Thursday 20 October 2011

திசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்


கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று “தி.மு.க” மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். போராட்டதிற்கு ஆதரவாக இதை தெரிவித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் அதற்கு அடுத்த சொல்லியது தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்புக்குறியது என்ற கூற்று சந்தேகத்தை எழுப்புகிறது. 

இந்த போராட்டம் தொடங்கிய பொழுது நானும் இதை ஆதரித்தேன், அணு மின்நிலையம் வேண்டாம் என்பதற்காக அல்ல, அதனுடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தி மக்களின் நம்பிக்கை தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ஆனால் இப்பொழுது போராட்டக்குழு போகும் திசையைப் பார்த்தால் இதில் உள்ள உண்மையான கொள்கை சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. மேலும் மத்திய அரசு அமைத்துள்ள பாதுகாப்பு குழுவையும் சந்திக்க மறுக்கிறது. 

அணு மின்நிலையம் பற்றிய என்னுடைய போன இடுகை பார்க்க

உலகில் எழுபத்தி மூன்று நாடுகள் அணுமின் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட தொளாயிரம் அணு மின்உலைகள் உற்பத்தியில் உள்ளன. இந்தியாவில் மட்டும் இருபத்தியேழு மின் உலைகள் உள்ளன. அவற்றில் தாராப்பூர் மின்உலை ஆயிரத்தி தொளாயிரத்து அறுபத்தி இரண்டாம் ஆண்டு முதல் உற்பத்தியில் உள்ளது. இரண்டு அணு மின் உலைகள் நூற்றி அறுபது மெகவாட் மின்சாரம் ஒவ்வொரு மின் உலையிலிருந்தும் உற்பத்தி செய்கிறது. இன்று வரை எந்த ஒரு அசம்பாவிதம் நடந்ததாக குறிப்பு ஏதுமில்லை.

காற்றாலை மூலமாகவோ அல்லது சூரிய ஒளி மூலமாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யாது. மேலும் இதை அமைக்க உண்டாகும் செலவும், மற்றும் இயக்கும் செலவும் மிக மிக அதிகம். 

வளரும் நாடுகளின் தேவை அணுமின்நிலையம். அதற்கு கடலோர மாநிலங்களின் உதவி தேவை. மேற்கு வங்கம் இதை எதிர்த்ததனால் இழந்த இழப்பு அதிகம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பின் நான் பார்த்த கொல்கத்தா இப்பொழுதும் அப்படியே இருப்பது வளர்ச்சியா வீழ்ச்சியா? தெரியவில்லை.

கூடங்குளம் இவ்வளவு செலவு செய்த பின் உற்பத்தியை தடுப்பது நியாயமாக தோன்றவில்லை.

கடலோரா மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சொல்பவர்களுக்கு கடலில் இருக்கும் NORM (Naturally Occurring Radioactive Materials) பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்?.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Philosophy Prabhakaran said...

எல்லாம் அரசியல்... நெருப்பு மாதிரி வேலை செய்யணும் கொமாரு...

settaikkaran said...

அரசியல்! அரசியல்!!

கூடல் பாலா said...

நண்பருக்கு வணக்கங்கள் .சக பதிவர் என்ற முறையிலும் போராட்டம் நடக்கும் மண்ணை சார்ந்தவன் என்ற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறுகிறேன் .

எங்கள் போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை பாது காப்பானதா அல்லது பாதுகாப்பில்லாததா என்ற விஷயம் முக்கியமானதில்லை

கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கவிருக்கும் நாற்பது ஆண்டு காலத்தில் என்றேனும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முன்னேற்ப்பாடுகள் இருக்கவேண்டுமல்லவா ....ஆனால் இங்கு அந்த ஏற்பாடுகள் இல்லை ...

சமீபத்தில் ஜப்பானில் விபத்து நிகழ்ந்து அவசர நிலை பிறப்பிக்கப் பட்டதும் 30 கிலோ மீட்டருக்குள் வசித்த ஒன்றரை லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற்றப் பட்டார்கள் .

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டருக்குள் 9 .5 லட்சம்பேர் வசிக்கிறார்கள் ...விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி பாதுகாப்போம் என்று அரசு விளக்கிவிட்டாலே மக்கள் அச்சம் நீங்கிவிடும் ...ஆனால் அரசு இதற்கு தயாரில்லை என்பதால்தான் போராடுகிறோம் .....

இதுபோல இன்னும் சில காரணங்கள் உள்ளன எனினும் இது முக்கிய காரணம் ....

கும்மாச்சி said...

பாலா வணக்கம்,

உங்களின் போராட்டத்தின் குறிக்கோள் நியாயமானதே. அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அசம்பாவிதம் நிகழப் போகும் தருணங்களில் எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியமைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். அதற்கு உண்டான குழு Crisis Management Team, தேவையான உபகரணங்கள் எல்லாம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மேலும் சோதனை ஓட்டம் (Emergency Drill)ஒரு முறை அல்ல பல முறை செய்து மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.
முக்கியமாக இயற்கை பேரழிவுகளின் பொழுது Fail Safe Shutdown என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவை இயங்கும் முறை சரி பார்க்கப் படவேண்டும்.

