Thursday, 31 May 2018

வாழ்க்கையே போராட்டம்.......

ஜல்லிக்கட்டில் தொடங்கிய போராட்டம்
அம்மாவும், ஐய்யாவும் அடங்கியவுடன்
கடற்கரையில் மையம் கொண்டு
அவுனியாபுரம், அலங்காநல்லூர்
ஆதரவையும் அள்ளிக்கொண்டு
அடங்காத வன்முறையில்
அடக்கி வைக்க அடுத்த
போராட்டம் தொடங்காமல்
கூவத்தூர்  கூத்தாடிகள் கூத்தில்
கூண்டில் அடைக்கப்பட்டது.


அடுத்த காரணம் "காவிரி"
கைகொடுக்க இடையே
நிர்மலாதேவி, கவர்னர் என
ராஜ்பவன் பக்கம் கரை ஒதுங்க!!

அப்போது வந்த ஐபிஎல் சேப்பாக்கம்
என தமிழீன தலைவர்கள் கையில்
தடியடிபட்டு, அடுத்த கட்ட
நகர்வை எட்டியது போராட்டம்!!

இடையே வந்த சேகர்களும், ராஜாக்களும்
திசை திருப்ப, போராட்டம்
தூத்துக்குடி பக்கம் வலுப்பெற
நூறாவது நாள் கலவரத்தில்
அதகளமாக...................
அரசியல் அனல் அடங்கவேண்டாம்
அடுத்த கட்டமாக "சேலம் புறவழியில்"
மூட்டப்பட காத்திருக்கும் நேரங்களில்
இணயம், குளச்சல் என
போராட்ட ஜோதி கொழுந்துவிட்டு
எரியட்டும்!!
வாழ்க்கையே போர்க்களம்
போராட்டம் அதில் நிரந்தரம்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

KILLERGEE Devakottai said...

நடைமுறையை ஒப்புவித்த விதம் அருமை நண்பரே...

வருண் said...


Check this out!

https://youtu.be/UrXphxwtUZ0

இது மாதிரி போலிஸ தாக்கினால். துப்பாக்கி சூடு அமல்ப் படுத்தப் படும். தமிழ் நாடு சுடுகாடாகத்தான் செய்யும்.

ரஜினி இதை டிவிட்டரில் வெளீயிட்டால், என்ன பண்ணூவார்கள் இந்த வெண்ண மீடியாக்கள்??

ராஜி said...

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும். போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமோ?!

Yarlpavanan said...

வாழ்க்கை என்றால் போர்க்களம் தான்
வாழ்ந்து பார்த்தால் முடிவிலே சாவுதான்
அது வீட்டில தான் - நாட்டில
தூத்துக்குடியில நடந்ததோ கொடுமை ஐயா!

Anonymous said...

Ahaa, its pleasant conversation on the topic of
this article here at this blog, I have read all that, so now me also commenting at this place.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.