Friday 3 January 2014

கேஜ்ரிவால்ங்ணா.............நான் தலைவாங்ணா.......

டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய பின் ஆம் ஆத்மி கட்சியின் மௌசு கூடிப் போயுள்ளது. கட்சியில் பல பேர் விரும்பி இணைந்துள்ளதாகவும், கட்சிக்கு நிதி கோடி கோடியாக கொட்டுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கேஜ்ரிவாலும் தமிழ் நாட்டில் கட்சி தொடங்கி அதை நிர்வகிக்க ஒரு நல்ல  பிரபலமான ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறாராம். தமிழ்நாட்டில் அந்தக் கட்சிக்கு தலைமை வகிக்க நடிகர்களிடையே கடும் போட்டி நிலவுகிறதாம். தல, தளபதி, புரட்சித்தளபதி, புண்ணாக்கு தளபதி, லிட்டில் ஸ்டார், கட்டில் ஸ்டார்  என்று எல்லா நடிகர்களும் டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்திற்கு படையெடுக்கப் போகிறார்களாம்.

அப்படிப் படையெடுத்தால் எப்படி இருக்கும்.

முதலில் இளைய தலவலி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நுழைய எத்தனிக்கிறார். அவரை செக்யூரிட்டி தடுத்து நிறுத்த.

அண்ணா அண்ணா வுடுங்ணா..... கேஜ்ரிவால்ங்ணா.......... பார்க்கனுங்ணா.

அரே க்யா போல்தா ஹை..........

அண்ணா அண்ணா வுடுங்ணா.........

செக்யூரிட்டி அசந்து இருக்கும் பொழுது பூமிய பிளந்து கொண்டு நுழைந்து கேஜ்ரிவால் முன் ஆஜராகிறார்.

அண்ணா வணக்கமுங்ணா
சாங் ஒன்னு கேளுங்கணா
நான் ஒரளற ஓரளறங்ணா.................

கேஜ்ரிவால்: யோவ் இன்னாமென் உனுக்கு இன்னாவேணம்.

கேஜ்ரிவாளுங்ணா உங்க கட்சிக்கு தமிழ்நாட்டுல நான் தலைவர் ஆகிடுறேங்ணா, எங்க நைனா பொருளாளர்ங்ணா, எங்க அம்மா மகளிரணிங்ணா. போன முறை பிறந்த நாள் கொண்டாட விடாம அம்மா ஆப்படிசிடுச்சிங்ணா, அதுக்கு வாங்கின தையல் மெசின், லேப்டாப் எல்லாம் அப்படியே இருக்குதுங்ணா, அத அப்படியே கட்சிக்கு கொடுக்கறேங்ணா. ஹசாரே தாத்தாக்கு கூட என்ன தெரியுங்ணா. ஒரு தபா அவரு உண்ணா விரதம் இருக்க சொல்ல நான் வந்தீங்ணா.

அப்படி போடு
அசத்திப் போடு
கும்பிடு போடு..........

அண்ணா நான் அணில் போல இருப்பேங்ணா.

கேஜ்ரிவால்: சரி மேன் அப்படி ஓரமா போயி நில்லு.

அடுத்து தல உள்ள வராரு............நடக்கிறாரு நடக்கிறாரு நடக்கிறாரு.......அது.....

ஹாய் கேஜ்ரிவால் அது .............யாரு மேன் இங்க தல தலன்னு கூப்ட்து........நான் பேஸ் மாட்டேன்..............அது................நான் நடிகன்..........அது..........அர்ஸ்யல் தெர்யாது............என்ன மெரட்டறாங்க.........வரசொல்லி கட்டாயப்படுத்தறாங்க.............நான் பேஸ்மாட்டேன்..........அது........கீப் இட் சிம்பிள்...........அது..........

கேஜ்ரிவால்: இவன் யாருயா தல.........நம்பில்கியே.......தமில்.......நல்லா பேசுவான்........ஓரமா போயி நில்............

அடுத்து புரட்சி தளபதி, விரலு, வாலு என்று ஒரு பெரிய கூட்டமே உள்ளே நுழையுது...........

கேஜ்ரிவால்: அம்பேல் விடு ஜூட்......................


Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

நம்பள்கி said...

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்காலம்!
தமிழ்நாட்டில் இதற்கு நல்ல தலிவர் வடக்குபட்டி ராம்சாமி!
தமிழ்மணம் +1

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

ராஜி said...

ரசித்தேன்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

sury siva said...

கேஜ்ரிவால்

இலங்கை தமிழர் பற்றி என்ன சொல்கிறார்?




அப்படின்னு கரெக்டா தெரியாம யாருமே காலை விடமாட்டாக.

வைட்

சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Unknown said...

கேஜ்ரி'வால்' கட்சிக்கு காஜல் அகர்'வால் 'தான் பொருத்தம் !
+5

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

Unknown said...

//செக்யூரிட்டி அசந்து இருக்கும் பொழுது பூமிய பிளந்து கொண்டு நுழைந்து கேஜ்ரிவால் முன் ஆஜராகிறார்.//
ஹஹஹா...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... மகுடம் ஏத்தியாச்சு... ஏத்தியாச்சு...

கும்மாச்சி said...

அண்ணா வருகைக்கு நன்றி. மகுடம் ஏற்றியதற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.