Thursday 8 August 2013

சினிமா விருதுகள்

சமீபத்தில் சுஜாதாவின் "தமிழ் அன்றும் இன்றும்" என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். அதில் புறநானூறு, விமர்சனங்கள், சினிமா என்று கலந்துகட்டி எல்லா தலைப்புகளிலும் எழுதியிருந்தார். அதில் சினிமா விருதுகள் என்ற தலைப்பில் ஒரு பக்க கட்டுரை. அந்த கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியவை நாமும் வருடா வருடம் பார்ப்பதுதான். அதில் ஒரு pattern இருப்பதை அவர் கவனித்து அவருடைய பாணியில் எழுதியிருக்கிறார்.

இனி அவருடைய வரிகள்

மாணிக்சந்த் ஃபிலிம்பேர் அவரர்டு நிகழ்ச்சிகளை நடுராத்திரிவரை ராஜ் டிவியில் பார்த்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். பிதாமகன் படத்திற்கு எட்டு அவார்டுகளும் விஜயசாந்திக்கு வாழ்நாள் சாதனை விருதும் கொடுத்தார்கள். இந்த மாதிரி விழாக்களில் ஒரு "pattern" இருப்பதை ஒரு எளிய குக்கூ கடிகார மூளையால்கூட கவனிக்க முடியும்.

விழாவுக்கு வருகை தருபவர்கள்  மூன்று வகைப்படுவார்கள். விருது பெறுபவர்கள், புது நடிகைகள், வேடிக்கை பார்க்க வந்த ரசிகர் மன்றர்கள்.

நட்சத்திரங்கள் விழாவுக்குள் நுழையும்  போதே வாழ்த்துச் செய்தி வழங்குவார்கள். அவர்கள் பாதியில் கழன்று கொள்வார்கள். விழாவை வழி நடத்த தமிழ்நாட்டில் மூன்று பேர்தான் உண்டு. அப்துல் ஹமீது, விவேக், குஷ்பு. பக்கத்தில் ஒரு அழகான பெண் நிற்கவேண்டும். பேசவேண்டியதில்லை.

விழாவில் விருது பெறும் நடிகைகள் கட்டாயமாக ஒரு பாட்டுக்கு நடனம் ஆடவேண்டும். இதில் எதுவும் அவர்களுக்கு சிரமம் இல்லை. பத்து நிமிஷம் ஒத்திகைப் பார்த்தால் போதும். நடனத்தில் முக்கால் வாசியை  துணை நடனமணிகள் வேர்க்க விறுவிறுக்க ஆட இவர்கள் குறுக்கே நடந்து வந்து கையை காலை இரண்டு உதறல் உதறினால் போதும். தப்புகள் சைக்கடெலிக் விளக்குகளில் யாருக்குமே தெரியாது.

விருது அறிவுக்கும்போது ஆச்சரியப்பட்டது போல் நடிக்க வேண்டும். மேடையைத் தொட்டுக் கும்பிடலாம். அவர்களை மேடைக்கு அழைத்துச் செல்ல இரண்டு அழகான பெண்கள் வேண்டும். பெண்கள் அத்தனை பெரும் கட்டாயமாக தலைவிரித்துக்கொண்டு அவ்வப்போது தள்ளிவிட்டுக்  கொள்ளவேண்டும்.  ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். கைதட்டல் ஆரவாரம்  எல்லாம் பிற்பாடு டிஜிட்டலாக சேர்க்கப்படும் . கலந்துகொள்ளும் அனைவருக்கும் பஸ் சார்ஜிலிருந்து ஏரோப்ளேன் சாரஜ் வரைக்கும் சில்லரை உண்டு. மாணிக்சந்த் விழாவில் மட்டுமல்ல. கோலிவுட் பாலிவுட் சம்பந்தப்பட்ட அனைத்து விழாக்களிலும் தொன்றுதொட்டு அனுசரிக்கப்படும் பழக்கவழக்கங்கள் இவை.

இதன் ஒரிஜினல் ஆஸ்கர்  விருது வழங்கும் விழாவிலிருந்து வருகிறது. வாழ்க்கையின் வெறுமை அலுத்துப்போன மக்களுக்கு புதிய தாற்காலிக தெம்பு தேவைப்படும்போதேல்லாம் இம்மாதிரி விழாக்கள் தெம்பு தரும். இவை சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் என்று பரதேசம் போவதும் உண்டு.

யாராவது சமூகவியலாளர் சினிமா விருது விழாக்களில் "குழுக்குறிகள்"   என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதலாம். சைக்கலாஜிஸ்டுகள் "  Conditioned reflexes in Film Award Functions" என்று கட்டுரை எழுதலாம்.

எதை வேண்டுமென்றாலும் சுவையாக எழுதலாம் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:(

அருணா செல்வம் said...

T.M. 3

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சுஜாதாவின் கிளாசிக் கட்டுரை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

ராஜி said...

சூப்பர்

கும்மாச்சி said...

நன்றி ராஜி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.