Monday 8 April 2013

கலக்கல் காக்டெயில்-107

ஸ்ஸ்ஸ் ....ப்பா தாங்க முடியல

சென்னையில் ஆறு வாரம் தங்கிவிட்டு ஆணி பிடுங்கும் கடமை அழைத்ததால் திரும்பி வந்துவிட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொளுத்திய வெயில் எப்படா திரும்பி வருவோம் என்றிருந்தது.  இங்கு வந்தால் தட்பவெட்ப நிலை குளுமையாக இருக்கிறது.  வர வர பாலைவனங்கள் சோலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம்மூரு பாலைவனமாகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

திரும்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு காலையில் ஐந்து மணிக்கே மின்சாரம் போய்விட்டது. சரி நேரத்தை மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் ஏழு மணிவரை வரவில்லை. ஒன்பது மணிக்கு இஸ்திரி முருகன் வந்த பொழுது என்ன முருகா மின்சாரம் நாம் ஏரியாவிலேயே இல்லையா என்றால், சார் உனுக்கு தெரியாதா நாலாவது தெருவில் ட்ரான்ஸ்பார்மர் எரிந்துவிட்டது என்றான். சரி யாரவது ரிப்பேர் செய்து கொண்டிருக்கிரார்களா என்றால் அடப்போ சார் இது என்ன துபாயா, பதினோரு மணிக்கு தான் வருவானுங்க என்றான். ஒரு வழியாக மின்சாரவாரிய ஆட்கள் வந்து வேலையை தொடங்க ஒரு மணியாகிவிட்டது. எப்பொழுது கேட்டாலும் அரை அவர்ல முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டே இரவு ஏழு மணியாகிவிட்டது. நான் வேறு தெரியாத்தனமாக காக்கி ட்ரவுசருடன் அங்கு நின்றுகொண்டிருந்ததால் ஏதோ மின்சாரவாரிய ஆளென்று நினைத்து என்னிடம் ஆளாளுக்கு எப்போ வரும் எப்போ வரும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயில் கசிந்து ரிசர்வாயர் காலி ஆனதால் எரிந்து விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். மின்சார வாரிய ஆட்கள் ஆயிலுக்கு அலைந்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக வந்து ஒரு பெருசு "எப்ப வரும் கரண்டு, இன்னது ஆயில் இல்லையா பின்ன இன்னா மசுருக்கு போன வாரம் காலையில் ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை நிறுத்தி வேலை செய்தீர்கள், அப்ப லீக் பார்க்கலையா" என்று என்னிடம் சொல்லிவிட்டு அம்மா ஆட்சி எதிர்கட்சி உறுப்பினர் போல் அப்பால் நகர்ந்து ஊருக்கு வெளிநடப்பிற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.

லேகிய பார்ட்டிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் "முஸ்லி"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி விற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார்.  தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா?

இவர்களுக்கு குதுப்மினார் முன்பு ஸ்தூபியைக் காட்டி சாண்டேகா தேல் (உடும்பு தைலம்) விற்கும் வியாபாரி எவ்வளவோ மேல்.

ரசித்த கவிதை 

பயனில பாராமை 

பயன்படுத்தவும் முடியாமல்
பழுது பார்க்கவும் இயலாமல்போன
பலதரப்பட்ட பொருட்களையும்
பக்குவமாக சேர்த்துவைக்கும் அம்மா
பாசத்துக்காக இல்லாவிடினும்
பழைய எடைக்கு எடுப்பதாக
இருந்தாலாவது
பாட்டியையும் தாத்தாவையும்
பக்குவமாக பார்த்திருப்பாள்

..................................நண்பன் கணேஷ்

ஜொள்ளு 




08/04/2013





Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வேலை தப்பித்து விட்டீர்கள்... வெயில் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது... மின்வெட்டு வேறு (14 மணி நேரம்..!)

கவிதை அருமை...

நம்பள்கி said...

எந்த மத்திய கிழக்கு நாடு? அங்கெல்லாம்...இது மாதிரி அசிங்கங்களை அரசாங்கம் போது வெளியில் அனுமதிக்கவே அனுமதிக்காது என்றும் மேலும், தண்டனயும் பயங்கரமாக இருக்கும் என்று கேள்விப்பப்ட்டேனே!

நம் கையில் கூட எசகுபிசகான படங்கள் இருந்தால் தண்டனை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கேனே? மரண தண்டனை என்றும் கேள்விப்பட்டிருக்கேனே?
____________________________
மத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் "முஸ்லி"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி விற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார். தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா?

கும்மாச்சி said...

அட போங்க நம்பள்கி சார், விளையாடாதீங்க, தமிழ் சேனலில் வருவதெல்லாம் அவுகளுக்கு இன்னும் புரியல.

மரணதண்டனை எல்லாம் உடான்சு.

Prem S said...

அமலா பால் கலக்கல்

அருணா செல்வம் said...

ஓ அப்படியா...?

நம்பள்கிக்குக் கொடுத்தப் பதில் ஆச்சர்யப்பட வைக்கிறது கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

பிரேம், அருணா வருகைக்கு நன்றி.

பூ விழி said...

கவிதை சூப்பர் காலையில் 9 மணியிலிருந்து 5 மணிவரை கரண்ட் கட் என்பது சர்வீஸ் காகவா எல்லாம் கண் தொடைப்பு

கும்மாச்சி said...

பூவிழி வருகைக்கு நன்றி.

ஜீவன் சுப்பு said...

கணேசின் சொல்லுக்கும் நன்றி .
கும்மாச்சியின் ஜொள்ளுக்கும் நன்றி ...!

கும்மாச்சி said...

ஜீவன்சுப்பு வருகைக்கு நன்றி.

sarathy said...


நல்ல புலம்பல் தான் ..... ஆனா... குரையாமல் ,வளர்ந்து கொண்டே போகிறதே ..... வாழ்க நம் தலைவர்கள்!

முத்தரசு said...

லேகியம் ........மிடில கும்மாச்சி சென்சார் இல்லையா அதான்

கும்மாச்சி said...

முத்தரசு வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சாரதி சார் வருகைக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

எப்பா என்ன இடுப்பு ?

சென்னையில் மின்தடை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுழற்சி முறையில் இரண்டு மணிநேரம் தடைபடும்... டிரான்ஸ்பார்மர் வெடிப்பது எல்லாம் உங்களுடைய கெட்ட நேரம்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பிரபா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.