Tuesday 20 August 2013

நாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்

கோவை கவுண்டன் பாளையம் சரவணா நகர் போலிஸ் ஸ்டேஷனில் வந்த விபரீத கம்ப்ளைன்ட் இது.

எப்படியெல்லாம் சண்டை போடுறாங்கப்பா..........


ஜாதி பிரச்சினை நாய் வரைக்கும் வந்திடுச்சு போல.

ஜாதி கட்சிகள் இதை கண்டுகொண்டார்களா தெரியவில்லை.

எடுராஅறிவாள!!!!!!!!!போட்டுத் தள்ளுடாஅந்த கீழ்சாதி நாய!!!!!!!!!!!!.
நா.பாளையம் : கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியது என்பதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் நாட்டு நாய் ஒன்றை வளர்க்கின்றனர். நேற்று கீழ் வீட்டுக்காரர் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். தங்கள் வீட்டு நாயும் மேல் வீட்டு நாட்டு நாயும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கம்பை எடுத்து நாட்டு நாயை சரமாரியாக அடித்தார். அது அலறும் சத்தம் கேட்டு, மேல் வீட்டில் இருந்த பெண் இறங்கி வந்தார். அவருக்கும் கீழ் வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘‘நான் வளர்ப்பது ஜாதி நாய். சாதாரணமாக சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். ஊர் மேயும் உன் நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்கிறதா?’’ என்று கத்தினார்.

அந்த பெண்ணும் விடவில்லை. ‘‘நாய்கள் அப்படிதான் இருக்கும். ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியதுதானே. வெளியே விட்டது உன் தப்பு. ஊசி இடம் கொடுக்காமல் நூலு நுழையுமா?’’ என்றார். ஒருமையில் பேசிக்கொண்டதால் மோதல் வலுத்தது. கூட்டம் கூட ஆரம்பித்தது. இருவரும் நாய்களுடன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்கு போட வேண்டும் என்று இவர் கூற.. நாட்டு நாயை தாக்கிய கீழ்வீட்டு ஆசாமி மீது தாக்குதல் வழக்கு போட வேண்டும் என்று அந்த பெண் கூற.. ஸ்டேஷனே பரபரப்பானது. இந்த வினோத வழக்கால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சமரச பேச்சு நடத்தியும் பலனில்லை. நாய் பிரச்னையை இதோடு விடப்போவதில்லை என்று புறப்பட்ட இரு தரப்பினரையும் இன்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=5337#sthash.il4l3EHQ.dpuf

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

மலரின் நினைவுகள் said...

அந்த நாட்டு நாய் கூலிங் க்ளாஸ், ஜீன்ஸ் எல்லாம் போட்டு காதல் நாடகம் செஞ்சிருக்கும்...
எப்படி இருந்தாலும் 21 வயசுக்கு முன்னால சேர்த்து வைக்கணும்னா பெற்றோர் சம்மதம் வேண்டும்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

K said...

ஹா ஹா செம காமெடி பாஸ்!

ஆமா ஃபேஸ்புக்குல நீங்க இருக்கீங்களா?? இருந்தா அட்ரெஸ்போடுங்க!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜீவன். மூஞ்சிபுத்தக லிங்க் மேலே உள்ளது.

Jayadev Das said...

வெளியில் விட்டா தப்பு தண்டா நடக்கும்னு தெரிஞ்சும், தங்கள் வீட்டு நாயை கண்டிச்சு வளர்க்காம வெளியில் திரிய விட்ட மேல்சாதி நாய்க்காரங்க மேல தான் தப்பு............

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

இந்த மேல்சாதி நாய்களே எப்படிதாங்கே தப்ப தான் பண்ணிட்டு கீழ்சாதி நாய்ங்கள் மேலே பழியை போட்டு தான் தப்பித்துக்கொள்ளும். என்னமோ போங்கள் நாட்டு நடப்பு சரியில்லை.

மகராசா

rajvel said...

செம காமெடி பாஸ்!

தி.தமிழ் இளங்கோ said...

நாட்டு நடப்பை அப்படியே காட்டுகிறது. “மலரின் நினைவுகள்” எழுதிய

//அந்த நாட்டு நாய் கூலிங் க்ளாஸ், ஜீன்ஸ் எல்லாம் போட்டு காதல் நாடகம் செஞ்சிருக்கும்...எப்படி இருந்தாலும் 21 வயசுக்கு முன்னால சேர்த்து வைக்கணும்னா பெற்றோர் சம்மதம் வேண்டும்... //

என்ற வரிகள் திரும்ப திரும்ப ரசிக்க வைத்தது. ஸ்டேசனில் நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி! ( பெரும்பாலான அபார்ட்மெண்டுகளில் நாய், பூனை வளர்க்க அனுமதி இல்லை என்பார்கள்)

நம்பள்கி said...

பெரிய இடமா இருக்கும்; அதான் போலீஸ் அவர்களுடன் பெசியிருக்குது; இதானால் தானே என்னவோ போலீஸ் வேலையை நாய்ப்புழைப்பு என்று சொல்கிறார்களே!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.