Thursday 25 April 2013

ஆருஷி கொலை வழக்கு

நொய்டா இரட்டை கொலை வழக்கு ஐந்து வருடம் முன்பு எல்லா ஊடகங்களுக்கும் நன்றாக தீனி போட்ட விஷயம். 2008 ம் வருடம் மே மாதம்  15ம் இரவு தேதி பதினான்கே வயதான ஆருஷி தல்வார் என்ற சிறுமி  தனது படுக்கை அறையில் கழுத்தறுபட்டு கிடந்தது தெரிய வந்தது. இவர் பல் மருத்துவர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார்,  நூபூர் தல்வாரின் ஒரே மகள். டெல்லி பப்ளிக் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதலில் இந்தக் கொலையில் அவர்கள் வீட்டு வேலைக்கார இளைஞன் ஹேமராஜ் என்பவரின் மீது சந்தேகம் விழுந்தது. அப்பொழுது அவன் தலைமறைவாகிவிட்டான் என்று எல்லா ஊடகங்களும் செய்திகள் பரப்பின, ஆனால் அடுத்த நாளே அவனது உடல் அதே வீட்டு மொட்டை மாடியில் கழுத்தறுபட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு முதலில் உ.பி.மாநில போலீசார் வசமிருந்தது. அவர்கள் டாக்டர் ராஜேஷ் தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்று அவரை கைது செய்தனர். ராஜேஷ்  அவருடன் வேலை செய்யும் அனிதா என்பவரிடம் தகாத உறவு வைத்திருந்தார், அது ஆருஷிக்கு தெரியவந்தது. ஆருஷி இதை ஹேமராஜிடம் சொல்ல இருவரும் அவரை கண்டித்ததால் கொன்றுவிட்டார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து ராஜேஷின் மனைவி நூபூர் முறையிட்டு, இது வேணுமென்றே என் கணவர் பெயரை கெடுக்க நடக்கும் சதி இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதன் படி நாற்பது பேர் கொண்ட சி.பி.ஐகுழு அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது.அதனுடைய முடிவைத்தான் சி.பி.ஐ அதிகாரி நேற்று முன் தினம் கோர்டில் சமர்ப்பித்தார்.

இந்த கொலை எதிர்பாராமல் நிகழ்ந்தது. சம்பவம் நடந்த மே பதினைந்தாம்  தேதி இரவு ராஜேஷும் அவரது மனைவியும் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். இரவில் ஏதோ சத்தம் வரவே ராஜேஷ்  தனது ரூமில் இருந்த கோல்ப் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு முதலில் வேலைக்காரன் தங்கியிருக்கும் அறையில் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமராஜ் அங்கில்லை. பின்னர் தனது மகளின் அறைக்கு சென்ற பொழுது அங்கே படுக்கையில் தனது மகளும் ஹேமராஜும் தகாத முறையில் இருப்பதைக் கண்டு கையில் உள்ள கோல்ப் ஸ்டிக்கால் அவன் மண்டையில் அடித்திருக்கிறார், இரண்டாவது முறை அடிக்கும் அடிக்கும் பொழுது அவன் தலையை திருப்பியதால் இரண்டாவது அடி ஆருஷியின் தலையில் இறங்கியிருக்கிறது. இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த நூபூர் ஆருஷியையும் ஹேமாராஜையும் செக் செய்து இரண்டு பேரும் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.  இது தான் சி.பி. ஐ கொடுத்திருக்கும் ரிப்போர்ட். பிறகு கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து ஆருஷியின் கழுத்தை அறுத்து அந்த ரூமிலே விட்டு விட்டு ஹேமராஜின் கழுத்தையும் அறுத்து ஒரு பெட்ஷீட்டில் சுருட்டி மொட்டை மாடியில் போட்டுவிட்டு அப்புறம் அப்புறப்படுத்தலாம் என்று வந்த விட்டனர்.

அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்த வேலைக்காரியிடம் ஆருஷியை ஹேமராஜ் என்ன செய்துவிட்டான் என்று தங்களது ஜோடனை ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.

உ.பி.போலீசுக்கும், சி.பி.ஐக்கும் அன்று இரவு அங்கே கிடந்த விஸ்கி பாட்டிலில் இருந்த ஹேமராஜின் ரத்தக் கரைதான் கிடைத்த முதல் க்ளூ. ஹேமராஜ் தலைமறைவு என்ற ஊடகங்களின் வம்பிற்கு முற்றுபுள்ளி வைக்க கிடைத்த ஆதாரம்.

வழக்கு எப்படியோ போகட்டும். சி.பி. ஐ சொல்லுவதே உண்மையாக இருந்தாலும் பதினான்கு வயது பெண் பெற்றோராலே கொல்லப்படுவது அநியாயம். அந்தப் பெண் அந்த வயதில் வேலைக்கார இளைஞனுடன் உறவு வைத்திருந்தற்கு அவளின் தனிமையே காரணம். பெற்றோரால் கொல்லப்பட்ட அந்தப் பெண் செய்த தவறு என்ன? யார் யார் காரணம்? இதையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது இந்த பொருள் தேடும் வாழ்க்கையில் பெற்றோர்கள் கடமை தவறி நடந்தால் எதையெல்லாம் இழக்க நேரிடும் என்று தெளிவாகவே தெரிகிறது.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தக் கொடுமைக்கு பெற்றோர்கள் தான் முழுக் காரணம்...

நந்து said...

இப்ப பேரன் பேத்தி எடுத்தவனையெல்லாம் இளைஞன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்க போல! :)

கும்மாச்சி said...

நந்து வருகைக்கு நன்றி.

பூ விழி said...

கொடுமைதான் இரண்டு பக்கமும்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.