Monday 11 August 2014

டீ வித் முனியம்மா----------பார்ட் 17

டேய் செல்வம் இன்னாடா கடிய தொறக்காம இங்க வந்து குந்திகிட்ட.....

அட போ, முனியம்மா நாட்டு நடப்பு ஒன்நியம் புரில, அல்லா வெலவாசியும்  ஏறிக்கினு கீது, இன்னாத்த கடைய தொறந்து இன்னாத்த வியாவாரம் செய்யுறது.........

அடே மீச செல்வத்துக்கு ரண்டு மசால்வடையும் டீயும் கொடுரா..........

டேய் வெலவாசிய பத்தி நீயேண்டா பெஜாராவுற வாங்குற ஜனம் தானே மெர்சலாவனும்..........

இன்னா முனியமா சட்டசபையில இன்னா நூசு.........

அது இன்னா பாய் வயக்கம்போல அம்மா பேசும் அவங்க அல்லக்கைங்க பெஞ்சு தட்டுவானுங்க........

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துல, தமியுநாடு அமைதிப்பூங்காவா கீதுன்னு அம்மா சொல்றாங்க, அல்லாம் பெஞ்சு தட்டுதுங்க.......

அத்த வுடு லிங்கம் சார், அதுக்குதான் கலீனறு அறிக்கை வுட்டுகிறாரே, நாட்டுல நடக்குற  கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு லிஸ்டு கொடுத்துகிராறு........

அஹான் தமியு பேப்பரு ஒன்னு விடாமா படிப்பாராங்காட்டியும்...........

இன்னா முனியம்மா சினிமாகாரனுங்க ராஜபக்ஷேவ எதித்து போராட்டம் பண்ணிகிரானுங்க........

அது வயக்கமா செய்யுறதுதான், அவனுகதான் அம்மாவ பத்தி காதல் கடிதமுன்னு கட்டுரை எழுதினத்துக்கு மன்னிப்பு கேட்டுட்டானுன்களே......அப்பாலிகா செத்த பாம்ப அடிச்சிகினு, நாங்களும் அம்மாவுக்கு சொம்படிப்போமுன்னு காடுரானுங்க.

சீமான புடிச்சிகிரானுங்க, பத்திரிகைக்கரனுங்க......இன்னாவோ லைக்கா மொபைலாமே அத்த ராஜபக்ஷே மச்சான்தான் வச்சிகிரானாம், அவன் தமியு நாட்டுல சினிமாகாரனுங்கள வச்சி படம் எடுக்குறானாம்.

டேய் லோகு அந்தாளு ஒரு காலி டப்பாசு.................சொம்மனான்காட்டியும் அவனுக்கு கொம்பு சீவி விடுறானுங்க.

ஸ்டாலினு வலது கைய தூக்கிட்டானுங்க...........

டேய் அது வயக்கமா நடக்குற குடும்ப கூத்துதான்...........அயகிரியகூட கச்சில சேக்கப்போறராமே.

ஆமாம் பாய், அதான் நமக்கு தெரியுமே, கண்ணு புளிச்சுது, காது அடைக்குதுன்னு அறிக்கை விடுவாரு பாரு.

பெங்களூரு கேசுல இன்னா நடக்குது...........

சசிகலா அம்மா வக்கீலு பேசிகினு கீறாரு..........அதுவே அம்மாவுக்கு கடன் கொடுத்துகீதாம்..........ஒன்னரை கோடி ரூவா வரைக்கும் துட்டு கொடுத்துகீதாம்.........

அதுக்கு எங்க அம்மாம் துட்டு கெடிச்சுது............

அது வெவசாயம் செஞ்சு கடன் கொடுத்துதான்...........நல்லா கொடுக்கிறாங்க டீடைலு......அது வீடியோ கடத்தானே நடத்திச்சின்னு சொன்னானுங்க.....

இன்னா முனியம்மா "அம்மா பிராட் பேன்ட்" வருதாமே......லிங்கம்.

இன்னாது அம்மா அல்லாருக்கும் "தொளபுளா" பேண்ட்டு கொடுக்குதா தமாசா கீதே.......

அடேய் செல்வம் அது பேண்ட்டு இல்லடா "பிராட் பேன்ட்", கம்பீட்டரு விஷயம்....அத்த வச்சி நீ "யு டூபுல" பலான படம் பாக்குலாம்.......இன்னடா நாட்டு நடப்பு தெரியாதவனா கீற...உனுக்கு சைக்கிளு டூபே தெரியாது...

அது சரி முனியம்மா நமக்கு இன்னா கம்பீட்டர பத்தி தெரியும்........

அடப்போடா பேமானி இப்போ எங்க பூ வியாவாரமே கப்பீட்டருல செய்யுரானுங்க......

முனியம்மா எபோலா காய்ச்சல் ன்னு சொல்றானுங்களே ........இன்ன மேட்டரு.

லிங்கம் சாரு, அது ஆப்பிரிக்காவுல இருக்குறவனுக்கு வருதாம்........வருசா வருஷம் புச்சு புச்சா அரசியல் கச்சிங்க மாதிரி வந்துகினே கீது........பறவை காய்ச்ச்சல்னாங்க, பன்னி காய்ச்ச்சல்னாங்க இப்போ எபோலாவாம்.........இன்னா காய்ச்சலோ.............

அயே பயமாகீதே முனியம்மா?

அடப்போடா பொயுதன்னிக்கும் சரக்கடிக்கிற உனுக்கு ஒன்னியும் ஆவாது செல்வம்........

சரி பேப்பர கொடு முனியம்மா இன்னா படம் போட்டுக்கிறான் பாக்கலாம்.....Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நன்றாக உள்ளது படங்கள் அட்டகாசம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

முனியம்மா பர்வால்ல நல்லாவே அலசிக்கீது....படமும் நல்லாத்தான் கீது வாத்தியாரே

'பரிவை' சே.குமார் said...

நல்ல அலசல்...
முனிம்மா கலக்குது போங்க...

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

முனியம்மா போடும் டீ சோடை போகவில்லை! பாராட்டுக்கள்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.