Tuesday 19 January 2010

தேவை ………….(நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே)


நூறாவது பதிவு நாங்களும் போட்டுட்டோம்லே. நூறாவது பதிவுலே "சொந்தத்துலே ஒன்றும் சுட்டதுலே ஒன்றும் போட்டிருக்கேன்". எல்லாம் கவுஜ தான், படித்துவிட்டு வோட்டை சரியாக் குத்துங்க. ஒரு வோட்டு குத்தினா ஒரு வோட்டு ப்ரீன்னு "வேட்டைக்காரன்" ரேஞ்சுக்கு நாங்களும் இறங்கிடுவோம்லே.

தேவை

காலையில் எழுகையில்
கவலையற்ற கண்விழிப்பு
கனிவுடன் கடமையாற்ற
கள்ளமில்லா மனது

மாலையில் வீட்டில்
மலர்ந்த முகத்துடன் மனைவி
இனிதே குடும்பத்தினருடன்
இடரில்லா ஓய்வு

சத்தமில்லா சங்கீதம்
குற்றமில்லா உள்ளம்
உற்ற நண்பர்கள்
மற்றவை பெரிதில்லை

பெற்ற இவை யாவும்
போற்ற மனம்
இருந்தால் காணி நிலம்,
காசு பணம் தேவை இல்லை.


ஒரு சாப்ட்வேர் பொறியாளரின் கடைசி கானம்

வீடு வரை விண்டோஸ்
வீதி வரை என்.டி.
காடு வரை யுனிக்ஸ்
கடைசி வரை யாரோ?

தொட்டிலுக்கு பேசிக்
கட்டிலுக்கு யாஹூ
பட்டினிக்கு பாப்கார்ன்
கெட்டபின்பு யு. எஸ்.

Follow kummachi on Twitter

Post Comment

22 comments:

அண்ணாமலையான் said...

கடேசில இப்டி இருக்கலாமா?
“பட்ட பின்பு இந்தியா”
எப்பூடி..!?

கும்மாச்சி said...

நன்றி அண்ணாமலையான், ரொம்ப வேகம்தான். என்ன நிலம் வாங்குற கதை என்னாச்சு.

Paleo God said...

வாழ்த்துக்கள்,::)

(போன பதிவுல பின்னூட்டம் போட முடியல, நல்லா கும்மியிருந்தீங்க:) )

அண்ணாமலையான் said...

வாங்கலாமா வேனாமான்னு நீங்கதான் முடிவு செய்யனும்..

Unknown said...

nalla than irukku...,

Unknown said...

valthukkal..,

க.பாலாசி said...

நூறாவது இடுகையும், கவிதையும் அருமை...

வாழ்த்துக்கள்...

ஹேமா said...

100 ன் பதிவுக்கு வாழ்த்துக்கள் கும்மாச்சி.நினைப்பது எல்லாமே நல்லபடியா நடக்கும்.

கமலேஷ் said...

உங்களின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...கவிதைகள் மிகவும் அருமை...உங்களின் மற்ற பதிவுகளையும் படித்தேன் மிக நன்றாக இருக்கிறது தொடருங்கள்...

கும்மாச்சி said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

கண்ணகி said...

வாழ்த்துக்கள்.100வது பதிவிற்கு கும்மாச்சி.அண்ணாமலையார் சொன்னதையே வழிமொழிகிறேன்.

கண்ணகி said...

அழகான படம்..

மாதேவி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் பதிவுகளும் வாழ்த்துக்களும்..

sathishsangkavi.blogspot.com said...

100 ன் பதிவுக்கு வாழ்த்துக்கள்...

vasu balaji said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்

கும்மாச்சி said...

அனைவருக்கும் நன்றி, வானம்பாடிகள் (பாலா) வெகு நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து பின்னூட்டம், மகிழ்ச்சியாக இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

மணிஜி said...

வாழ்த்துகள் நூறாவது இடுகைக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தல.. :-))))))))

செ.சரவணக்குமார் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

கும்மாச்சி said...

வாங்க கார்த்திகைப்பாண்டியன், என்ன ரொம்ப நாளாக நம்மப் பக்கம் காணோம்.

CS. Mohan Kumar said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.