Sunday 21 April 2013

கலக்கல் காக்டெயில்-108

புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தை மாதம் முதல் நாளா, இல்லை சித்திரை மாதம் முதல் நாளா என்பதை முடிவு செய்வது அரசியல் என்பது தமிழனுக்கு நேர்ந்த கொடுமை. உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எந்த புத்தாண்டை விமர்சையாக கொண்டாடுகின்றனர் என்று பார்த்தோமேயானால் ஆங்கில புத்தாண்டே ஆகும். அன்றுதான் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். போலிஸ் பாதுக்காப்பு எல்லாம் போட்டு நாம் குடும்பத்துடன் தெரியாமல் அந்தப் பக்கம் போனாலே ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு வந்த வழியே திருப்பி அனுப்பிவிடுவார். ஓட்டல்களில் சாப்பிட மேஜை முன் பதிவு செய்யவேண்டும். மிகவும் முக்கியமாக கொண்டாட்ட அளவை நிர்ணயம் செய்வது "டாஸ்மாக்" வருமானமே ஆகும். ஆக அந்த விதத்திலும் ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி முதல் தேதிக்கே முதலிடம்.

இந்த அழகில் சில கூட்டம் சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பு ஆரிய கூட்டத்தின் சதி வேலை என்றும், தை மாதம் முதல் தேதி திராவிடர்களின் அறிவு பூர்வமான சிந்தனை என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

தை மாதம் என்று அரசானை பிறப்பித்த தாத்தாவோ உகாதி, விஷு போன்றவைகளுக்கு உலகத்தினருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, ஆரிய புத்தாண்டில் விடுமுறை தின கொண்டாட்டத்தை தனது தொலைக்காட்சியில் "மார்பாட மயிலாட" என்று ஜொள்ளு விட வைப்பார்.

ஏதோ ஒரு புத்தாண்டில் நாடு நன்றாக இருந்தால் சரி.

அஞ்சலி புராணம் 

கடந்த சில நாட்களாகவே "அஞ்சலி அஞ்சலி" என்று ஊடகங்கள் புலம்பி தீர்த்துவிட்டன. காணாமல் போனவர் தானாகவே திரும்ப வந்துவிட்டார். இனிமேல்தான் உண்மை கதையே ஆரம்பிக்கப் போகிறது.

காசுக்காக உறவினர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் எனபது தெரியவரும். ஏற்கனவே "அட்ரா சக்க" வில் செந்தில் குமார் பொன்னியின் செல்வன் ரேஞ்சிற்கு பாகம் பிரித்து நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆதலால் புதியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இந்த வாரம் முழுவதும் ஊடகங்கள் அஞ்சலி புண்ணியத்தில் நல்லாவே கல்லா கட்டினார்கள்.

போன வருடம் விஜயகுமார் குடும்பம், அதற்கு முன் நித்தி- ரஞ்சிதா, இந்த வருடம் அஞ்சலி அடுத்த வருடம் ஊடகங்களுக்கு ஒரு சுண்டெலி குடும்பம்  கிடைக்காமலா போய்விடும்.

ரசித்த கவிதை 

" பேச்சு வரணும்னு
பேச்சியம்மன வேண்டிக்கிட்டு...
டாக்டரம்மா குடுத்த
மருந்தையும் ஊட்டிவிட்டு...
பேச்சு வந்த பின்னே
பள்ளிக்கூடம் அனுப்பி
'என்னடி சொன்னாங்க
ஸ்கூல்லன்னு
நான் கேட்க...
'பேசாத' ன்னு
சொன்னாங்கங்கம்மான்னு
சொன்னா என் மக."
                                             .................க. இளஞ்சேரன்


ஜொள்ளு




21/04/2013

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்நாளும் நன்னாளே...

கவிதை அருமை...

அருணா செல்வம் said...

புதுத் துணி என்னைக்குக் கிடைக்குமோ
அன்று தான் அனைவருக்கும் உண்மையான புத்தாண்டு.

கவிதை அருமை கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

மாதேவி said...

தமிழ் புத்தாண்டு படும் பாடு ஹ....ய்யோ.....

கவிதை அருமை.

கும்மாச்சி said...

மாதேவி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கவிதை கவர்ந்தது! புத்தாண்டு பற்றிய தங்கள் கருத்து சிறப்பு! நன்றி!

பூ விழி said...

கவிதை சூப்பர்

கும்மாச்சி said...

பூவிழி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.