Monday 3 October 2011

அன்னாயாவினும் புண்ணியங்கோடி.............(முந்நூறாவது பதிவு)

பதிவுலகிற்கு வந்து கிட்டதட்ட இரண்டரை வருடங்களாகிறது. இது எனது முந்நூறாவது இடுகை.

மூளையை கசக்கிப் பிழிந்து (படுவா பிச்சி புடுவேன் பிச்சி.......)  என்ன பதிவு போடலாம் என்று குத்த வைத்து யோசித்ததில் பதிவுலகையும், பதிவர்களையும் பற்றியே எழுதுவது இந்த நேரத்தில் சரி என்று தோன்றியதால் இந்த பதிவு.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் பதிவிற்கு
பின்னூட்டமிட்டு ஓட்டளித்தல்.......................

என்ற வாக்கியத்தை மனதில் நிறுத்தி 
என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு, எல்லா திரட்டிகளிலும் ஓட்டளித்து ஊக்குவித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி.
பதிவுலகம் என்று ஒன்று இருப்பதையே மிகவும் தாமதமாக தெரிந்துகொண்ட அபாக்கியசாலிகளில் அடியேனும் ஒருவன். பின்பு திரட்டிகளில் பதிவுகளில் படித்து என்னுடைய மொக்கைகளையும் தொடங்கியது சரித்திரம்.

பதிவுலகில் முகம்பாராது சேர்ந்த நட்புகள் ஏராளம். இதில் நான் ரசித்த பதிவர்களை “சூப்பர்ஸ்டார் பதிவர்கள்” என்று தலைப்பிட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் வந்தேமாதரம் சசிகுமார், சேட்டைக்காரன், வெட்டிபேச்சு சித்ரா, அட்ராசக்க செந்தில், சும்மா தேனம்மை லக்ஷ்மன், நண்டு நொரண்டு எஸ்.ரா ஸார், பன்னிகுட்டியார், விக்கியுலகம் வெங்கட், புதிய வரவில் ஐடியாமணி, என்ற இவர்கள் எல்லோரிடமும் இவர்கள் பதிவுகளின் வாயிலாக உரையாடுவதாகவே எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் மேலும் சில பதிவர்கள் என்னை ரசிக்க வைத்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பதிவுலகம் என் ரசனைத் தன்மையை மேலும் மெருகேற்றுவதாகவே தோன்றுகிறது. விதவிதமான தகவல்கள், செய்திகள், அனுபவங்கள் என்று கவிதையிலோ, கட்டுரையிலோ அல்லது கதையிலோ காணும்பொழுது அதன் முழு வீச்சு நம்மை எளிதாக தாக்குகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி கொடுத்திருக்கும் பெரிய கொடை இது. 

நம்மில் எல்லோருக்கும் உள்ள எழுத்து திறமை, சிந்தனை, மற்றும் தொழில்நுட்ப திறைமைகள் போன்றவைகளை வெளிக்கொணர்ந்து, பகிரும் ஒரு மேடையாக அமைத்துக் கொடுத்ததில் கூகிளாண்டவரும், வேர்ட்பிரஸ் சாமியும் இன்ன பிற உபரி தெய்வங்களும் செய்த பணி அளப்பரியது. 

இந்த எழுத்து சுதந்திரம் எனக்கு பிடித்திருக்கிறது. கூடுமானவரை நம் எழுத்து மற்றவர்கள் மனதை புண்படாத வரை என்ற ஒரு எல்லை கோட்டில் நின்று எழுதினால் பிரச்சினை இல்லை. அப்படியும் அரசியல் பதிவுகளோ, அல்லது திரைப்பதிவுகளோ எழுதும் பொழுது யாரோ ஒருவர் கோபம் கொண்டு நம்மை வசை  பாடுவது தவிர்க்க இயலாததுதான். இதையும் மிகவும் நளினமாக தவிர்த்து எழுதிக் கொண்டிருப்பவர்கள்தான் நான் மேற்கூறிய பதிவர்கள்.

இந்த தருணத்தில் இவர்கள் எல்லோரையும் அவர்கள் பணி மேலும் தொடர வாழ்த்தி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

Anonymous said...

300..Hearty Congratulations...

கும்மாச்சி said...

நன்றி ரெவ்ரி.

RVS said...

அடடா!!
//அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் பதிவிற்கு பின்னூட்டமிட்டு ஓட்டளித்தல்.//

திருவாசகம்ங்க... கண்டிப்பா எவ்ளோ பெரிய உண்மை....

RVS said...

முன்னூறு... மூவாயிரம், மூன்று லட்சம், மூன்று கோடி என்று பல்கி பெருக வாழ்த்துகள்!! :-)

கும்மாச்சி said...

ஆர்.வி.எஸ் வாழ்த்துகளுக்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் தலைவரே.

settaikkaran said...

300-க்கு முதலில் பூங்கொத்தைப் பிடியுங்கள்! வாழ்த்துக்கள்! மென்மேலும் தொடர்ந்து பல இடுகைகளை எழுதி அசத்த எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! :-)

கும்மாச்சி said...

சேட்டை, ப.கு. ஸார் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

முன்னூறுக்கு வாழ்த்துக்கள் பாஸ், உங்கள் சேவை தொடரவேண்டும்..

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்ள!

நாய் நக்ஸ் said...

Congreats....

நாய் நக்ஸ் said...

Good......vazhthukkal.....

Unknown said...

வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா ..

சமுத்ரா said...

All the best ku(gu)mmachi

சக்தி கல்வி மையம் said...

300, வாழ்த்துக்கள் சகோ..

மன்மதக்குஞ்சு said...

முன்னூறாவது பதிவில் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்

K said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணே!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.