Monday 4 August 2014

கலக்கல் காக்டெயில்-152

சூரியன் மேற்கே உதித்து விட்டது.

இலங்கை பாதுகாப்பு இணைய தளத்தில்,  தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு மீனவர்கள் பிரச்சினை குறித்து எழுதும் கடிதங்களை விமர்சித்து "How meaningful are Jayalalitha's love letters to Modi" என்று தலைப்பிட்டு ஒரு தரக்குரைவான கட்டுரை வெளிவந்தது.

அதை எதிர்த்து தமிழ் நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களுமே கண்டனம் தெரிவித்தனர். இலங்கையின் இந்த தரக்குரைவான செயலை எதிர்த்து தி.மு.க தலைவர் முதலில் தன் கண்டனத்தை தெரிவித்தார். எல்லா கட்சித் தலைவர்களுமே இந்த விஷயத்தில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். தே.மு. தி. க மட்டும் இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதனை தொடர்ந்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரியது. தமிழகத்தில் முதன் முதலாக அனைத்துக் கட்சிகளும் இந்த  விஷயத்தில் ஒருமித்தக் கருத்தை தெரிவித்தன.

இந்த செயல் தமிழக மக்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. தமிழர்கள் வஞ்சிக்கப்படும் எல்லாப் பிரச்சினைகளிலுமே இது போன்ற ஒற்றுமை மனப்பான்மையைக் கடைப் பிடித்தால் தமிழகம் செழித்து விளங்குமே.

நட்வர் சிங்க் சுயசரிதை 

நட்வர் சிங்க் சுயசரிதை எழுதி இந்திரா காலத்து ரகசியங்களையும், ராஜீவின் இலங்கை சொதப்பல்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். மேலும் சோனியா ஏன் பிரதமராகவில்லை என்று கூறியதன் மூலம் சோனியாவையும் சுயசரிதை எழுத தூண்டியிருக்கிறார். அந்தம்மா நானும் எழுதுவேன் என்று சொல்லியிருக்குது.

இதெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லவில்லை? என்ற நம் கேள்வி அர்த்தமற்றது. இவர்களெல்லாம் இப்படித்தான், ஆடி அடங்கும் பொழுது சுயசரிதை எழுதி தாங்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்துவார்கள்.

ராஜீவின் இலங்கைக் கொள்கை இவர் எழுதிதான் நமக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அப்பொழுது ராஜீவும் கூட இருந்த அவரது செயலர்களும் இலங்கை விஷயத்தில் எப்படி சொதப்பினார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

இன்னும் வேறு யாராவது காகிரசில் சுயசரிதை எழுதி சாக்கடையைக் கிளறி நாறடிக்க இருந்தால் இப்பவே செய்யுங்கப்பு..............எங்களுக்கும் போரடிக்குதில்ல.

நகைச்சுவை 



ரசித்த கவிதை

களவாடிய பொழுதுகள் (STOLEN HEART)

களவு கொடுத்தலும், களவாடுதலும்
வாடிக்கை தான் நமக்கு !!

களவுப்பொருளை பதுக்கும் இயல்போடு
விழி விளிம்பில் ஒளித்துவைப்பாய்
அந்தமந்திரப்புன்னகையை
மனத்திரையில் தீட்டி
தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!

எத்தனையோ முறை
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!

நன்றி ------------------மைதிலி கஸ்தூரிரங்கன் 


ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

KILLERGEE Devakottai said...

இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான் நண்பா...
நகைச்சுவை குத்துக்கு ஒரு 10
கவிதை அருமை மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடையதா ?
ஜொள்ளு,,, ஜில்லு.

கும்மாச்சி said...

கிலலர்ஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

தமிழக அரசியல் வாதிகளின் ஒற்றுமை ஆச்சர்யமான ஒன்று! இது தொடருமாயின் தமிழகம் விடிவு பெறும்! கவிதை அருமை! நட்வர்சிங் காமெடி ஜூப்பரு!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Avargal Unmaigal said...

விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஆமாம் என்ன படம் செலக்ட் செய்து இருக்கிறீர்கள். உங்கள் தளத்திற்கு என்னை போல கல்யாணம் ஆன ஆண்கள் வருகிறார்கள். இந்த மாதிரி அழகான தொப்பை உள்ளவர்களைதான் தினமும் பார்த்து வருகிறோம். அதனால அடுத்த தடவை படம் போடும் போது தொப்பை இல்லாத அழகிகளை போடுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என எச்சரிக்கிறேன்

கும்மாச்சி said...

தொப்பை இல்லாத அழகிகள் வேணுமா, ரொம்ப குஷ்டமப்பா..........

வெங்கட் நாகராஜ் said...

அதிசயமாக இந்த விஷயத்தில் ஒற்றுமை காட்டி இருக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.....

புத்தகம் - எல்லோரும் எழுதிவிட்டால் நல்லது! :)

ஜோக் - ரசித்தேன்.

கும்மாச்சி said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

வழக்கம் போல கலக்கல்ஸ் ! ஜோக் ரொம்பவே ரசித்தோம்!

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஐயா.

மகிழ்நிறை said...

ஒ! சாரி சகா:( இந்த வாரம் முழுக்க பிஸியா இருந்ததால பல பதிவுகள் படிக்க தாமதம் ஆகிவிட்டது:) சூப்பர் சூப்பர் மேட்டரா இருக்கேன்னு படிச்சுட்டே வந்தா நம்ம கவிதை!! thanks சகா!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.