Friday 14 October 2011

களப்பணி


கட்டிங்வுட்டு கள்ள ஒட்டு போட்டேனா? இல்லை
க்வார்ட்டருக்கும் பிரியாணிக்கும் விற்றேனா? இல்லை
கைகட்டி தொண்டர் என்று பின் சென்றேனா? இல்லை
தலைவன் என காலில்தான் விழுந்தேனா? இல்லை
கடமையில் கைநீட்டி கையூட்டு பெற்றேனா? இல்லை
பணிசெய்ய தலைசொறிந்து நின்றேனா? இல்லை
தடியெடுத்து தலையில்தான் போட்டேனா? இல்லை
கத்தியால்தான் மத்தியில் குத்தினேனா? இல்லை
ஊர் முழுக்க கூத்தியாதான் வைத்தேனா? இல்லை
பேர்சொல்ல சின்னவீடுதான் வைத்தேனா? இல்லை
அறப்போராட்டத்தில் கல் வீசி எறிந்தேனா? இல்லை
சிரிப்புடனே சிறைதான் சென்றேனா? இல்லை
ஊரறிய உண்ணாவிரதம் இருந்தேனா? இல்லை
ஊழலைதான் ஒழிப்பேன் என்று சொன்னேனா? இல்லை
படத்தில்தான் பத்துபேரை துவைத்தேனா? இல்லை
வடநாட்டு நாயகியைதான் தொட்டேனா? இல்லை
பாட்டிகளை பாங்குடனே அனைத்தேனா?
ஈதனைத்தும் நினைக்கும் முன்னே நீ ஏனடா
கட்சியில் சேர்ந்து களப்பணியாற்ற சொல்கிறாய்? 

 
படத்துக்கும்  கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க

Follow kummachi on Twitter

Post Comment

21 comments:

settaikkaran said...

//படத்துக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லீங்க //

இது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இல்லை...இல்லை...

ரஹீம் கஸ்ஸாலி said...

kavithaiyai vida antha photo nallaa irukku hi..hi

குறையொன்றுமில்லை. said...

இல்லே இல்லே.

கும்மாச்சி said...

\\இது பரவாயில்லை. என் கவிதைக்கும் எனக்குமே சம்பந்தமில்லே! :-)//

நன்றி சேட்டை

கும்மாச்சி said...

\\இல்லை...இல்லை...//

எஸ்.ரா ஸார் வருகைக்கு நன்றி

கும்மாச்சி said...

Blogger ரஹீம் கஸாலி said...

kavithaiyai vida antha photo nallaa irukku hi..hi

நன்றி ரஹீம்

கும்மாச்சி said...

\\Blogger Lakshmi said...

இல்லே இல்லே.//

நன்றி மேடம்

தக்குடு said...

அட அட அட!! நான் கவிதையை(யும்) சொன்னேன்! :)

கும்மாச்சி said...

புது வருகை தக்குடு

உங்கள் வருகைக்கு நன்றி

கோகுல் said...

களப்பணி ஆற்றவா?போகிறோம்
களவாணித்தனம் செய்யதானே!

போலாம் ரைட்@

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கோகுல்

Unknown said...

அரசியல் களப்பணி செய்ய தகுதிகளை கவிதையை வடித்து சொன்ன கும்மாச்சிக்கு எனது பொன்னான வாக்குகளை அளிக்கிறேன்:)))))நன்றி.

கும்மாச்சி said...

பாஸ் உங்கள் வோட்டிற்கு நன்றி.

rajamelaiyur said...

படம் அருமை ...

rajamelaiyur said...

படம் அருமை ...

கவிதையும் அருமை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

சக்தி கல்வி மையம் said...

ஆமாமா படத்திற்கு சம்பந்தமில்லை.,
ஹா.ஹா..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கருண்.

மன்மதக்குஞ்சு said...

படத்துக்கும் கவிதைக்கு சம்பந்தம்
இல்லை!
இல்லை!!
இல்லை!!!
இல்லை!!!!
இல்லை!!!!!

கும்மாச்சி said...

எம் எம் குஞ்சு அதையேதான் நாங்களும் சொல்லியிருக்கோம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.