Thursday 13 October 2011

கலக்கல் காக்டெயில் -44

என்னதான் நடக்குது?

சமீபத்தில் சென்னை பெண் ஷமீலா மூணாறில் கொலை செயப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவளது கணவனும் தன் சொந்த ஊரில் (கோபிசெட்டிபாளையம்) தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலைக்கு முன்பு அவன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் போலிஸ் கையில் கிடைத்துள்ளது. அதில் தன் மனைவி பத்து பேருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததனால் கொன்றதாக எழுதியுள்ளான். அதைத் தொடர்ந்து போலிஸ் அந்த பத்து பேரையும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

படித்தவர்கள் இது போல் நடந்து கொள்வது உறுத்துகிறது. முன்பெல்லாம் மண், பெண், பொன் ஆசை எல்லாம் கேடு விளைவிக்கும் என்று சொல்லிகொண்டிருந்தனர், இப்பொழுது மண், பொன், ஆண் என்று மாற்றி சொல்லவேண்டும் போலிருக்கிறது. கடவுளே இந்த ஆண்களை எல்லாம் காப்பாற்று.

இடைதேர்தல் .

திருச்சி இடை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அறுபது சதவிகிதம்தான் வாக்குப் பதிவாம். குறைந்த வாக்குப் பதிவு என்றால் வெற்றியை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

குஷ்பு பிரசாரம் செய்த இடைதேர்தல் வாக்குப் பதிவைப் பார்த்தால் இது “தமண்ணா இடை” தேர்தல் போலிருக்கிறது.

அம்மா மக்களுடன்தான்  

இன்று அம்மா உள்ளாட்சி தேர்தல் ஒட்டு வேட்டையில் கூடங்குளத்தில் பேசும்பொழுது கூடங்குளம் விவகாரத்தில் நான் மக்கள் பக்கம் என்று சொல்லியுள்ளார்கள். மக்களே உஷார்.

இதெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரையில்தான்.

ரசித்தவை

ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

பசியில எழுதிருக்காங்க போலும்.

பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு
ஆவிதான் போயின பின்பு யாரோ அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.

அம்மையாருக்கு முன்பே தெரியும் போலும் 2ஜி விவகாரம்.

நகைச்சுவை

சும்மா சிரிச்சிட்டு போங்க


மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது ஒரு தனி சுகம்

ஜொள்ளு 

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

settaikkaran said...

//இது “தமண்ணா இடை” தேர்தல் போலிருக்கிறது.//

தமண்ணா யாரு? தமன்னாவோட அண்ணாவா? :-)

கும்மாச்சி said...

சேட்டை உம்மகிட்டேயிருந்து தப்பிக்கவே முடியாது.

நன்றி பாஸ்.

பால கணேஷ் said...

ம்ம்ம்... நல்ல தொகுப்பு.

Unknown said...

மாப்ள கலக்கல்...அதுவும் ஆண் மற்றும் அம்மா விஷயங்கள் டாப்!

கும்மாச்சி said...

நன்றி விக்கி.

Unknown said...

கலக்கல் விஷயங்கள் அண்ணே போட்டோ ரெண்டும் ம் ம்.. எங்கே தான் தேடி எடுபீங்களோ ஹா ஹா ஹா

கும்மாச்சி said...

ரமேஷ்பாபு உங்கள் வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கூடங்குளம் விவகாரத்தில் நான் மக்கள் பக்கம் என்று சொல்லியுள்ளார்கள். மக்களே உஷார்.
இதெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரையில்தான். /

உணமைதான்.

கும்மாச்சி said...

ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.