Wednesday 7 August 2013

ட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை

தலைவா படத்தை திரையிட சென்னை, செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மறுக்க ட்விட்டரில் அவரவர் "அணில்" ரசிகர்களை உசுப்பேத்திக் கொண்டிருக்கிரார்கள்.

படம் திரையிட்டால் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைப்போம் என்று ஒரு புதிய புரட்சிப்படை அறிவிக்க, மாநில அரசோ போலிஸ் பாதுகாப்பெல்லாம் கிடையாது என்று சொல்ல படம் சொன்ன தேதிக்கு வெளியே வருமா வராதா என்று தெரியவில்லை.

இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் கீச்ச்சர்களுக்கு கொண்டாட்டம்தான். கழுவி ஊத்திவிடுவார்கள்.

இதோ அந்த கீச்சுகள்



ஒருநாள்,ஒரே ஒருநாள் விஜய் ரசிகரா இருந்து பாருங்க.அப்போ புரியும் அது ஒரு முள்படுக்கைன்னு! #அகலாது அணுகாது----------சகா 

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது - காவல்துறை கை விரிப்பு #படம் பாக்குறவங்களுக்கா?!--------மாயவரத்தான் 


கொஞ்சம் பணிந்து போனதும், காலில் விழுந்ததும் நிஜம் தான் அதற்காக எங்க தலைவாவை சொம்பை என்று நினைத்துவிடாதீர்கள்-------ராஜன் லீக்ஸ் 

தியேட்டர்ல வெடி குண்டு பிரச்னை கூடாதுன்னா, கேண்டின் ஏன்யா உருளை கிழங்கு போண்டா விக்கிறீங்க?-------------கட்டதொர 

தலைவாக்கு வெடிகுண்டெல்லாம் டூமச், சிந்து சமவெளிய ரீ ரிலீஸ் பண்ணாலே போதும், அணிலு தெறிச்சுடும்-------வசந்த் 



அவன் ஏன் பீச்சோரமா பின்னால கையக்கட்டிட்டு சாணிய மிதிச்சாமாதிரி நின்னானு இப்பத்தாம்லே தெரியுது! # அணில் தீர்க்க தரிசிகள்-------ராஜன் லீக்ஸ் 

நான் அண்ணா, எம்மவன் எம்ஜிஆர்" இதெல்லாம் பேசிட்டும் படம் ஒழுங்கா ரிலீசாவணும்னு ஆசைப்பட்டா எப்பிடி சார்?------------காக்கைச் சித்தர் 

ஆட்சியை புடிச்சு அடுத்தவங்களுக்கு அசால்டா கொடுத்துட்டு அயிட்டம் டான்ஸ் ஆடப்போன எங்க தளபதிக்கு தியேட்டர் இல்லையா----பிரம்மன்

அம்மா! வேணும்னா, அடுத்த படத்துல என் மவன தீவிர அதிமுக தொண்டனா நடிக்க வைக்கிறேன்! #எஸ்ஏசி சமாதான பேச்சுவார்த்தை------பாலு 

பைதிவே..நம்ம த்யேட்டர்க்கெல்லாம் பாம் ஜாஸ்தி..லஷ்மி வெடி , யாணை வெடியே போதும்..! பேஸ்மெண்டு அவ்ளொ ஸ்ட்ராங்கு!---------கட்டதொர
 

விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன் - பிரபு தேவா #சிட்டியே அல்லோலப்பட்டு கிடக்கு நீ கிரிவலம் நரிவலம்னு காமெடி பண்ணிட்டு இருக்க------தில்லுதொர

விஜய் ரசிகர்களோட கம்பார் பண்ணுறப்ப, ராஜா ரசிகர்களெல்லாம் தெய்வம் மாதிரி. கெட்ட வார்த்தைலாம் யூஸ் பண்ணமாட்டாங்க---------மொக்கராசு 

தியேட்டர்ல பாம் மிரட்டலாம். எவனோ வீக் என்ட்ல குருவி படம் பாத்து கடுப்பாகியிருப்பான் போல :)--------வெண்பூ வெங்கட் 

தலைவாரி பூச்சூடினு டைட்டில மாத்து! வெள்ள சட்டைய கழட்டீட்டு துண்டக்கட்டு! அப்பறம் ரிலீஸ் பண்ணிக்க # உத்தரவு---------ராஜன் லீக்ஸ் 

கமல் டூ விஜய் - விஸ்வரூபம் 2 க்கு நான் ஐடியா பண்ணி வெச்சிருந்த மார்க்கெட்டிங்க் டெக்னிக்.நீங்க பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டா எப்டி ?----------சி.பி.செந்தில்குமார் 

இது அரசியல் படமே இல்லைங்கண்ணா. அரசியல்னா திருனெல்வேலி தூத்துகுடி பக்கம் இருக்குங்கண்ணா..-------------ஒலைக்கண்ணன் 

விஸ்வரூபம் பிரச்சனைல கமல் சொன்ன மாதிரி இப்ப விஜய் சொன்னா, "சந்தோஷமுடா சாமி,நீ அமேசான் காட்டுக்கே போயிடு"னு அனுப்பி வச்சிருவாங்க!--------பாலு 

