காப்பாத்தினா, மக்கள் அவருக்கு முக்குக்கு முக்கு சிலை வைக்க தயாரா இருக்காங்க.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

மன்மதக்குஞ்சு said...

எதை வேணா பண்ணுங்கோ, ஆனா முக்குக்கு முக்கு சிலை மட்டும் வேணாம். ஏற்கனவே வச்ச சிலைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அரசாங்கம் செலவழிக்குது. போதும் சிலைகள்.

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... அய்யோ... இரண்டு தொலைக் காட்சிகளின் செய்திகளைப் பார்த்து எப்படி இன்னும் சட்டையை கிழிச்சுக்காம நல்ல மன நிலையில் இருக்கீங்க..

sathishsangkavi.blogspot.com said...

என்ன செய்வது அவர்கள் சொல்லுவார்கள்... நாம் ஏன் கேட்கவேண்டும்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
" நீங்க மட்டும் பதிலுக்கு , அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
வணக்கத்துக்கு , பதில் வணக்கம் போடாம இருப்பாங்களா?

முதல்ல இந்தப் முக்கிய பிரச்சனைய, எல்லோரும் சேர்ந்து முடிங்க.. எங்க பிரச்சனைய மெதுவா பார்க்கலாம்...

அதுவரைக்கும்
நீங்க குடுத்த இலவச வேட்டியக் கட்டிகிட்டு ,
வாழும் வள்ளுவர் குடுத்த , ஒரு ரூபா அரிசியில சமையல பண்ணிட்டு ,
டாஸ்மார்க் சரக்கப் போட்டுட்டு ,
இனப்பெருக்கம் பண்ணிட்டு இருக்கோம்...)

நாடோடி said...

இன்னுமா இந்த இரண்டு சேனல் செய்திகளை பார்க்குரீங்க....அய்யோ ! அய்யோ !

தமிழ் உதயம் said...

ஒரு இடுகைய வீணடிச்சிட்டிங்களே.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.