Thursday 1 August 2013

முகாமுக்கு அனுப்பிச்சாலும் யானை முட்டதான் செய்யும்..


 சொல்றாங்க!!!!!!!!!!!!!. அவுக சொன்னதும் நம்ம  மைன்ட் வாய்சும்............

தமிழர்கள் பகுதிகளில் குவிந்துள்ள ஒன்றரை லட்சம் சிங்கள வீரர்களை முதலில் விரட்டுங்கள் #கலைஞர் 

தலைவரே நீங்க இன்னும் அரசியலில் இருக்கீங்க புரியுது.  பாராளுமன்றத் தேர்தல் வேறே வருது அதுவும் புரியுது.

என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்க செய்யத்தயார்# கனகாவுக்கு சரத் உறுதி.

இதான் சான்சு அம்மாவுக்கு சொம்படிப்பதை நிறுத்த சொல்லி கனகாவவுட்டு கேக்கலாமா.அம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் #கேஜ்ரிவால் மகிழ்ச்சி

ஒட்டு கேட்கும்பொழுது தொண்டர்களை அப்படியே சின்னத்தை வச்சி தெருவையும் கூட்ட சொல்லுங்க ஊரு சுத்தமாகும்.அப்படியே வாக்காளருக்கு விலையில்லா துடைப்பம் கொடுத்து சீப்பா முடிச்சிடலாம்.

பாம்புக்கு பாலை வார்த்தாலும் நஞ்சை தான் கக்கும்# மத்திய அரசுமீது ஜெ. பாய்ச்சல் 

ஆமாம் மேடம் முகாமுக்கு அனுப்பிச்சாலும் குட்டி யானை முட்டதான் செய்யும்.

எல்லோரையும் வரவேற்க நான் என்ன  டவாலியா? # பிரதமரை வரவேற்பதில் ஜெ. காட்டம் 

நீங்க ஒவ்வொரு முறை கொட னாட்டிலிருந்து வரும்பொழுதும் காலிலே விழும் உங்க டம்மி டவாலிங்களை அனுப்புங்க போதும்.  

என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது, முதல்வர் பாதுகாப்பு தரவேண்டும்# மதுரை ஆதீனம்.

பெருசு நீவேற சும்மா இரு!!!!!!!!!!!ஏற்கனவே அவிக யானை முட்டி கலங்கியிருக்காக!!!!!!!!!!!

உலக அளவில் இந்தியா  நிற்க நன்றாகப் படியுங்கள் #மாணவர்களுக்கு இளைய தளபதி அறிவுரை 

ஏ...............ங்கனா............ இப்பவே இந்தியா நட்டுக்கிட்டுதானே நிக்குது.................

காவிரி ஆற்றை மையமாக வைத்து தமிழகத்தை வெட்டி இரண்டாகப் பிரிக்கலாம்.# காங்கிரஸ் உறுப்பினர் அன்பரசு யோசனை.

நல்ல ஐடியா..... வராத தண்ணிக்கு கர்நாடகாவோட மல்லு கட்டுறதா விட்டு நமக்குள்ளேயே அடிச்சிக்கலாம்

பா.ம.க.வை விட்டு ஏ.கே.மூர்த்தி அறிவாலயத்தில் தஞ்சம்.

ஏன் போயஸ் தோட்டம் பூட்டி இருந்துச்சா?  கூர்கா கொடனாடுக்கு திருப்பி விடலையா?

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

ராஜி said...

எல்லோரையும் வரவேற்க நான் என்ன டவாலியா? # பிரதமரை வரவேற்பதில் ஜெ. காட்டம்
>
ரைட்டு

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

மேட்டுர்அணையே நிரம்பி வழியிற அளவில் தண்ணீர் விட்டாலும் கர்நாடகத்தை குறை கூறுவதை விடமாட்டீங்க போல நகைச்சுவை அருமை

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

மேட்டுர்அணையே நிரம்பி வழியிற அளவில் தண்ணீர் விட்டாலும் கர்நாடகத்தை குறை கூறுவதை விடமாட்டீங்க போல நகைச்சுவை அருமை

Unknown said...

நக்கல் சூப்பர்

Anonymous said...

//மேட்டுர்அணையே நிரம்பி வழியிற அளவில் தண்ணீர் விட்டாலும் கர்நாடகத்தை குறை கூறுவதை விடமாட்டீங்க போல//

ஏதோ பெரிய மனது வைத்து கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டது போல கூறுகிறார்கள்....இப்ப அடைத்து வைத்து பாருங்க யார் வேண்டாம் என்று சொன்னர்கள்...
--------------------------------------
அருமையான நகைச்சுவை

அருணா செல்வம் said...

ரசித்தேன் கும்மாச்சி அண்ணா.

சக்தி கல்வி மையம் said...

நையாண்டி ...

indrayavanam.blogspot.com said...

அருமையான நகைச்சுவை

அன்பு துரை said...

செமயா இருக்கு பாஸ்...

ஒரு சந்தேகம்..!!? அது முன்னால் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியா..!!??

கும்மாச்சி said...

ஆமாம் ஏ.கே. மூர்த்தியே தான்

அன்பு துரை said...

பாஸ்.. விசாரிச்சதுல.. தவறான தகவல்னு சொல்றாங்க..

அது வேற மூர்த்தி..

தி.மு.க-விற்கு போனது திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.