என்னுடைய கவலை இந்தப் போராட்டம் அரசியல் சூறாவளியில் அடிபட்டு நீர்த்து போகக்கூடாது என்பதே.

மற்றபடி உங்கள் நியாமான கோரிக்கைக்கு ஒரு சக பதிவர் என்ற முறையில் என் ஆதரவு இருக்கும்.

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

சகோ. கூடல் பாலாவின் கோரிக்கை போன்ற எதையும் அணுமின் எதிர்ப்பு கமிட்டி வைத்துள்ளதாக திரு. உதயகுமார் தொலைகாட்சிகளில் அல்லது நாளேடுகளில் அறிவிக்கவில்லை என்பதை நாம் நினைத்து பார்க்க கூடிய சூழலில் இருக்கிறோம். அவரது பிரதானமான கோரிக்கை ஒன்றே ஓன்று தான் " அது அணு மின் நிலையத்தை மூட வேண்டும்"

சகோ. பாலா சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி அணு மின் எதிர்ப்பு கமிட்டி ஏன் கேட்கவில்லை என்பது அவர்களுக்கும் ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம்.

நிவாஸ் said...

அரசியல் நிக்கம் இருக்க நிச்சயம் வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை சகா,

ஆனால் இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.

அ.தி.மு.க முழுவதுமாக மக்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, தீர்மானங்கள் நிறைவேற்றுகிறது, ரஷ்யாவின் ஒப்பந்தம் என்பதால் போராட்டத்தை எதிர்க்கக் கூடிய கம்னியுஸ்டும் எந்த வித எதிர்ப்பு தெறிவிக்காமல் அமைதி காக்கிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தி.மு.க வை வெளியேற சொல்வது என்பது ஒட்டுமொத்த தமிழரின் எதிர்ப்பை தெரிவிக்கவே அன்றி வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை என்பதை நம்புகிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

கூடல்பாலாவின் கருத்துதான் என் கருத்தும்.

காட்டான் said...

வணக்கம் கும்மாச்சி
பாலாவின் கருத்தே எனது கருத்தும்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..

Robin said...

//அ.தி.மு.க முழுவதுமாக மக்களுக்கு சாதகமாக செயல்படுகிறது// Super Joke :)

சி.பி.செந்தில்குமார் said...

பாலாவின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன

Anonymous said...

கல்பாக்கம் மற்றும் 20 இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் திறமையாக இந்திய அணுசக்திக் கழகம் எந்த ஆபத்துமின்றி அணுசக்தி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது - இது தான் பல படித்த முட்டாள்களின் வாதமாக இருக்கிறது. தங்களைத் தவிர இந்த நாட்டில் எல்லாரும் மடையர்கள் எனக் கருதும் ஒரு கூட்டமும் இதையே தான் கிளிப்பேச்சு போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. வள்ளுவர் கூறுவது போல் அவர்கள் கூற்றைக் கொஞ்சம் கூர ஆராய்ந்தால் உண்மை புலப்படும். இந்த 20 இடங்களில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரம் எவ்வளவு? ...சுமார் 4300 மெகாவாட்...அதாவது சராசரியாக ஒவ்வொரு இடத்திலும் 200 மெகாவாட். ஒவ்வொரு இடத்திலும் கிட்டத்தட்ட 4, 5 யூனிட்டுகளை வைத்து 200 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த கணக்கு ஞானப்படி....ஒரு யூனிட்டின் திறன் 40-50 மெகாவாட் தான். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளவை ஒவ்வொரு யூனிட்டும் 1000 மெகாவாட் திறன் கொண்டவை. மொத்தம் 8000 மெகாவாட் வரை நிறுவுவது தான் திட்டம். The fact is that it is a different ballgame altogether. This is kind of first for Indian atomic industry. Moreover, all existing plants in India are more or less experimental in nature...all using Heavy Water. Koodankulam reactors are based on the disastrous Chernobyl model. The claim of cheap power using atomic plant is simply a smokescreen. The only convincing explanation for this plant could be for military-industrial purpose. But after losing the faith of Tamils, expecting Tamil people to accept such a risk for the larger good of North Indian+Tam Brahmin ruling class is just not acceptable. Anyway, they are hoping to break the opposition by making use of gullible sections of Tamil society by advancing arguments like 'to put an end to power crisis of Tamil Nadu', 'for the development of TN' etc. The fact is, TN's power deficit is only 22 crore units a day. But the power given to Karnataka, AP and Kerala in a day from Neyveli plant is 26 crore units.

Anonymous said...

aaramba kaala natkalil niruvappatta kalpaakam, rajasthan anu ulaigal 220 MW thiran kondavai mattume...athu natural uranium and heavywater model.but kudankulam is Enrichd and light water..athan pirahuTarapuril niruvappatta 540MW anu ulai nanraga thane seyal padugirathu...?
1000MW enbathu thozhil nutpa thiran valarchiye andri bayam kolla thevai illai...technical aspects theriyamal pesathinga plz...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.