Monday 21 December 2015

பீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்

ஊடங்களில் எதை திறந்தாலும் சொம்பு, ஓமகுச்சி, என்று ஆளாளுக்கு பேட்டி, டாக்(நாய் அல்ல)  ஷோ என்று கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளமும் மற்றும் ஏரியை சரியான நேரத்தில் திறக்காமல் தூங்கிய பாட்டியும் இப்பொழுது பின்னுக்கு தள்ளப்பட்டு இந்த பீப்.......பு...கு(புண்ணாக்கு) பாட்டு அதை தொடர்ந்த தமிழர்களுக்காக முட்டி போட்டு ஆடிய சொம்புவின் அறிவு சார்ந்த பேட்டி என்று புளிப்பூத்துகிறார்கள்.

சரி நம்ம இசைஞானி கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுறார். பொது இடமுன்னு வந்தா நாலு பேரு நாலு கேள்வி கேட்கத்தான் செய்வான், அதை எப்படி சாதுரியமாக பதில் சொல்லி கேள்வி கேட்டவனுக்கு பல்பு கொடுக்கனும்முன்னு தெரிசிருக்கணும். அதை விட்டு "உனக்கு அறிவு இருக்கானு?" கேட்டா இருக்கு அதால தான் சார் உங்களிடம் கேள்விகேட்டேனு பல்பு வாங்கக்கூடாது. அதோட போனாலும் பரவாயில்லை உனக்கு அறிவிருக்குன்னு எந்த அறிவை வச்சி சொல்றேன்னு இவரு கேட்க போயி நல்ல காலம் அந்த நிருபர் பதில் சொல்லவில்லை அதற்குள் அவரது ஆதரவாளர்கள் தடுத்து விட்டார்கள். இல்லையென்றால் இசைஞானியின் அறிவு அம்பேல் ஆயிருக்கும். இசைஞானி முதலிலேயே பீப்  கேள்விக்கு "No Comments" என்று சொல்லியிருந்தால் பிரச்சினையே இல்லை.

குறுக்கால பாட்டி செம்பரம்பாக்கம் எரிய சரியான நேரத்தில் தொறக்காம தூங்கிட்டு இப்போ வாட்சப்பில் வந்து புலம்பிகிட்டு இருக்கு. இருக்கட்டும் பாட்டி நீங்க பொலம்புங்க, ஆனா மக்களுக்காகதான் வாழுறேன் எனக்கு யாருமே இல்லேன்னு போட்டீங்களே ஒரு போடு ஆயா, கவுண்டமணி,செந்தில் வடிவேலு எல்லோரையும் ஒரே பேச்சுல அப்பீட் ஆக்கிட்டீங்க.  நடுவில் கட்டுமரம் அவர் பாட்டிற்கு குறுக்கு சால் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏம்பா நாட்டுல இன்னும் என்ன என்னவோ நடந்து கொண்டிருக்கிறது அதையும் கொஞ்சம் கவனிங்க. பதினெட்டு வயசுக்குள்ள இருக்கற பசங்க "ரேப்"பினா ஒரு தையல் இயந்திரமும் பத்தாயிரம் ஓ...வா பரிசாம். நம்ம சட்டமே சொல்லுது. அப்படி அதை எதிர்த்து யாரவாது குரல் கொடுத்தா பிடிச்சு உள்ளே போடுவாங்களாம். இதையும் நம்ம ஊடங்கள் கொஞ்சம் கவனிக்கலாம்.





Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

செம கலாய்ப்பு நண்பரே அருமை
தமிழ் மணம் 1

syedabthayar721 said...

/// சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளமும் மற்றும் ஏரியை சரியான நேரத்தில் திறக்காமல் தூங்கிய பாட்டியும் இப்பொழுது பின்னுக்கு தள்ளப்பட்டு இந்த பீப்.......பு...கு(புண்ணாக்கு) பாட்டு /////


இது திட்டமிட்டு பெரிது படுத்தப்பட்டதொ என சந்தேகிறேன் . இதை தான் நம்பள்கி வலைதளத்தில் கமெண்டு போட்டேன் யாரு கேக்குறா ???


M.செய்யது
Dubai

ஸ்ரீராம். said...

மக்கள் குரலுக்கு மதிப்பேது?

நிஷா said...

ஹாஹா! உங்க பதிவுக்கு வந்து சிரிச்சிட்டு மட்டும் போக சொன்னதால் நோ கொமொண்ட்ஸ்! சிரித்து கொண்டே தான் சொன்னேன்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.