Thursday 23 August 2018

கவிஞராவது எப்படி?

எல்லோருக்குமே கவிஞராக வேண்டும் என்ற ஆசை உள்மனதில் இருக்கும்? ஆனால்  ஒரு தயக்கமும் கூடவே இருக்கும். மேலும் அதை எழுதி பதிவிட்டால் யார் எப்படி எந்த திசையிலிருந்து வந்து துப்புவார்கள் என்ற பயமும் அடிவயிற்றை கவ்வும். பிரச்சினை இல்லை. அதையெல்லாம் களைந்து உங்களை ஒரு பிரபல கவிஞர் ஆக்குவதற்காகவே இந்த விசேஷ பதிவு.

சரி தயாரா?

முதலில் நாம் எந்த மாதிரி கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்த மரபு கவிதை, ஆம் அதே தான் அந்த பக்கம் தலை வைத்துக் கூட படுக்காதீர்கள். ஏன்னென்றால் அதற்கு மிகவும் தமிழ் இலக்கணம் அறிந்திருக்க வேண்டும். அதில் சீர் என்பார்கள், வெண்பா(நடிகை அல்ல) கலிப்பா, ஆசிரியப்பா, கொச்சகக்கலிப்பா (கொச்சச்சன் அல்ல), அறுசீர் விருத்தம் என்று ஆயிரம் வகை வைத்து அதற்கு இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, என்று ஏதேதோ சொல்வார்கள். அதெல்லாம் நமக்கு வேலைக்கு ஆகாது. நமக்கு குளித்தலைக்கு அப்பால் தெரியாது எதற்கு வம்பு.

அப்புறம் ஹைக்கூ, லிமெரிக் என்று  சில சற்றே எளிய வகைகள் உண்டு. முயற்சிக்கலாம். ஆனால் "L" போர்டு கவிஞர்களுக்கு சாலச்சிறந்தது புதுக்கவிதையே, என்று பட்டிமன்றத் தலைப்புப்போல வைத்துக்கொள்வோம்.

இந்த வகை மிகவும் எளிது.

திருச்செந்தூர் வேங்கட சுப்பன் கடலை மிட்டாய் திருடித்தின்றான். இதான் மேட்டர்.

இதைப் பின் வருமாறு எழுதினால் புதுக்கவிதை.

திருச்செந்தூர்
வேங்கட சுப்பன்
கடலை
மிட்டாய்
திருடித்தின்றான்.

சரி என்ன தலைப்பு எதைப்பற்றி எழுதலாம்? இந்த காதல், கத்திரிக்கா, இயற்கை வர்ணனை இதெல்லாம் போனியாகாது. அரசியல், பகுத்தறிவு, இந்த மாதிரி வைத்து எழுதினால் நல்ல மௌசு. ஆனால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். ஆனால் யாரைப்பற்றி எழுதுகிறீர்கள், ஜாதி,மத ஒழிப்பு என்றால் யாரை தாக்கணும் இல்லை யாரை தூக்கணும் என்று கொஞ்சம் பொது அறிவு அவசியம். நீங்கள் வெட்டுக்குத்து, இந்த கையெறிகுண்டு இதற்கெல்லாம் அஞ்சவில்லை என்றால் பாதகம் இல்லை, என்ன  வேணாலும் எழுதலாம். எதற்கு வம்பு நீங்க என்ன தாக்கி எழுதினாலும்  எருமை மாட்டு மேல மழை பெய்தாமாதிரி ரொம்ப நல்ல கூட்டம் ஒன்று இருக்கு, என்ன அடித்தாலும் தாங்கிக்கொள்ளும், அதுங்கள தாக்கியோ இல்லை உசுப்பியோ எழுதுங்க. சும்மா கொஞ்ச நேரம் குரைத்துவிட்டு ஓய்ஞ்சிடுவாங்க. இனி செய்முறைக்கு போவோம்.

கவிதையில் அங்கங்கு பகுத்தறிவு, திராவிடம், மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட கருத்துக்களை மசாலா போல தூவணும். (ஆச்சி, சக்தி, என்று எந்த மசாலா என்பதை நீங்கதான் முடிவு செய்யணும்).

