Wednesday 19 October 2011

வயிற்றுப் போக்கு (பயலலிதா|)

நாளை முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து “முதலமைச்சருக்கு வயிற்றுப் போக்கினால் பெங்களுரு நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்டிருக்கிறார்” என்று ஒரு அறிக்கை வந்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
முதலமைச்சரின் சார்பில் கால அவகாசம் கேட்டு முறையீடு செய்யப்பட்ட  மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததில் நீதிபதிகள் கால தாமதம் செய்வதை கண்டித்திருக்கின்றனர்.  
மேலும் கர்நாடக அரசின் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறது. ஆனாலும் முதலமைச்சர் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்கள் தொண்ணூற்றி ஆறு மணி நேரம் முன்பு அறிவிக்கப் படவேண்டிய வரைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு இந்த வழக்கில் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன.
ஜெ ஏன் இந்த வழக்கில் ஆயிரம் முட்டுக் கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்?
நெஞ்சு வலி முதல், தும்மல், இருமல், தமிழில் குற்றப் பத்திரிகை வேண்டும் என்று இந்த வழக்கை எவ்வளவு தாமதப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்துவிட்டனர்.
இந்த முறை வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு போன்ற காரணங்கள்தான் மிஞ்சியிருக்கின்றன.
இதற்கு என்று தனி ஆலோசனை குழு நியமிக்கப்பட்டு மேலும் நாம் சற்றும் எதிர்பாராத  “டுபாக்கூர் காரணங்கள்” வந்தாலும் வரலாம்.
ஆனால் இவரை ஏதோ ஊழலை ஒழிக்கப் பிறந்தவர் என்று ஒரு கூட்டம் கொண்டாடுவதைதான் சகிக்க முடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

மன்மதக்குஞ்சு said...

வாய்தா ராணிக்கு சரியான சாட்டையடி..
இன்னுமாடா இந்த உலகம் நம்புது இவங்க கோர்ட்டுக்கு போவாங்க என்று....

Unknown said...

மாப்ள அது எந்த கூட்டம்..மன்னர் பரம்பரையால நொந்த கூட்டமோ ஹிஹி!

rajamelaiyur said...

கலக்கல் பதிவு

rajamelaiyur said...

இன்று என் வலையில்

நடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா

கோகுல் said...

ஊழலை ஒழிக்கப் பிறந்தவரா?எங்கே?எங்கே?

//
sir,
as i'm suffering from fever iam not able to attned the class.
yours
truly
bayalalitha!

K said...

கும்மாச்சி, நீங்கள் எப்போதும் வித்தியாசமான பார்வைகளையே முன்வைப்பீர்கள்! இதுவும் ஒரு வித்தியாசமான தில்லான பார்வைதான்! சூப்பர்!

Philosophy Prabhakaran said...

ஆத்தாளுக்கு ஒடம்பு சரியில்ல சுப்ரமணியபுரம் காமெடிதான் நினைவுக்கு வருது...

அம்பாளடியாள் said...

அதிரடிப் பதிவோ ....!!! வாழ்த்துக்கள். மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......

Anonymous said...

"neenga ezhuthalaam. naanga ezhuthamudiuma?" sari,chennaikku
eappa vareenga?



---swami kusumbanantha.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.