Sunday 2 October 2011

சொல்றாங்க (கொல்றாங்க) யுவர் ஹானர்


சேலத்தில் தொண்டர்கள் கேட்டுக்கொண்டதால் தெய்வத்துடனும், மக்களுடனுன் கூட்டணி வைத்தேன், இப்பொழுது மக்களுடன்தான் கூட்டணி...........................கும்பகோணத்தில் விஜயகாந்த் பேச்சு.
ஏன் கேப்டன் தெய்வம் கழட்டி வுட்டுடுச்சா? அதுக்குதான் சட்ட சபைக்கு தினம் போய் தொழுதிருக்கணும். 

ஒளி மயமான எதிர் காலம் என் கண்களில் தெரிகிறது..........................வை.கோ
எங்களுக்கு எல்லாம் எப்பொழுது ஐயா தெரியும்?

தூக்கத்தில் போவேனா, அல்லது தூக்கில் போவேனா என்று ஒரு அமைச்சர் பேசுகிறார், என் உயிர்  தூக்கத்திலோ அல்லது துக்கத்திலோ அவர்களைப் போல் “அம்மா” மடியில் போகாது. தமிழ் தாய் மடியில்தான் என் உயிர் பிரியும்..................கலைஞர் பேச்சு.
தலைவா கண்டவனெல்லாம் கல்லு உடரானுங்க. தேவையா? ஆனால் செய்த தப்ப ஒத்துக்காம பத்திரிகைகளை இன்னும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே? தமிழ் தாய் மடியில் தலை வைக்கும் முன்பாவது உணருங்க. (“அம்மா மடியில்” நக்கல் இன்னும் போகலியே)

சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்.............நடிகை சோனா    
ஐயோ அம்மணி போகாதீங்க (அப்படியே நூறு படம் புக் ஆகியிருந்ததாம்) எங்க தமிழ் திரைப்பட உலகும் ஜொள்ளுக்காக ஏங்கி செத்துடும்.
 
சச்சினுக்கு பில்டிங்கும் ஸ்ட்ராங் பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்..................சஹீத் அப்ரிதி
நம்ம வடிவேலு எப்போ அங்கே போனாரு?


தோள்களில் சூடி அழகு பார்க்க வெற்றி மாலை காத்திருக்கிறது, கண்ணியத்தோடு பெறுவோம்....................ஜெ. ..........தொண்டர்களுக்கு அறிவுரை
மாலைக்கு சோ ஐயர் கிட்ட சொல்லிட்டிங்களா?

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

K said...

எல்லாமே அசத்தல் கடிகள் கும்மாச்சி சார்! சோனா மேட்டர்! ஹி ஹி ஹி!!!!

அவ ஓய்வெடுக்கட்டும் சார்! ரொம்ப டயர்ட் ஆகியிருப்பா!

கும்மாச்சி said...

ஐடியாமணி வருகைக்கு நன்றி. சோனா பாவம் ஓய்வெடுக்கட்டும்.

Yoga.s.FR said...

என் உயிர் தூக்கத்திலோ அல்லது துக்கத்திலோ அவர்களைப் போல் “அம்மா” மடியில் போகாது.////17-ம் திகதி கனி வெளியே வந்து விடுவார் என்ற நம்பிக்கையோ?தெனா வெட்டுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை!

கோகுல் said...

ஏங்க சோனா எங்க போறாங்க?
மறுபடியும் முழு நேர பார்டிக்கா?

கும்மாச்சி said...

இல்லை கோகுல், சோனா எங்க ஊரான்டதான் வராங்கலாம்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

செம கடி சார்... அப்ரிடி சூப்பர்..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

//இல்லை கோகுல், சோனா எங்க ஊரான்டதான் வராங்கலாம்.//

ரணகலத்துளையும் இவருக்கு ஒரு கிளு கிளுப்பு...

Unknown said...

மாப்ள கலக்கல் கலாய்ப்புய்யா!

Anonymous said...

கொல்றீங்க...தொடர்ந்து இப்படி சமூக சிந்தனையோடு (?) எழுதுங்கள்...

BTW..சொனாக்கா நம்பர் கொஞ்சம் தாங்க...அவ்...

settaikkaran said...

மெய்யாலுமே இவங்க காமெடி தாங்க முடியலேதான். கொல்றாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னிட்டீங்க.......

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.