சரி அடுத்து வார்த்தைகள் தேர்வு மிக முக்கியம்.

காவி, பாவி, சீவி, என்று எகன,மொகனை வார்த்தைகள் ஒரு ஐம்பதை தேத்திக்க வேண்டும்.

இதற்கு தமிழ் மொழியில் நிறைய இருக்கிறது.

ஆத்தா, பார்த்தா, சேர்த்தா, வாத்தா
பாடு, ஓடு, தேடு, போடு
தடாய் , கடாய், விடாய்
கயிறு, வயிறு, மயிரு
ஜாதி, பீதி, பேதி
வாடி, போடி, பீடி,
தடி, அடி, கடி வெடி, மடி
செடி,பிடி
என்ன, வெண்ண, நொண்ண
 இது போல இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் தேத்திக்கணும்.
இந்த மாதிரி படங்களுடன் போட்டால் கவிதைக்கு அழகு சேர்க்கும்
இப்ப நீங்க கவிஞராகலாம்.

இத வெச்சி நீங்க கவிதையில் யாரை வேண்டுமென்றாலும் வேணாம் அவங்கள??? மட்டும் வச்சி செய்யலாம்.

இப்போ பதிவிடுங்கள் நீங்கள் அரை கவிஞர் ஆகிட்டீங்க. சொந்த பேரில் எழுதக்கூடாது. புனை பெயரில் எழுதவேண்டும். மறந்தும் உங்கள் பெயரில் ஜாதி மத சம்பந்தம் இருக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்,  ஏனென்றால் பிற்பாடு இது மிகவும் உதவும்.

ஆனால் வேலை இத்துடன் முடியவில்லை.

இதுக்கு உடனே எதிர் வினையாக நாலுபேரு வந்து பதிவிலேயும், முகநூலிலும் இல்லை தொலைபேசியிலும் வான்டடாக வந்து துப்புவான். ஆஹா வெட்டிடுவேன், தூக்கிடுவேன் என்று குரைப்பான். இப்போ கொஞ்சம் கைகாலெல்லாம் நடுங்கும் பயம் வேண்டாம். இப்போதான் முக்கிய வேலை ஒன்று பாக்கி உள்ளது.

உடனே நீங்க காவல்துறைக்கு முறையிடனும், அங்க இந்த கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாது.

அங்கே உரைநடைதான் செல்லுபடியாகவும். அதற்கும் சில வரைமுறைகள் உண்டு.

முதலில் உங்களது பெயரை முழுமையாக எழுதவேண்டும். அதில் ஜாதி மத விவரங்களை கோடிட்டு இதனால் தான் ஏன் மீது துப்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும்.

பின்னர் எனக்கு ஒரு கண்ணில் புரை, ஒரு காது மந்தம், ஆறுவிரல், மூலம், காலில் ஆணி, போன்ற அங்க விவரங்களையம் உபாதைகளையும்  குறிப்பிடவேண்டும். அப்போதான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டு சே பாவம்யா!! இந்த ஆளு என்ற கருணை உணர்ச்சி துப்பினவனுக்கும் பிறக்கும்.

என்ன சரியா இப்போ நீங்க ஒரு பிரபல கவிஞர் ஆகிட்டீங்க. சும்மா கலக்குங்க.


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ராஜி said...

தொழில் ரகசியம் இம்புட்டுதானா?! ரைட்டு

Anonymous said...

புனை பெயரில் ஒரு புதுமை இருக்க வேண்டும்
எடுத்து காட்டு
கரடி புத்திரன் என்று பெயர் வைச்சா அதிரடியாக இருக்கும்

ncert student said...

kALAKITINGE

ஸ்ரீராம். said...

கடலை
மிட்டாய்
திருடித்தின்றான்.
திருச்செந்தூர்
வேங்கட சுப்பன்

என்று எழுதினால் இன்னும் கொஞ்சம் கவிதையை நெருங்கலாம்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.