Saturday 11 August 2018

சமூக வலைத்தளங்களில் "உ.பீ "ஸ்

நீங்கள் வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் நிகழ்வுகளையும் கவனிப்பவர்கள் என்றால் சமீபத்தில் உ.பீஸ்களின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பதிவுகள் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் நடிகரை கிண்டலடித்து வரும் பதிவுகளாக இருக்கும். மேலும் அவரது வரவை கண்டு நடுங்கி அஞ்சுவதை பறையடித்து காட்டும்.


மற்றுமொரு கூட்டம் மறைந்த தலைவர்தான் தமிழை வளர்த்தார் அவரது மறைவுக்குப் பின் தமிழ் இனி விரைவில் சாகும் என்ற ரேஞ்சில் ஒரேயடியாக ஜல்லியடிப்பார்கள். அப்போ இந்த கம்பர், வள்ளுவர், அவ்வையார் என்ற சங்ககால புலவர்கள், மற்றும் தேவநேயப்பாவாணர், பாரதி, பாரதிதாசன், போன்ற இந்த கால தமிழ் தொண்டு ஆ ற்றியவர்கள்  எல்லாம் என்ன தமிழை வளர்க்காமல் வெட்டினார்களா? என்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரும். "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்கள்" என்ற எதுகை மோனை வகையறாவை சிலாகிக்கும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட  அறிவுஜீவிகள்.

மற்றுமொரு பிரிவினர். இவர்கள் நடுநிலைவாதிகள் என்ற போர்வையில் வருவார்கள். தங்களது கட்சியின் ஆட்கள் மீது உள்ள வழக்குகளை போலி வழக்கு என்று முதலில் ஆரம்பிப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் சென்று "நீதி வென்றது" என்று பினாத்துவார்கள், தோற்று குற்றவாளி என்று நிரூபணமானால் நீதியரசர்களின் ஜாதியை ஆராய்ந்து பீராய்ந்து தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே எதிர்க்கட்சி ஆட்களின் வழக்குகளோ அல்லது அவர்கள் எதிர்க்கும் ஜாதிகளின் வழக்குகளை பற்றி செய்தி வரும்பொழுதே இணையத்திலேயே வழக்கை நடத்தி "திருடன், கொலைகாரன்" என்று தீர்ப்பு எழுதி தண்டனையும் தந்து விடுவார்கள்.

மற்றுமொரு வகை,பெரியார் பகுத்தறிவு, அண்ணா கொள்கைகள் என்று சமூக நீதி காக்க வரும் கோமான்கள். இந்த வகை ரொம்ப ரசிக்கத்தக்கவை. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று வாய்கிழிய, மன்னிக்கவும்  வலைத்தளம் கிழிய பதிவிட்டு பெருமாள் கோவில் மணி அடித்தவுடன் "உண்டகட்டிக்கி" முதலில் கை  நீட்டுவார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் பகுத்தறிவை வாசலியேயே நிற்க வைத்து எச்சிலை பொறுக்க விடுவார்கள். இதில் பெரும்பாலான வகை "நூல் பொறுக்கிகள்" என்று புலம்பி இணையத்தில் பதிவிட்டு சுய இன்பம் அடையும் நச்சுக்கூட்டம். இவர்கள் பெரியார் கொள்கைகளு ம் தெரியாது, அண்ணாவின் கொள்கைகளும் தெரியாது. "தொம்பிகளுக்கு" சவால் விடும் வெற்றுக்கூட்டம்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக்கு, குவாட்டர், பிரியாணிக்கு பாக்ஸிங், தலைவர்களுக்கு அடிவருடி தெருவில் நிற்பது, அப்பாவிகளை உயிரோடு எரிப்பது, அடிதடி மேலும் முக்கியமாக அருமை தமிழில் உள்ள அத்துணை கெட்டவார்த்தைகளையும் புதுப்புது பொலிவோடு இணையத்தில் பரப்பி பேரானந்தம் அடையும் பெரியோர்கள் சான்றோர்கள்.

நீங்க இப்படியே இருங்க, அப்பொழுதுதான் உங்க தலைவர்கள் உங்களை உபயோகித்து அவர்களது வியாபாரத்தை பெருக்கமுடியும்.



Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலவற்றை அறியாமலே இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது...

நன்று புன்னகை_GOOD SMILE said...

சரியான விளாசல். ஆனால் இந்த "உ.பீ "ஸ் என்றால் என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்.

Anonymous said...

@நன்று_GOOD
உ பீஸ் என்றால் உடன் பிறப்புகள்
அதாவது திமுக அல்லக்கைகள்

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.... தொடருங்கள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.