Monday 12 August 2013

கலக்கல் காக்டெயில்- 119

மாண்புமிகு அம்மா, புரட்சித்தலைவியை ரொம்ப பிடிக்கும் 

எதிர்கால எம்.ஜி.ஆரு தன் படம் வெளியே வராததால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

முதலில் இந்தப் படத்தை வெளியிடுவதில் யாரிடமிருந்து சிக்கல் என்பதே தெளிவாக தெரியவில்லை. விஸ்வரூபம் கொடுத்த பாடத்தில் கொள்ளையடிக்கலாம் என்ற மனநிலையில் டுபாகூர் விளம்பரம் செய்யப்போய் திருப்பி அடிக்கப்பாட்டதா இல்லை உண்மையாகவே அரசியல் சூழ்ச்சியா என்பது இன்னும் நமக்கு புரியாத விஷயம். இந்த பிரச்சினையை கொளுத்தியவர்களுக்கே வெளிச்சம்.

இந்த நிலையில் தான் அணிலிடமிருந்து உதிர்ந்திருக்கும் முத்துக்கள் இவை. கொடநாடு போயி நுழைவாயிலேலே திருப்பி அனுப்பப்பட்ட மானஸ்தர் ரொம்ப நல்லவருப்பா, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு.

கூடவே ஒருத்தர் இவருக்கு சொம்படிச்ச மானஸ்தர் "உண்மை அரசர்" தகடு தகடு எங்கே என்று தெரியவில்லை.


சூனா சாமி 

சூனா சாமி தன் கட்சியை கலைத்து விட்டு "கலப்பையை" எடுத்துக்கொண்டு பா.ஜ.க வில் ஐக்கியம் ஆகிவிட்டாராம்.

சனியனை எடுத்து பனியனில் விட்டுக்கொண்டு கதைதான் இனி மோடிக்கு. மோடி வந்தால் ஈழப்ப்ரச்சினைக்கு விடிவுகாலம் என்று பேசியவர்கள், இனி அந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாட வேண்டியதுதான்.

மானாட மயிலாட பார்த்து...........

மானாட மயிலாட பார்த்து பொழுதைக் கழித்தவர்தான் இந்த கருணாநிதி என்று கொடநாட்டிலிருந்து அம்மா அறிக்கை விட "ஐயா" தன் பங்கிற்கு "நானே கேள்வி நானே பதில்" அறிக்கையில் அம்மா செய்த தொழிலைத்தானே அம்மையாரும் செய்தார் என்று நக்கலடித்திருக்கிறார்.

மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்படும். "பரப்பன அக்ராஹார" முடிவை வைத்து அர்ரெஸ்ட் நாடகமும் அரங்கேற வாய்ப்புள்ளது.

அம்மா கொடநாட்டிலிருந்து இன்று தனி விமானத்தில் வருகிறாராம். ரத்தத்தின் ரத்தங்கள் விமான நிலையத்தில் தவம்.

மணல் கொள்ளை

மணல் கொள்ளையில் தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம், மணல் கொள்ளை மறைப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப சினிமா படரிலீஸ் விவகாராம் நன்றாகவே உதவி செய்திருக்கிறது.

ரசித்த கவிதை 

காணிக்கை 

காணிக்கை செலுத்தியும்
வேண்டியதை
நிறைவேற்றுவதில்லை
தெய்வங்கள்
சாக்லேட்
கொடுத்தவுடன்
முத்தம் தந்துவிடுகிறது
குழந்தை.
--------------------------------ராஜேஷ்

கீச்சுகள் 

அவன் சத்தமில்லாமல் தான் முத்தம் கொடுத்தான், நான் அடித்த அடியில் தான் மற்றவர்கள் விழித்துக்கொண்டார்கள் #கொசுக்கடியேதான்---------நந்து talks

தேசிய கீதத்திற்கு நெளிந்து கொண்டிருக்கும் மக்கள், தெருவில் நடக்கும் சண்டைகளில் கொஞ்சமும் அசையாமல் நின்று வேடிக்கை பார்ப்பது ஆச்சர்யம்.-------------------டாக்டர் அண்ணாமலை

ஜொள்ளு 

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

JR Benedict II said...

ஹா ஹா கலக்கல் பாஸ்

கும்மாச்சி said...

ஹாரி வருகைக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

காணிக்கை கவிதை அசத்தல்..

rajamelaiyur said...

தலைவாக்கு சினிமா உலகில் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லையே ஏன்??

கும்மாச்சி said...

கருண், ராஜா வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல் .

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

K said...

டாப் டூ பாட்டம் எல்லாமே கலக்கல்! நான் உங்கள் பதிவைச் சொன்னேன் பாஸ்!

குழந்தைககள் கவிதையும் செம கலக்கல்!!!

கும்மாச்சி said...

பிரபல எழுத்தாளர் மணி மணி வருகைக்கு நன்றி.

ராஜி said...

ரசித்த கவிதையும், கீச்சும் செம.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Unknown said...

கன்னியின் முத்தம் பெற என்ன வழின்னுஆழ்ந்து யோசித்து சொல்லுங்க கும்மாச்சி !வேணுங்கிற காணிக்கையோ ,சாக்லேட்டோ கொடுத்து விடுகிறேன் !

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

மன்மதக்குஞ்சு said...

Nice

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.