Monday 17 October 2011

கலக்கல் காக்டெயில் -45

ஒரே குட்டையில்

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் மாநில தேர்தல் ஆணையத்திடம் சரமாரியாக புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சோ ஐயரோ “பொதுமக்களிடமிருந்து புகார் வரவில்லை” என்ற ஓரே பல்லவியை திரும்ப திரும்ப பாடிக்கொண்டிருக்கின்றார் (ஏம்பா நான் சரியாதான் சொல்றேனா). பல வாக்குச்சாவடிகளில் நீதிமன்ற உத்தரவுப்படி வெப் காமெரா பொருத்தப் படவில்லையாம். போன முறை நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.

எல்லோரும் எதற்கு இந்த கவுன்சிலர் பதவிகளுக்கும், தலைவர் பதவிகளுக்கும் அடித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மை கருவிலிருக்கும் குழந்தைக்கு கூட தெரியும்.

வாழ்க ஜனநாயகம்.

கெடுவான்(ள்)

இரண்டு நாட்களாக கோலிவுட் கசமுசா கல்யாணம் நின்று போய்விட்டதாக ஊடகங்களிலும், இணையங்களிலும் செய்தி போட்டு கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்கு வேண்டுமானால் வருத்தமாக இருக்கலாம். மற்ற எல்லோருமே சற்றேரக்குறைய “--ரே போச்சு” போயா என்று அடுத்த வம்புக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேரளாவில் அந்த கதாநாயகியின் வீட்டின் முன் நெடிய வரிசையில்

யோவ் பின்னாடி போய் நில்லுயா, நான் காலையில் நாலு மணியில் இருந்து காத்திருக்கேன்.

மொத்தம் ஒன்பது பேர்தானாம்.

“ஒன்பது தாரம்னு தப்பா புரிஞ்சுகிட்டாய்ங்களோ”

தமிழில் போர்நோக்ராஃபி

தமிழில் போர்நோக்ராஃபி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் இருப்பதெல்லாம் “சாஃப்ட் போர்னோ வகை என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது தமிழில் போர்னோ வயசுக்கு வந்து விட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தங்கங்களையும், பத்திரிகை கதைகளையும் குறிப்பிட்டு ஆகத்தான் வேண்டும். சாரு  நிவேதித்தாவின் “எக்சிஸ்டன்ஷியலிசமும் பேன்சி பனியனும்” “கர்நாடக அரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும்” என்ற இவ்விரு புத்தகங்களின் எல்லை மீறிய கெட்டவார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லாது எல்லா வக்கிர உறவுகளையும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. “டோட்டல் டிஸ் இன்டக்ரேஷன்” “டோட்டல் ஃபார்ம்லஸ்னஸ்”

...........................கணையாழியில் சுஜாதா.

ஹைக்கூ

சாயங்கால இருளில்
கதவோர மலர்வளையம்
காற்றிலாடுகிறது.


ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

கோகுல் said...

சோ அய்யர் ச்சோ ச்சோ
//
ஒன்பது தாரமா?அடேங்கப்பா?
//
சாருவோடதா?அப்ப இருக்கும்!
//
ஹைக்கூ-வருடல்//

Philosophy Prabhakaran said...

நீங்க நினைக்கிற மாதிரி பிரபுதேவா நயன்தாரா இன்னும் பிரியல... அது வெறும் ஊடல்தான்...

மகேந்திரன் said...

சுவையான காக்டெயில்...

Unknown said...

பலர் வாழ்கைய மீடியாதான் முடிவு பண்ணுது போல...கலக்கல் காக்டைல்யா மாப்ள...லேட்டுக்கு சாரி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.