ஒரு இமேஜ் உண்டாக்கி அதை கொண்டு அரியாசனம் கண்டவர் எம்ஜிஆர், பொன்/பொருள் போதும் என்றவர் ரஜினி,  ரெண்டும் (கேட்ட) கெட்டவர் விஜேய்----தாய் மனம்

தலைவா படப்பெட்டி தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டலா?! # இந்த வேலைய செஞ்சவன் சுறா படம் மொத ஷோ பாத்தவனாத்தான் இருக்கும்------லாரிக்காரன் 

அப்பிடி என்ன தான் இருக்கிறது படத்தில்"என்கின்ற எதிர்பார்ப்பை 'தலைவா'எதிர்ப்புகள் கிளறிவிட்டிருக்கின்றன.விஸ்வரூபம் பார்ட் 2 இது!-----------மைந்தன் சிவா 

போற பக்கமெல்லாம் குழி வெட்றாய்ங்கன்றத தான் தளபதி ஆல் இஸ் வெல்ன்னாரோ? ;-))------------பிரதீஷ் 

SAC - எனக்கு என்ன தோணுதுன்னா.., விஜய் - அம்மா.அவரை கம்முனு இருக்கச்சொல்லு.இல்ல . வேற ஜில்லாக்கு பார்சல் தான்------------ சி.பி.செந்தில்குமார் 

தலைவா படம் என் வாழ்க்கையை ஒத்திருப்பது மகிழ்ச்சின்னு மருத்துவரய்யா ஒரு அறிக்கைவிட்டாலும் ஃபனால்.----------போக்கிரி 

அம்மாவுக்கு தெரியும்,விஜய்யை இப்போதே வெட்டினால் தான் உண்டு,ரஜனி அளவுக்கு வளர விட்டு வெட்ட நினைத்தால்,ஆட்சி மாற்றம் தான் என்று!---------- மைந்தன் சிவா

டேய், நல்லா யோசிச்சு சொல்லு உன் தலைவனுக்கு உருண்டையா ஒரு குண்டு தான் எடுத்தாய்ங்களா இல்ல ...?? அவ்வ்-------வசந்த் 

ஆன இந்த அணில் குஞ்சுகட்ட புடிச்ச விசயமே அவனுகளும் அணில ஓட்டுரோம்னு தெரியாமையே மரண ஓட்டு ஓட்ரதுதான்-------நத்திங் 

ஏம்பா குண்டுவைக்கும் பெருமக்களே,எக்ஸ்ட்ராவா வேணும்னா காசு தர்றோம்,எஸ்.ஏ.சிக்கு குண்டுவைக்க முடியுமான்னு சொல்றீங்களா?-விஜய் ரசிகர்கள்--------------- மைந்தன் சிவா

இப்பக்கூட ஒண்ணும் கெட்டுபோவல,விஜய் மட்டும் அந்த SACயோட சகவாசத்தை அத்துவுட்டார்ன்னா அடுத்த ஆஸ்கார் விஜய்க்குதான்!----------சகா 

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச ஒரு பய கூட கேட்க மாட்டான்-------லூசுப்பையன் 

லைட்டா மொறைச்சுகிட்டதுக்கே இந்தப்பாடுன்னா,கேப்டன் எல்லாம் எதுவும் படம் கிடம்ன்னு அண்டாவுக்குள்ள காலை விட்டா அம்புட்டுத்தேன்.----------ஆசான் 

விஸ்வரூபம் கூட ஒப்புவோர்களே விஜயை நாட்டை விட்டு போக போறேன்னு ஒரு அறிக்கை விட சொல்லுங்க பார்க்கலாம் விசா வாங்கிட்டு வந்து நிப்பானுக-------ஓலைக்கண்ணன்

இதுல நான் சி.எம் எல்லாம் ஆகல மேடம்......இது அரசியல் படமெல்லாம் இல்ல மேடம்......மேடம்,இது படமே இல்ல மேடம்.----------ஆசான் 

அதிமுக மகளிர் அணி தலைவர் பதவி கேட்டிருக்காப்டி.அதுக்கு இன்னும் கொஞ்சம் லூஸாகனும் போய்ட்டு வானுட்டாங்களாம். அந்த வெறியிலதான் தலைவா-----------பிரம்மன்

 
 

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

CS. Mohan Kumar said...

:)))))))))))))))

CS. Mohan Kumar said...

I have shared it FB & Google Plus ...

கும்மாச்சி said...

Thanks Mohan Kumar

saravanan said...

அனைத்து கீச்சர்களும் மிகவும் அருமை

சக்தி கல்வி மையம் said...

ஹா..ஹா.... சூப்பர் ..

கும்மாச்சி said...

சரவணன், கருண் வருகைக்கு நன்றி.

ssk said...

படத்தை ஹிட் பண்ண என்ன என்ன திட்டம் போட்டு கிளப்பி விடுகிறார்கள் ...எப்படியாவது கொளுத்த பணம் கொள்ளையடிக்க .....கண்ணை காட்டுகிறதே..

கும்மாச்சி said...

SSK வருகைக்கு நன்றி.

ராஜி said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே விஜய் அம்புட்டு நல்லவரா?!

indrayavanam.blogspot.com said...

எஸ்.எஸ்.கே யின கருத்தை ஏற்கிறேன்...

”தளிர் சுரேஷ்” said...

என்னா கொலை வெறி!? நடக்கட்டும்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.