Thursday 15 October 2015

பிரபலங்கள் வீட்டில் கொலு.


இது கொலு சீசன். நமது தெருவில் உள்ள அணைத்து வீட்டு கொலுவையும் ரசித்து அட்ட  பிகர் முதல் அல்வா பிகர் வரை பார்ப்பது ஒவ்வொரு வருடமும் நடக்கிற விஷயம். இந்த வருடம் மாற்றம் முன்னேற்றம் வேண்டி பிரபலங்கள் வீட்டு கொலுவிற்கு செல்லலாம்.....

முதலில் கோயஸ் தோட்டம்.

"வசி" என்ன பொம்மையெல்லாம் அடுக்கிட்டீங்களா அதென்ன மேல்தட்டுல எல்லா பொம்மையும் படுக்க வச்சிருக்கீங்க......

இல்லக்கா அது வந்து நம்ம அமைச்சருங்க பொம்மைதான், எப்பவுமே அப்படித்தான்.....நிக்கும்போதே அப்படிதான் இருக்கும். முதலில் அக்கா நம்ம கெ.பி.எஸ், பாருங்க காரு டயருல தலைய வச்சு கும்புடுறா மாதிரியே இருக்கு. அப்புறம் பக்கத்துல "வத்தம்" கரண்டு கம்பிய பிடிச்சு கரண்ட்டு டெஸ்டு பண்றா மாதிரி, இப்போ இந்த பொம்மைதான் நல்லா விக்குதாம்.

பக்கத்துல யாருடி சாமி

நம்ம நாலும் மூனும் எட்டு சாமி "கைம்மாறாசாமி".......

சரி வசி சுண்டலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க..........

உங்களுக்கு ராசியா ஒன்பது வகை சுண்டல் வச்சிருக்கோம்..........கேடி வரேன்னு சொல்லியிருக்காரு அதான்.

சரி பெல் அடிக்குது யாருன்னு பாரு.

அக்கா நம்ம அமைச்சருங்கதான், காவடி எடுத்து உருண்டுகினே வந்திருக்காங்க.

அப்படியா அப்ப கதவ தெறக்காத, அவங்க எல்லோரையும் நாளைக்கு கொலு சொடநாடுல, அங்கே வந்தா பார்க்கலாமுன்னு சொல்லு.

சரிக்கா........

என்ன போய்விட்டார்களா?

இல்லக்கா ஒரே ஒரு பாட்டு வாசலோடு பாடிவிட்டு சுண்டலை தூக்கி எறிந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களாம்?

சட்டசபையில் பாடும் பாட்டையே பாட சொல்லு............

அம்மா அம்மா அம்மா 
மாண்புமிகு அம்மா
மற்றவர்கள் சும்மா
இதய தெய்வம் அம்மா
புரட்சி தெய்வம் அம்மா
புண்ணியவதியே அம்மா 
விலையில்லாத அம்மா 
விடியல் தெய்வம் அம்மா 
நிரந்தர முதல்வர் அம்மா 
நிக்க முடியல அம்மா 

வசி அது யாரு சுருதில சேராம பாடுறது சொல்லு தூக்கிடலாம்.....

அக்கா யாருமே சுருதில சேரல.....

சோபாலபுரத்தில் கொலு

கழக கண்மணிகளே கொலு திராவிட விழா அல்ல வந்தேறிகள் ஆரியனால் கொண்டு வரப்பட்ட மாயை இருந்தும் இந்த ஊழல் ஆட்சி ஒழியட்டும் விடியட்டும் என்ற நோக்கிலே கண்மணிகளால் கொண்டாடப்படும் விழாவினை தலைமை தாங்கி "மாற்றான் வீட்டு சுண்டலும் ருசிக்கும்" என்ற "கண்ணா" வார்த்தைக்கிணங்க இந்த முறை தம்பி "ஸ்காலின்" கழகத்தின்மேலும் நாட்டு மக்களின்மேலும் கொண்ட அக்கறையை மேன்மை படுத்தவும், மனைவி மற்றும் துணைவியின் அன்புக்கினங்கியும், மற்றும் எனது அருமை மகள் "தனிவொழி" நாட்டிற்கும் மற்றும் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் 2ஜி செழித்தோங்க அயராது உழைப்பதாலும், இந்த முறை சோபாலபுரத்திலலே  கொலு விழாவிற்கு உங்களை மூத்த தமிழன் என்ற முறையில் உவகை பொங்க அழைக்கிறேன்.

தம்பி பாலு அந்த மேல்தட்டில் "செறியார்", "கண்ணா" பொம்மை வைத்துள்ளாயே அதை அங்கே வை.

எங்கே தலீவரே?

அதோ அந்த சட்டி அருகில்.

தலைவரே அது சட்டி இல்லை குப்பைதொட்டி.

அங்குதான் வை.

அப்போ எல்லாதட்டிலும் என்ன பொம்மை வைக்கிறது தலைவரே.

கழகம் செழிக்க பாடுபட்டவர்களின் பொம்மையை  வை.

சரி தலீவரே புரிஞ்சிடுச்சி. முதலில் "சஞ்சா கஞ்சனா"? இல்லை தொளபதியா?

உனக்குத் தெரியாது? சரி "பொறைசருகனை" அழைத்துவா?

தலீவரே "புஷ்கு" கொலுவிற்கு வராங்களாம்.........

திராவிடம் செழிக்க வந்த புஷ்கு நமது கழகம்விட்டு சென்றாலும் நம் மீது கொண்ட அன்பிற்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க கழகக்கண்மணிகளை கல்லெடுத்து வரச்சொல்.

அதற்குள் மகளிரணி சோபாலபுரத்தில் நுழைந்து பாடுகிறார்கள்.

ஈழம் வேண்டி இரண்டு மணி உணவு துறந்த தலைவா போற்றி 
குடும்பம் செழிக்க  கொள்கை துறந்த தலைவா போற்றி 
செந்தமிழ் செழிக்க ஐநூறு கோடி மாநாடு தந்த தலைவா போற்றி  
ஊழல் ஒழிக்க 2ஜி தர்மம் வெல்ல வந்த தலைவா போற்றி 

கைலாபுரம், டேப்டன் கொலு விவரம் அடுத்து...........


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

சென்னை பித்தன் said...

ஒவ்வொரு கொலுவாப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான்.கொஞ்சம் சுண்டலுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க!

கும்மாச்சி said...

சுண்டலுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் சார், வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் கொலு!

'பரிவை' சே.குமார் said...

கொலுவை ரசித்ததுடன் சிரிக்கவும் வைத்தது பகிர்வு....
நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.